25 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மின் மீட்டரை தீயிட்டு கொளுத்திய மின் வாரிய அதிகாரிகள்! பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு! உல்லாசமாக வளம் வரும் திருப்பூர் மின்வாரிய (AD/ AE )உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர்!
சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்ததை மறைக்க அதிகாரிகள்
மின் கட்டண மீட்டரை எரித்து சேதப்படுத்தி 18 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு மின்வாரியத்திற்கு 36 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது அம்பலமாகி உள்ளது!
திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் புரோக்கர்களை வைத்து நூதன முறையில் பல முறைகேடுகளை செய்து பல மோசடிகளை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டு மற்றும் பல புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் கொடுத்து வந்தனர்.
தற்போது
திருப்பூர் நகராட்சியில்
ஏ பி டி சாலையிலுள்ள டவுன் தெற்கு மின்வாரிய பிரவு அலுவலகத்தில் மெகா மோசடி ஒன்றை நடத்தி அரங்கேற்றியுள்ளனர்.
இந்த மெகா மோசடிக்கு அலுவலர்கள் ஊழியர்கள் சேர்ந்து அதிகாரிகளின் துணையுடன் நடத்தியுள்ளனர்.
இந்த மெகா மோசடி என்னவென்றால் மின் வாரிய சட்ட விதிகளுக்கு மாறாக சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மின் இணைப்பை பெரிய தொழிற்சாலைகளுக்கு வழங்கி உள்ளனர். அதாவது சிறு தொழிற்சாலைகளுக்கு 120 கிலோ வாட் (KV)மின்சாரம் வரை வழங்க அனுமதி உள்ளது.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 170 கிலோ வாட் மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும்.
அப்படி 170 கிலோ வாட் மின்சாரம் இணைப்பு வழங்கும் போது பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.அந்த தொழிற்சாலை தனியாக ட்ரான்ஸ்பாரம் அமைக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் அதிக மின் அழுத்த மின் கம்பங்களின் வழியாக மின்சாரம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் பல கோடி மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த இணைப்புக்கு குறைந்தது மாதம் 5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கு பல லட்ச ரூபாய் அபதாரம் வசூலிக்கப்படும் .
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தொழில் நிறுவன உரிமையாளரிடம் 10 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு திருப்பூர் டவுன் மின் பகிர்மான அலுவலக உதவி பொறியாளர் உதவி இயக்குனர் மற்றும் போர்மேன் மின் ஊழியர்கள் இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டு 150 கிலோ வாட் மின்சார இணைப்பை வழங்கி விட்டு 120 KV இணைப்பு உள்ளதாக மோசடி செய்து அரசுக்கு பல லட்சம் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில்
திருப்பூர் ஏ பி டி சாலையிலுள்ள டவுன் தெற்கு மின்வாரிய பிரவு அலுவலகத்திற்குட்பட்ட கள்ளிக்காடு தோட்டம் பகுதியிலுள்ள ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையில் உள்ள மின்சார இணைப்பு எண் 206-004-995 Tf 3B ,ஏ பி டி சாலையிலுள்ள டவுன் தெற்கு மின்வாரிய பிரவு அலுவலகத்திலுள்ள150 KV இணைப்பு உள்ளது. இதில் ஏற்கனே இந்த இணைப்பில் 112 Kv, LT CT இணைப்பு இருந்த நிலையில் தற்போது மீண்டும் (அடிசனல் லோடு) கூடுதல் மின் பழு அதாவது 112 கேவியிலிருந்து 150 கேவியாக மாற்றப்பட்டுள்ளது .தற்போது மேற்படி இணைப்பில் மொத்தம் 150 கேவி உள்ளது. இந்த இணைப்பிற்கு மாதம் தோறும் மின்சார ரீடிங் கணக்கு எடுக்கப்பட்டு மாதம் தோறும் மாதமாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதிகளின் படி உள்ளது.அதன் படி கடந்த 27-06-2023 அன்று மாதாந்திர மின் கணக்கீடு செய்த போது மின் கட்டணம் மற்றும் மாதாந்திர பயன்பாட்டு லோடு 36 லட்சம் 2.638 , + 60 Multiplication Factor (MF) = 170 KW இதற்கு கூடுதலாக பயன்படுத்திய கிலோ வாட்டிற்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் வந்துள்ளது மற்றும் மின் கட்டணம் மொத்த கட்ட வேண்டிய கட்டண தொகை ரூ 36 லட்சம் வந்த நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள அலுவலர்களும், இங்கிருந்து இடமாறுதலில் சென்ற நபரும், ஏ டி யும் சேர்ந்து சதி திட்டம் தீட்டி சம்பந்தப்பட்ட இணைப்பின் பயன்பாட்டாளரிடம் பேசி உங்களுக்கு ரூ 36 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது.
உடனடியாக அதை செலுத்த வேண்டுமெனவும் நாங்கள் சொல்வதை கேட்டு எங்கள் வழிகாட்டுதலின்படி நடந்தால் மின் கட்டணம் பதியாக குறைத்து தரப்படும் என பேரம் பேசி ஒரு வழியாக ரூ .18 லட்சம் பணத்தை சட்டவிரோதமாக வாங்கி கொண்டு பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற வகையில் தொழிற்சாலையில் உள்ள மின் கணக்கெடுப்பு LT CT மீட்டரை மின்வாரிய அதிகாரிகளே தீயிட்டு சேதப்படுத்தி மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டணம் ரூபாய் 36 லட்சத்தை கணக்கில் காட்டாமல் தொழிற்சாலை உரிமையாளரிடம் பேரம் பேசி 18 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு
சட்டவிரோதமாக மீட்டர் புகைந்ததாக கணினியில் கடந்த 30-06-2023 ம் தேதி பதிவு செய்து மிக குறைந்த சராசரியான கட்டணம் ரூ 4,77,879 மட்டுமே கட்டணத்தை குறைத்து பதிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து உடனடியாக LT CT மீட்டர் புகைந்ததாக கூறி புதிதாக மீட்டர் பொருத்தி உள்ளனர். மேலும் LT CT இணைப்பில் 112 கே வி வரை Multiplication Factor (MF) 40 என்றும் 150 கே வி க்கு Multiplication Factor (MF) 60 எனவும் கணக்கிட வேண்டும் தற்போது வரை சம்பந்தப்பட்ட இணைப்பில் கூடுதலாக மின் பயன் உள்ளது அதற்கு மேற்படி அலுவலர்கள் எதிர் வரும் நான்கு மாதங்களுக்கு லோடு குறைத்து பயன்படுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.எனவே மோசடிகள் செய்து நன்றாக இயங்கிய LT CT மீட்டரை தீயிட்டு புகைத்து உண்மைகளை மறைத்து அரசிற்கு வரவேண்டிய ரூபாய் 36 லட்சம் வருவாயை தடுத்து சட்டவிரோத செயல்களில் மின்வாரிய விதிகளுக்கு புறம்பாக மின்வாரிய அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்துள்ளனர் என
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக மின்சார வாரிய திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
மின்வாரிய ஊழியர்கள் 36 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.
இந்த மோசடியை அரங்கேற்ற மின்வாரிய சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்ட ( AE ) மின் பொறியாளர்,( AD )உதவி மின் இயக்குனர், போர்மேன், மின்பாதை ஆய்வாளர், வருவாய் மேற்பார்வையாளர், எம் ஆர் டி ஏ இ, உள்ளிட்ட இவர்கள் அனைவர் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையில் உடனடியாக துறை ரீதியாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு மின்வாரியத்திற்கு சேர வேண்டிய 36 லட்சம் ரூபாயை உடனடியாக சம்பந்தப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் கட்ட வேண்டும் அது மட்டும் இல்லாமல் உங்க கூட்டு மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் பணியிட நீக்கம் செய்ய போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல்
திருப்பூர் மாவட்டங்களில் உள்ள இடங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகார பலம் பணம் பலம் படைத்தவர்களுக்கு மட்டுமே எந்த ஆவணங்களும் இல்லாமல் வஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக இணைப்பு வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் .அது மட்டும் இல்லாமல் பாமர நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அப்பாவி மக்களை மின்வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு கொடுக்காமல் அலைகழிப்பு செய்து வருவதாகவும் அது சம்பந்தமாக மின்வாரியத்தில் உள்ள மேலதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மின் பகிர்மான வட்ட அலுவலகங்களிலும் கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2023 ஜூலை மாதம் வரை மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.அனைத்து வர்த்தக மின்சார இணைப்புகள் மற்றும் 3 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்புகள் தொடர்பாக விசாரிக்க தனியாக சிறப்புக்குழு அமைக்க வேண்டும்.
விதிகளை மீறி வழங்கிய மின்சார இணைப்புகள் தொடர்பாக உரிய தீர்வுகண்டு இதற்கு உடந்தையாக இருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட அனைவர் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம்.
மின்சார மீட்டர் எரித்து மோசடி செய்தது தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் தனியார் தொழிற்சாலைக்கு அதிரடியாக ரூ.17லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில, இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்புக்குரிய கிறிஸ்துராஜ் ஐ ஏ எஸ் அவர்களிடம் நேரிடையாக புகார் மனு அளித்து வலியுறுத்திய நிலையில் தற்போது அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது என்பது.குறிப்பிடத்தக்கது.