அரசியல்

2026 இல் 200 இடங்களில் வெற்றிகான வியூகம் வகுத்து பணிகளைத் தொடர திமுக தொண்டர்களுக்கு நிர்பந்தம்!

கோவை, வரதராஜபுரம் தனியார் கல்யாண மண்டபத்தில் திமுகவின் கோவை மாநகர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,மாநகர் செயலாளரும் ,முன்னாள் எம்எல்ஏ நா.காத்திக் தலைமையில் ,கோவை பாராளு மன்ற உறுப்பினர் கணபதிராஜ் குமார்,முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி,மேயர் ரெங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது, இதில் சிறப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளரும், திமுக இலக்கிய அணி தலைவரும்,தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரான ஐ.லியோனி கலந்து கொண்டு திமுக தலைவரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சியின் சாதனைகள்,நலத் திட்டங்களையும்,உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார் தொடர்ந்து கூட்டத்தில் திமுக மாநகர் சார்பில் ஏழு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்,  

  அதில் திமுக கழக தலைவராக பொறுப்பேற்ற பிறகு. 2019 , நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி. 2021 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி , 2024 தமிழ்நாடு, புதுவை மாநிலம் உள்ளிட்ட 40-40 நாடாளுமன்ற தொகுதிகளில், இமாலய வெற்றி.தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரான பின் பொன்னான திட்டங்களான , மகளிர் உரிமைத் தொகை திட்டம் ,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதுமைப்பெண் திட்டம்,மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்,பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி.முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், 1.1/2 லட்சம் விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் இணைப்பு.மக்களைத் தேடி மருத்துவம்,இன்னுயிர் காக்கும் 48 திட்டம், போன்ற நல்ல திட்டங்கள் தந்து தமிழகம் மக்களின் மனம் கவர்ந்தும்,பாராட்டியும், 

 இதே போல கோவை மாநகராட்சியில் ரூ.780 கோடி மதிப்பில் “பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தந்து தாகம் தீர்த்ததற்கும் 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கான வியூகம் வகுத்து பணிகள் செய்திட மக்களின் பேராதரவை பெறவும் தீர்மானம் நிறைவேற்றினர், மாநகரில் அனைத்து வட்டங்களிலும்,பகுதி , வட்ட கழக நிர்வாகிகள், BLA மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மகத்தான பணியாற்றி வெற்றி பெறுவோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.  தொடர்ந்து பேசிய ஐ.லியோனி , இந்த மூன்றாண்டு காலத்தில், 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

இதன் மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இதன்மூலம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது புதிய முதலீடுகள் மூலம் தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய இலக்கை விரைவாக அடைவோம் என்றார் 

, கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று, கோவை சிங்காநல்லூர் தொகுதி, ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், “சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்” அமைக்க ஒப்புதல் வழங்கினார்,கோவை மத்திய சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற முதற்கட்டமாக சுமார் 172.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

இதில், தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ், பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகள், அரிய நூல்கள், பல்லூடகம், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.

தொடர்ந்து மாநகர் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மொத்தம் 872 வாக்குச்சாவடிகள் உள்ளன.இதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய , 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உதவிட வேண்டும் என்றார் ,கூட்டத்தில் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது!

Related Articles

Back to top button