கனிமவளத்துறை

8 மாதத்திற்கு முன்பு உரிமம் ரத்து செய்யப்பட்ட மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரி   சட்ட விரோதமாக செயல்பட
மறைமுக பங்குதாரராக  செயல்பட்ட சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை  உதவி இயக்குனர் !
அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை மாவட்டம் மேகா ப்ளூ மெட்டல்

தமிழகத்தில்  அதிக குவாரிகள் செயல்படும் மாவட்டங்கள் பட்டியலில்
காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை
ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன.


குறிப்பாக  சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான  குவாரிகளில் வெடி வைக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதை மீறி பெரும்பாலான கல்குவாரி உரிமையாளர்கள்   விதிகளை மீறி சட்ட விரோதமாக வெடிவைத்து அரசு வழங்கிய அனுமதியை விட அளவுக்கு அதிகமாக இரவும் பகலும் வெடிவைத்து வெட்டி எடுத்து கடத்தி வருவதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

சில தினங்களுக்கு முன்பு 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில் சுமார் பத்து ஏக்கரில் செயல்பட்டு வந்த  மேகா ப்ளூ மெட்டல் குவாரியின் உரிமம் 8 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் உரிமையாளர் மேகவர்மன் என்பவரின் பேராசையாலும் கனிமவளத்துறை அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும் விதிகளை மீறி சட்ட விரோதமாக தொடர்ந்து அளவுக்கு அதிகமாக

450 அடி ஆழம் வரை வெடிகளை வைத்து பாறைகளை வெட்டி எடுத்து வந்த நிலையில் பாறைகள் சரிந்து விழுந்ததில்

பாறைகளுக்கு நடுவில் சிக்கி அப்பாவி உயிர்கள் ஆறு பேரை காவு வாங்கியுள்ளார் கல்குவாரி உரிமையாளர் மேகவர்மன் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மேகவர்மன் நடத்தி வந்த மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரி சம்மதமாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


2019ஆம் ஆண்டு 3.60 எக்டர் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பில் கல்குவாரி உரிமத்தை

சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை மூலமாக வாங்கியுள்ளார் மேகவர்மன். சிவகங்கை மாவட்ட கனிமவள துறை மூலம் மேகா புளூ மெட்டல் என்ற பெயரில் வழங்கப்பட்ட உரிமம் கடந்த 2024 செப்டம்பர் மாதமே காலாவதி ஆகிவிட்டது. அதன் பின்பு மேகவர்மன் 1.33எக்டேர் சுமார் மூன்று ஏக்கர் அளவுக்கு புதிதாக கல்குவாரி நடத்துவதற்கு சிவகங்கை மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி வாங்கியுள்ளார். அந்த உரிமத்தை வைத்து எட்டு மாதங்களுக்கு முன்பு உரிமம் ரத்தான  3.66 எக்டர் நிலப்பரப்பில் உள்ள மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரியில் சட்டவிரோதமாக 450 அடிக்கு கீழ் வெடிவைத்து பாறைகளை வெட்டி எடுத்து கனிம வளங்களை கடத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்துள்ளார். ஆனால் கடந்த எட்டு மாதங்களாக

சிவகங்கை மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் விஜயராகவன்

சிவகங்கை மாவட்ட கனிமவள துறை உதவி ஆணையர் விஜயராகவன்  மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரிக்கு சிவகங்கை மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் விஜயராகவன் சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் கண்டு கொள்ளாமல்  இருந்துள்ளார்
அது மட்டுமில்லாமல் மாதம் ஒருமுறை வருவாய்த்துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் அவர்கள் யாரும் அந்த கல்குவாரிக்கு சென்று ஆய்வு  மேற்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது உரிமம் ரத்தான பிறகும் மேகவர்மன் நடத்தி வந்த மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரியை சட்டவிரோதமாக தொடர்ந்து  செயல்பட்டு வருவதற்கு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஒரு பங்குதாரராக மறைமுகமாக செயல்பட்டு வந்துள்ளார் என்ற  அதிர்ச்சி தகவல்  வெளிவந்துள்ளது.

சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியில் 20/05/25 அன்று ஆறு பேர் உயிரிழந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் தற்போது வழக்கு விசாரணைக்கு வந்த போது   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முதல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை அனைவரிடமும் சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகள் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கும் வகையில் திசை திருப்பம் முயற்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்குவாரிகளில் உயிரிழப்பு நடப்பது  வளக்கம்மான ஒன்றாகிவிட்டது.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கனிமவளத்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்குச் சென்று கல்குவாரிக்கு  சீல் வைத்தனர். அதன் பின்பு

தமிழக முதலமைச்சர் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு தலா 4 லட்சமும் முதலமைச்சரின்  சொந்த நிதியிலிருந்து 1.50 லட்சமும் வழங்கி உத்தரவிட்டார்.குவாரி நிறுவனத்திலிருந்து 5 லட்சம்  10 லட்சம் 50 ஆயிரம் காசோலையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளிலும் சட்டவிரோதமாக செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது எல்லாம் ஒரு புறம் இருக்க
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் பெரும்பாலானவற்றில் சட்ட விதிகளை மீறி முறைேகேடாக  அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக சுமார் 500  அடி ஆழம் வரை வெடிவைத்து பாறைகளை வெட்டி தோண்டி எடுக்கப்பட்டு வருவதாகவும்
டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருட்களையும் விதிமுறை மீறி பயன்படுத்துகிறார்கள்.
வெடி வைப்பவர் (பிளாஸ்டர்) அதற்கான சிறப்பு பயிற்சி, படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், எந்த பயிற்சியும் இல்லாத நபர்களை, வெடி வைக்க பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது.
கல்குவாரி செயல்பட கனிமவள துறையின் அனுமதி மட்டுமின்றி வருவாய் துறை, புவியியல் துறை, வேளாண்மை துறை உட்பட பல்வேறு துறைகளின் அனுமதியை பெற வேண்டும். இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
அதிகபட்சம் 70 மீட்டர் (200 அடிக்கு) கீழே கற்களை தோண்டி எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை.
குறிப்பிட்ட அளவு மட்டுமே கற்களை எடுக்கவேண்டும். தற்போதைய சூழலில் அரசு விதிகளை மீறி தான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்குவாரிகளில் கனிமங்கள் வெடி வைத்து வெட்டி எடுக்கப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என குவாரி குத்தகை விடப்படுகிறது. ஆனால், எவ்வளவு அளவுதான் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்கான வரன்முறை இல்லாமல் அனுமதி அளிக்கப்படுவதால்
, இரவு-பகலாக சட்டவிரோதமாக வெடிவைத்து கற்களை வெட்டி எடுத்து, போலி டிரிப் சீட் மூலமாக
தினமும் சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான ஜல்லி, போல்டர் கற்கள்
குவாரிகளில் இருந்து  கடத்துவது தொடர்கிறது.
அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், பிரதான சாலைகளில் செல்லாமல், திருட்டுத்தனமாக கிராமங்கள் வழியாக செல்வதால், கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமாகி விடுகின்றன. பல இடங்களில் மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதை, சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கிராம பகுதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது.  விவசாய தோட்டத்தின் நடுவே கல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வாங்கி  முறைகேடு செய்கிறார்கள். கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறையினர் வேடிக்கை பார்க்கிறார்கள்.
கண் முன் தெரியும் தவறுகளை தட்டிக்கேட்கவும், கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யவும் எந்த அதிகாரிகளுக்கும் துணிவில்லை என்பதுதான் நிதர்சனம்.
குறிப்பாக  சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும்  குவாரிகள் முறையாக அனுமதியுடன் செயல்படுகிறதா !?அல்லது சட்ட விரோதமாக இயங்கி வருகிறதா!?  கல் குவாரிகளில் கல், கிராவல் மண் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீறி
கல் குவாரிகளில் விதிமீறல் இருந்தால் அந்தக் கல்குவாரியை மூடி சீல் வைத்து அந்த கல் குவாரிக்கு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து  செய்ய வேண்டிய சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை  உதவி ஆணையர் விஜயராகவன்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
கல் குவாரிகளில் இருந்து மாதம் 3 முதல் 5 லட்சம் ரூபாயும், உரிமம் புதுப்பிக்க கல் குவாரியின் பரப்பிற்கு ஏற்ப 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை  சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி ஆணையர்  விஜயராகவன் லஞ்சம் வாங்குவதால் தான் தான்
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் புகார் கொடுக்கச் சென்றால் அவர்களை ஏளனமாக பார்ப்பதும் இல்லாமல்
ஆய்வுசெய்கிறோம்… கண்டுபிடிக்கிறோம்… நடவடிக்கை எடுப்போம் என அலட்சியமாக ஏளனமாகவும் பதில் சொல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் சிவகங்கை மாவட்ட
கல் குவாரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குவாரிக்கும் தனித்தனியாக அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக குவாரி அமைக்கப்படும் நிலம் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.
பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 எக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல் வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்பணிகளின் போது எழும் ஒலி அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அனைத்து சட்ட விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு
பெரும்பாலான குவாரிகள்  . உரிமம் பெறு
வது, வெடி வைப்பது, அதிக ஆழம் வெட்டி எடுப்பது, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்காதது எனப் பல்வேறு வழிகளில்  தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்குவாரிகளில்  விதிகள் மீறி செயல்படுவதால்  உயிரிழப்பு நடப்பது  வளக்கம்மான ஒன்றாகிவிட்டது.
சிறிய அளவு விபத்துக்கள் நடப்பது மற்ற நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. கல்குவாரி ஒப்பந்தம், உரிமம் பெற்றவர், வெடிவைப்பவர், கற்களை வெட்டி எடுப்பவர், மேற்பரப்புக்கு கொண்டுவருபவர், வாகனம் இயக்குபவர், தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர் என தனித்தனியாக ஒப்பந்தம் கொடுத்துவிடுவதால், தொழிலாளர்களுக்கும் குவாரி உரிமம் பெற்றவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். உயிரை பணயம் வைத்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நடைமுறைகள் வரவேண்டும்”
அரசுக்கும், தனியாருக்கும் வருவாய் கிடைக்கும் போது, பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே போல், கனிமம் அதிகளவில் சுரண்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.
கனிம வளம் கடத்தலுக்கு துணை போகும் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது  நடவடிக்கை எடுக்க அரசு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Related Articles

Back to top button