வருவாய்த்துறை

6 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டி  மாதம் பல லட்சம் ரூபாய் வசூல்!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்!
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம்
பள்ளிபாளையத்திலி ருந்து சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள
எலந்தக்கோட்டை கிராமம் ஈக்காட்டுூர் பேருந்து நிறுத்தம்  அருகே நாகராஜ் மாதேஷ் தங்கவேல் மற்றும் வி எஸ் எம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஆகிய நான்கு பேருக்கு சொந்தமான நிலத்தை ஒட்டியுள்ள


அரசு புறம்போக்கு நிலம்  சர்வே எண் 337/1. 336/1  75  சென்ட்  ஒரு சென்ட் 2000 ரூபாய்  ) 6 கோடி ரூபாய் மதிப்புள்ள
நிலத்தை ஆகிரமிப்பு செய்து வேலி அமைத்து கட்டிடங்கள் கட்டி அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதில் நாகராஜன்  என்பவர்   சுமார் 20 சென்ட் நிலத்தில்

கட்டிடங்களைக் கட்டி டீக்கடை ,பேக்கரி ,நெசவு பட்டறை, பிவிஎஸ் பைப் குடோன்  மற்றும் இரண்டு வீடுகள் என
பல லட்சம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு விட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தனி நபர்கள்  சட்ட விரோதமாக  75 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டி உள்ள கட்டிடங்கள் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ள நிலத்தை மீட்டெடுக்க கோரி சமூக ஆர்வலர்  சி என் நெப்போலியன்
எலந்தகுட்டை  கிராம நிர்வாக அலுவலர்  தியாகராஜனை நேரில் சந்தித்து   பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் 

27/6/2025
அன்று
குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார்,
எலந்த குட்டை கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்  வருவாய் ஆய்வாளர் ஆகிய இருவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் அரசு புறம்போக்கு   நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கும்  நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டெடுக்க  வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய மூன்று பேரும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்றும்    4/7/2015 அன்று  திருச்செங்கோடு வருவாய்  கோட்டாட்சியரிடம்  அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்
தற்போது    திருச்செங்கோடு  கோட்டாட்சியர்
குமாரபாளைய வட்டாட்சியர் பிரகாஷ்  எலந்த குட்டை கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜ் வருவாய் ஆய்வாளர் சர்வேயர்
ஆகியோர்   75 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களைக் கட்டி பல லட்சம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ள நான்கு  நபர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும்  . சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட வருவாய் துறை அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள்  சந்தேகத்துடன் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால்   6 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது  துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் எலந்த குட்டை ஊராட்சியில் உள்ள வெப்படை என் சி காலணியில் இயங்கி வரும் வெப்படை மின்சார வாரிய அலுவலகம் தனியார் வாடகை கட்டிடத்தில் இருப்பதால் இவ்வலுவலகத்தை எலந்த குட்டை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட காட்டூரில்  சர்வே எண் 336/1 , 337 /1  125 சென்ட்
அரசு புறம்போக்கு  நிலத்தில்  50 சென்ட் நிலத்தை கைத்தறி அலுவலகத்திற்கு விடப்பட்டுள்ளது மீதமுள்ள 75 சென்ட்   அரசு புறம்போக்கு நிலத்தில்  மின்வாரிய அலுவலகம் கட்டிடம் கட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு 18/09/2024  அன்று சமூக ஆர்வலர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கிராம சபை கூட்டத்திலும் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்ற கோரி சமூக ஆர்வலர் நெப்போலியன் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும்
அது மட்டும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டெடுக்க தமிழக  முதல்வர் தனி பிரிவிற்கு சமூக ஆர்வலர் நெப்போலியன் புகார் மனு அனுப்பியுள்ளார் . என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ அரசு புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி வேலி அமைத்து  ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக கொடுத்துள்ள புகாரின் மீது நாமக்கல் மாவட்ட ஆட்சியர்   வருவாய்த் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு
நான்கு தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கட்டிடங்களை அகற்றி அந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!?

Related Articles

Back to top button