காவல் செய்திகள்

2008 திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதவிஉயர்வுக்கு உத்தரவிடுவாரா!??

தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் இருக்கும்போது பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 

ஆனால், 2011ஆம் ஆண்டு ஆயுதப்படை உள்ளிட்ட பிரிவுகளில் எஸ்.ஐக்களாக பணியில் சேர்ந்த பலர், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களுக்கு முன்னதாக காவல்துறையில் சேர்ந்த 2008ஆம் ஆண்டு பேட்ஜ் எஸ்.ஐக்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படாதது அவர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 2008-ல் நடத்தப்பட்ட760 உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது.

அந்தத் தேர்வு முடிவில் நேரடி நியமனமாக சுமார் 760 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு
10 ஆண்டுகள் பணி முடிவடைந்த நிலையில் தற்போது வரை காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக 2008இல் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த சிலர் கூறுகையில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் சிறப்பு உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ,டிஎஸ்பி பணியிடங்களுக்கு பெரும்பாலும் நிர்ணயித்த காலத்தில் பதவி உயர்வு கிடைக்கிறது .

உதவி ஆய்வாளர் தேர்வில் கிரேட் ஒன்று இரண்டு மூன்று என்று பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் கிரேட் ஒன்று காவல் உதவி ஆய்வாளர்களுக்கு காவல் நிலையங்களுக்கு பணியமர்த்தி பத்தாண்டுகள் முடிந்தவுடன் காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் கிரேட் 2.3 என்று அழைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் கிரேட் ஒன்று என்று அழைக்கப்படவேண்டும் என்றும் அவர்களுக்கும் 10 ஆண்டுகளில் முடிந்தவுடன் காவல் ஆய்வாளர் பணி உயர்வு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைவருக்கும் கிரேட் ஒன்று என்ற அடிப்படையில் காவல் நிலைய பணிக்கு அமர்த்த வேண்டும் அது போல பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின் தேர்வின்போது தேர்வான சுமார் 900 பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு அதற்கு உரிய காலத்தில் காவல்ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது .
அவர்கள் மகளிர் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 2008ல் எங்களது பேட்ஜில் 160 பேர் 160 பேர் சட்ட ஒழுங்கு பிரிவு 447 ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் துறைக்கும்உதவிஆய்வாளராக நியமிக்கப்பட்டோம்.
2016 முதல் நீதிமன்ற உத்தரவுப்படி 770 பேரும் உள்ளூர் காவல் நிலையங்களுக்கான உதவி ஆய்வாளர் என விதிமுறை மாற்றிய நிலையில் எங்களின் 35 பேருக்கு பதவி கிடைத்துள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு இதுவரை காவல் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை .
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி தென்காசி செங்கல்பட்டு உடுமலைப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15 பிரிவுகளுக்கு காவல் ஆய்வாளர்கள் பணி காலியாக உள்ளது.
தனிப்பிரிவு ,குற்றப்புலனாய்வு பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற பதிவேடு ,காவல் கட்டுப்பாட்டு அறை, மதுவிலக்கு ,நில அபகரிப்பு ,உணவு பொருள் கடத்தல் தடுப்பு ,சிபிசிஐடி ,பொருளாதாரக் குற்றம், சிறப்பு குற்றப்புலனாய்வு, சிஐடி ,மனித உரிமை மீறல் ,போதைப்பொருள் தடுப்பு, உள்ளிட்ட 15 பிரிவுக்கான ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான காலியிடங்களை நிரப்ப இதுவரை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை .
இதனால் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்களுக்கான காவல் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப காவல்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button