33 மாதம் தமிழ் திரைப்பட உலகம் மிகவும் எதிர்பார்த்த நடிகர் சங்க தேர்தல் எண்ணிக்கை வெற்றி யாருக்கு!?விஷால் அணிக்கு வெற்றி வாய்ப்பு!! வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக பாக்கியராஜ் குற்றச்சாட்டு!
மூன்று மாதம் மட்டுமே பதவிக்காலம் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
பாண்டவர், சங்கரதாஸ் அணிகள் – வெற்றி யாருக்கு!
தமிழ் திரைப்பட உலகம் மிகவும் எதிர்பார்த்த நடிகர் சங்க தேர்தல்
23/06/2019 அன்று
2019 to 2022 வருடத்திற்கான
தேர்தல் நடந்து முடிந்து.
இதில்விஷால்& நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்
தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இரு அணிகளுக்கும் அதிக முரண்பாடுகள் இருந்து வந்தன.
அந்த நேரத்தில்
சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 61 பேர், தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்து மாவட்ட சங்க பதிவாளரிடமும் புகார் அளித்தனர். இதனை விசாரித்த சங்கப் பதிவாளர், அதிரடியாக தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து, விஷால் அணி நீதிமன்றத்தை நாடியது.
33 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதி மன்றம் உத்தரவை யடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் 29 பதவிகளில் (பாண்டவர்)விஷால் அணி முன்னிலையில் இருக்கிறார்கள். என்ற தகவல் வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதாகவும் வாக்கு வித்தியாச்தில் பாக்கியராஜ் அணியினினர் வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பாக்கியராஜ் அணியினர் தற்போது நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்றும் எது எப்படியோ யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் இந்தப் பதவி காலம் வரும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதாகவும் அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் அதுமட்டுமில்லாமல் யார் பதவிக்கு வந்தாலும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று கூறினார்கள்.
இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும்.
எது எப்படியோ எலும்புக் கூடுகள் போன்று காட்சி அளிக்கும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பார்களா என்றால் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது !?