22 ஆண்டுகளுக்கு பின் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ்!
வரும் டிசம்பர் 8ஆம் தேதி கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுவதும் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ என்ற திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகவுள்ளது.
வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடல் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான ஆளவந்தான் என்ற பாடலின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதிய இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் அன்றைய தினம் கொண்டாடப்படவில்லை என்றாலும் தற்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.