50 லட்சம் செலவு செய்பவர்களுக்கு மட்டுமே மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக கவுன்சிலர் சீட்! செல்லூர் ராஜூ!? அதிர்ச்சியில் மதுரை மாநகர அதிமுக தொண்டர்கள் !?
தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக வார்டு கவுன்சிலர் வேட்பாளராக நிற்க விருப்ப மனு கொடுப்பவர்களிடம் படு ஜோராக வசூல் வேட்டையில் மதுரை அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகம்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் இந்த வேளையில் அதிமுக மதுரை மாவட்ட அலுவலகத்தில் மதுரையில் உள்ள 100 வார்டு கவுன்சிலருக்கு சீட் கேட்டு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் செல்லூர் ராஜ் விருப்பமான பெற்று வருகிறார். வார்டு கவுன்சிலராக அதிமுகவில் விருப்ப மனு கேட்பவர்களிடம் 5000 ரூபாய் வாங்கப்படுகிறது! இப்படி ஒவ்வொரு வார்டிலும் விருப்பமனு கேட்டு குறைந்தது ஐந்து பேர் பணம் கட்டி உள்ளதாக தகவல்.
இப்படி பணம் கட்டுபவர்கள் அதிமுக கட்சியில் குறைந்தது 15 வருடத்தில் இருந்து 20 வருடம் இருந்து வருவதாக தகவல். ஆனால் தற்போது மதுரை மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலராக நிற்க கட்சி அனுபவம் தேவையில்லை பணம் மட்டுமே தேவை . எத்தனை லட்சம் செலவு செய்வீர்கள் என்ற ஒரே கேள்வி மட்டும் தான் என்ற அதிர்ச்சி அறிவிப்பை மாவட்ட பொறுப்பாளர் செல்லூர் ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்.
ஒரு வார்டு கவுன்சிலர் குறைந்தது 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட பொறுப்பாளர் அவர்களுக்கு தனியாக 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனையுடன் கவுன்சிலர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்று அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நகராட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர்களுக்கு அந்த வார்டில் உள்ள அறிமுகமான நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடனடியாக அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நபராக இருந்தால் மட்டுமே ஒரு கட்சியில் கவுன்சிலராக வெற்றி பெறமுடியும் ஆனால் தற்போது அதிமுக கட்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு பணம் செலவு செய்யும் நபர்கள் மட்டுமே அதிமுக வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் என்ற அதிமுக கட்சியின் மதுரை பொறுப்பாளர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.
மதுரை ஜெயந்திபுரம் பழைய வார்டு 91 புதிய வார்டு 79 இங்கு 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு வேட்பாளராக வெங்கடேஸ்வரா ஸ்னாக்ஸ் உரிமையாளர் சந்திரசேகர் (அதிமுக மாவட்ட இலக்கிய அணி) அவரது மகள் வயது சுமார் 25 இருக்கும் அவரை வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அறிவித்துள்ளதாக தகவல். ஆனால் அந்த பெண் அதிமுக கட்சியில் இருக்கலாம் ஆனால் அனுபவம் இல்லாத ஒரு நபர். அனுபவமுள்ள 4 பேர் விருப்பமனு கேட்டு பணம் கட்டி உள்ளார்கள் ஆனால் அதில் மூன்று பேர் விருப்ப மனு நிராகரிக்கப்பட்டது. மீதி உள்ள அதிமுக பெண் நிர்வாகி கொடுக்காமல் மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளராக உள்ள சந்திரசேகர் அவர்களது மகள் இந்திரா வயது 25 கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இப்படி மதுரை மாநகர் முழுவதும் வார்டு கவுன்சிலருக்கு விருப்பமனு கேட்டுள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளை வேட்பாளராக அறிவிக்க வில்லை என்ற தகவலும் வந்துள்ளது.
எது எப்படியோ ஏற்கனவே அதிமுகவில் இரண்டு பிரிவாக இருக்கும் நிலையில் தற்போது மாநகராட்சி தேர்தலில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் கோஷ்டிப் பூசல் ஆரம்பித்து விட்டது என்ற தகவல் வந்துள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கிறார்கள் அதிமுக அடிமட்ட தொண்டர்கள்.கட்சிக்கு உழைத்தவர் எங்கே??
மக்களுக்கு பணி செய்தவர் எங்கே??
இப்போது ஓட்டு கேட்பவர் யார் இங்கே??
குறுக்கு வழியில் ஓட்டு கேட்டு தேடி வருவார் இங்கே!!
உண்மையை உரக்க சொல்லும் உண்மை தொண்டன்
C. புரட்சிக்கண்ணன்
79 வது வட்டம்
மதுரை மாநகர்