காவல் செய்திகள்

240 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட பொறுப்பு டிஜிபி!

தமிழ்நாடு காவல்துறையில் நேரடி  உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்  நடத்துகிறது.
உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI) அரசுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற பிறகு  தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.ஐ.க்களுக்கு (உதவி ஆய்வாளர்)

காவலர் பயிற்சி கல்லூரியில் ஓர் ஆண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகி்ன்றன.


இந்தப் பயிற்சிகளில் சட்டங்கள், பணி விதிகள், மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் ஆகியவை அடங்கும். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
. இங்கு வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே பதவி உயர்வுக்கான பட்டியலில் எஸ்.ஐ-க்களின் பணி மூப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், காவலர் பயிற்சி கல்லூரியில் சில நேரங்களில் பாரபட்சமாக மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், எனவே, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி வைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் மதிப்பெண்களை பதவி உயர்வு பணிமூப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த மே மாதம் இறுதியில் உத்தரவிட்டது.


மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 1996 முதல் 2024-ம் ஆண்டு வரை நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பையும் இவ்வாறே பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழங்கப்படும் மதிப்பெண்களை மட்டுமே எஸ்.ஐ பதவி உயர்வுக்கான பணி மூப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என 2025 நவம்பர் இரண்டாவது வாரம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து
தமிழ்நாடு முழுவதும்
2011-ஆம் ஆண்டு நேரடியாக பயிற்சி பெற்ற
240 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட காவல் நிலையங்களில்
10 ஆண்டுகளுக்கும் மேல் காவல் உதவி ஆய்வாளர்களாகப்
பணியாற்றி வந்தவர்களுக்கு
நீண்ட கால அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில்    தமிழ்நாடு முழுவதும் உள்ள 240 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு


நவம்பர் 23 ஆம் தேதி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்  பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் சென்னை உட்பட தமிழ்நாட்டில் உள்ள  4 மண்டலங்களில் பிரித்து காவல்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஆய்வாளர்களாக உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.
இதன்மூலம் தமிழக காவல் துறையில் 34 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பதவி உயர்வில் எந்த குழப்பமும் இருக்காது என போலீஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Articles

Back to top button