ஆன்மீகத் தளம்

17 லட்சம் மதிப்பிலான
பேட்டரி பேருந்தை பழனி கோவில் நிர்வாகத்திடம்  வழங்கிய புதுச்சேரியை சேர்ந்த முருகனின் தீவிர பக்தர் !



திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்க உள்ள நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு ஞாயிற்று கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


மலை படிப்பாதை,யானை பாதை வழியாக மலைக் கோவிலுக்கு சென்றும் , மின் இழுவை ரயில் , ரோப் கார் என மூன்று மணி நேரம் காத்திருந்து மலைக் கோவிலுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு

ஏராளமான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து முருக பெருமானுக்கு அபிசேகம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும்

புதுச்சேரியை சேர்ந்த முருகனின் தீவிர பக்தர் வேல் முருகன் என்பவர் 17 லட்சம் மதிப்பிலான

23 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரி  பேருந்தை பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய  கோவில்  நிர்வாகத்திற்கு உபயமாக வழங்கியுள்ளதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நன்றி கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button