700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?
அதிமுக&பிஜேபி கட்சிகள் எதிர்ப்பு!!
700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?
அதிமுக பிஜேபி கட்சிகள் எதிர்ப்பு!!
சென்னையில் இரண்டு புதிய பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார்வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!!!தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுக்கும் சென்னையில் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக பண்டிகை நாள்களுக்கு முன்பு, கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதனைத் தவிர்க்க வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றியிருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டு அதன்படி இயக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.393 கோடியில் சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் புதிய வேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது!
தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022, அக்டோபர் முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாளம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் பேருந்து நிலையம் ஒன்று கட்டப்படுகிறது. மற்றொன்று திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே 300 கோடி ரூபாயில் பஸ் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
இதில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரஉள்ளது.
இந்த இரண்டு புதிய பஸ் ஸ்டாண்டுகளையும் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் விட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.
இதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான கலந்தாலோசகராக, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல்., நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டதை எதிர்த்தும், அரசு பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கண்டித்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க., ஆட்சியில் ஏழைகள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையத்தை தனியார் மயமாக்க செய்யப்பட்டுள்ள முடிவு சமூக ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம் …… அதையும் , சாமானிய ஏழை மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தையும் ஒப்பீடு செய்வது தவறானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது..