மதுரை மாவட்டத்திற்கு அறிவிப்போடு சரி எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை கானல் நீராக தான் உள்ளது
திமுக கட்சி அல்ல அது கார்ப்பரேட் கம்பெனி
மேகதாது பிரச்சனையில் தமிழகத்திற்கு விடியா திமுக அரசு துரோகம் செய்துவிட்டது
இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி
மதுரை
மதுரை விமான நிலையத்தில் கழகப் பொதுச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது சரி, ஆட்சிக்கு வந்த போதும் சரி மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால் அறிவிப்போடு சரி எந்த திட்டமும் வந்த மாதிரி தெரியவில்லை.
அதில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன் ,மதுரைக்கு 600 கோடி ரூபாயில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை, பணியும் தொடங்கவில்லை.
அம்மா அரசு இருக்கபோது மதுரை மாவட்ட மக்களுக்கு தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்ற அடிப்படையில், 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்று வகையில், 1292 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டது தற்போது அந்த பணி சுணக்கத்துடன் நடைபெற்று வருகிறது.விடியா திமுக அரசு, அண்ணா திமுக அரசு கொண்டு வந்த காரணத்திற்காக அந்தப் பணியை வேகமாக செய்யவில்லை.
அதேபோல் நெல் பேட்டையில் இருந்து அவனியாபுரம் விமான நிலையம் செல்ல உயர்மட்ட மேம்பாலம் அறிவித்தார்கள்.அதற்கு நிதி ஒதுக்கவில்லை கேட்டால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதுஆகவே திமுக அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் கானல்நீராகத்தான் உள்ளது.
மதுரை சிறைச்சாலை வளாகம் மாநகராட்சி வெளியே கொண்டு செல்லப்படும் என்று சொன்னார்கள் இதுவரை முயற்சி எடுக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை . மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர் வளர்ச்சிக் குழுவை அமைத்தார்கள் அந்த குழு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை அந்தக் குழு இருக்குதா, இல்லையா என்று தெரியவில்லை.
மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் அமைக்கும் திட்டத்தினை, அண்ணா திமுக அரசு இருக்கும் போது ஏற்பாடு செய்தோம். அதற்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அறிவித்தார்கள் செய்யவில்லை அதற்குப் பூர்வாங்க பணி செய்யவில்லை, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
அண்ணா திமுக அரசு இருக்கும்பொழுது வைகை ஆற்றின் இருபுறக்கரை ஓரமாக தடுப்பு அமைத்து சாலை அமைத்து கொடுத்தோம். அதில் தான் மதுரை மக்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பயணம் செய்து கொண்டு வருகிறார்கள்.
அதேபோல் அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.
அதேபோல் ஏழரை கிலோ மீட்டரில் நத்தம் சாலையில் பறக்கும் சாலை அமைத்து கொடுத்து உள்ளோம். காளவாசல் அருகே உயர்மட்ட மேம் பாலம், பாண்டி கோவில் அருகே உயர்மட்ட மேம்பாலம், காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உயர்மட்ட மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள், அதேபோல் மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தோம்.
கோரிப்பாளையம் தேவர்ஐயா சிலை அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கொண்டு வந்த போது நிலம் எடுக்கும் பிரச்சினைகளால் காலதாமதம் ஆனது இந்த ஆட்சியில் அந்த பணியை துவக்கி உள்ளார்கள்.
இந்த விடியா திமுக அரசு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார்கள் அதில் விருதுநகர் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஏற்கனவே அண்ணா திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது நான் கொண்டு வந்த திட்டங்களைத் தான் மறுபடியும் ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளார்கள்.
அதேபோல் மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே 150 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கினோம்.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் 30 கோடியில் மாவட்ட ஆட்சியர் விரிவாக்கம் கட்டிடத்தை கொண்டு வந்தோம்.
மதுரை மாவட்டம் மேலூரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று கூறினார்கள் எதையுமே அறிவுப்போடு தான் உள்ளது.
திமுக ஆட்சியில் அறிவுப்போடு சரி, மதுரை மாவட்டத்திற்கு இதுவரை எந்த பணியும் வரவில்லைதான் எதார்த்த நிலைமை.
கேள்வி ; நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்விக்கு
பதில் ;திமுகவில் எந்த கூட்டணி அமைத்துள்ளார்கள், பேசிக்கிட்டு தான் இருக்கிறார்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தை முடிந்தால் தான் உறுதி, அதில் எத்தனை கட்சி உள்ளது எத்தனை கட்சியில் வெளியேறப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
கேள்வி: ஓபிஎஸ் சின்னம் முடக்கப்படும் என்று கூறியுள்ளார்
பதில்: உச்சநீதிமன்றம் தீர்ப்பை கொடுத்து விட்டாச்சு, உயர் நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்து விட்டாச்சு, தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டாச்சு, எப்படி முடக்க முடியும் அவர் ஆசை நிராசையாக தான் இருக்கும்
கேள்வி: ஓபிஎஸ் கட்சிக் கொடியில் செல்கிறரே
பதில்: ஓபிஎஸ் கொடி கட்டமுடியாதே, அப்படி இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் ஆதாரத்தை இருந்தால் கொடுங்கள்.
கேள்வி ;பாமக தேமுதிக கூட்டணி வருமா
பதில்; பொறுத்திருந்து பாருங்கள்
இன்னும் தேர்தல் அறிவிக்கவில்லை, தேர்தல் அறிவித்த பின்பு தான் கூட்டணி முழுமையாக தெரியும்
கேள்வி: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக இணைகிறார்களே
பதில்: பாஜகவில் உள்ளவர்கள் நிறைய பேர் அண்ணா திமுகவில் இணைகிறார்கள் அதை நீங்கள் ஏன் சொல்ல மாட்டீர்கள், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி போவது என்பது அவர்களுடைய ஜனநாயகம், இது ஜனநாயக நாடு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு போகிறார் என்றால் அவர்கள் மனநிலை பொறுத்து
கேள்வி; அதிமுகவில் வாரிசு அரசியல் உள்ளதா திமுக சொல்கிறார்களே
பதில்; அரசியல் வாரிசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சீட் கொடுப்பது என்பது முக்கியமல்ல தலைமை பொறுப்பை தான் பார்க்க வேண்டும். திமுகவில் கருணாநிதி பின் ஸ்டாலின் தலைவர் ,அதற்குப் பின்பு உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல், சீட்டு கொடுப்பது என்பது வாரிசு அரசியல் அல்ல, இன்று கொடுப்பார்கள் நாளைக்கு கொடுக்க மாட்டார்கள், அது வாரிசாக வராது.
வாரிசு அரசியல் என்றால் அந்தக் கட்சி அவர்கள் குடும்பத்திற்கு கைக்கு போய்விடும், ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னைப் போன்ற சாதாரண தொண்டர்கள் உயர்நிலைக்கு வர முடியும், வேறு எந்த கட்சியினாலும் முடியாது திமுக பொருத்தவரை அது வாரிசு கட்சி, குடும்ப கட்சி, அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி ஆகும்
கேள்வி; ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டமன்றத்தில் உங்கள் நிலைப்பாடு மாறுபட்ட கருத்து இருந்தது
பதில்; எங்கள் கொள்கை படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கருத்துக்களை நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம், கருத்து கேட்கும் கமிட்டிக்கு அனுப்பி உள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் நாங்கள் ஆதரிப்போம் இல்லையென்றால் நாங்கள் நிராகரிப்போம்.
கேள்வி; அதிமுக கூட்டணி முடிவாகவில்லையே
பதில்; நான் முதலமைச்சர்கள் இருந்த பொழுது, தேர்தல் அறிவித்த பின்பு தான் வந்து சேர்ந்தார்கள். இன்னும் தேர்தல் அறிவிப்பு 20 நாட்களுக்கு மேலே உள்ளது .எல்லா கட்சியும் கூட்டணி அமைக்கிறது அதேபோல் அண்ணா திமுக கூட்டணி அமைக்கும் .ஏற்கனவே 2019 ஆண்டு தலைமை ஏற்று நடத்தினேன், 2021 ஆண்டில் தலைமை ஏற்று நடத்தினேன் இப்போதும் தலைமையேற்று கூட்டணி நடத்துவோம்.
கேள்வி; பிரதமர் வேட்பாளராக யாரை முன் நிறுத்துவீர்கள்
பதில்; ஒரிசாவில் உள்ள முதலமைச்சர் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தினார்களா, அதேபோல் தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம் அப்படியா உள்ளது. பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி யாரும் அங்கே ஜெயிக்கவில்லை.
ஏன் 2014 இல் பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி அம்மா செய்யவில்லை. அண்ணா திமுக பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு மக்கள் தான் எங்கள் வேட்பாளரை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
எங்களுக்கு யார் வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் எஜமானர்கள்.
கூட்டணி என்று வரும்போது கூட்டணி தர்மம் வந்து விடுகிறது. மாநிலத்திற்கு எதிரான செயல வரும்போது தேசிய அளவில் முடிவு எடுக்கிறார்கள் அப்போது நாம் பாதிக்கப்படுகிறோம். இந்த நிலை மாறுவதற்கு தான் அண்ணா திமுக சுயம்பாக முடிவெடுத்து செயல்படுவதற்கு தான், நாங்கள் தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டோம்.எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு வாக்காள பெருமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அதுதான் எங்களின் நிலைப்பாடு.
கேள்வி; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி திரிஷா குறித்து பேசியுள்ளாரே
பதில்; அதற்கு தான் இன்றைக்கு எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்அது பத்திரிகையில் வந்துள்ளது. அவர் பெரிய ஆளு கிடையாது, தீபா கட்சிக்கு போய் வந்தவர் ஏதோ இரக்கப்பட்டு நாங்கள் சேர்த்தோம். அவர் உடல்நிலை சரியில்லாத அவரை நாங்கள் விட்டு வைத்திருந்தோம். இப்போ அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கேள்வி; திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு உள்ளது. அதேபோல் பிஜேபிக்கும் ஆதரவாக கருத்துக் கணிப்பு உள்ளது
பதில்; ஓட்டு போடும் மக்களிடம் யாரிடம் கருத்து கணிப்பில் வரவில்லை. மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.
போன முறை அப்படித்தான் கூறினீர்கள் 2021 இல் நாங்கள் 75 இடங்களை கைப்பற்றினோம். அதில் நீங்கள் கூட்டி பார்த்தால் ஏழு நாடாளுமன்றம் வெற்றி பெற்றுகிறது. ஒரு நாடாளுமன்றத்தில் ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ளது .குறிப்பாக ஈரோட்டில் ஆறு சட்டமன்ற தொகுதியை கூட்டினால் 7400 ஓட்டு தான் குறைவு, சிதம்பரத்தில் 6 சட்டமன்றத் தொகுதியைக் கூட்டினால் 384 தான் தான் குறைவு, அதேபோல் நாமக்கலில் 15,400 தான் குறைவு, கள்ளக்குறிச்சியில் 20,000 தான் குறைவு, வேலூரில் 27,000 தான் குறைவு ,இதெல்லாம் எப்போது என்றால் 2021 சட்டமன்ற தேர்தலில். ஏற்கனவே பத்தாண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்தோம், அதில் பல்வேறு விமர்சனங்கள் செய்தார்கள். 520 அறிவிப்புகளை கவர்ச்சிகரமாக ஸ்டாலின் அறிவித்தார், அதை நம்பி மக்கள் வாக்களித்தாரகள்.
அந்த காலகட்டத்திலே நாங்கள் இவ்வளவு ஜெயித்து வந்துள்ளோம்.
இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியின் மீது கடுமையான வெறுப்பு, மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் .விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, எல்லா வகையிலும் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது, இப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம் அதனால் எங்களுடைய கூட்டணி மிக பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெறும்.
கேள்வி; மேகதாது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி
பதில்; இதுகுறித்து சட்டமன்றத்தில் தெளிவாக நானபேசினேன். ஆனால் நீங்கள் போடுவது கிடையாது நான் பேசிய குறிப்பு நீங்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். மேகதாவில் முதலில் என்ன நடந்து என்று பாருங்கள். அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகம் இருக்கும்போது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு போட்டோம். தில்லு, திராணி இருந்தால் இந்த அரசு வழக்கு போட்டு இருக்க வேண்டும்.
நீங்கள் மேகதாது பற்றி குறிப்பிடக் கூடாது.காவேரி மேலாண்மை ஆணைய அந்தக் கூட்டத்தின் 28 வது கூட்டத்தில், என்ன அதிகாரம் உள்ளதோ அந்த அதிகாரத்துக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும். மேகதாது சப்ஜெக்ட் வரக்கூடாது அதன் பணி என்றால் அங்குள்ள தேங்கி இருக்கும் தண்ணீரை ரிலீஸ் செய்ய வேண்டும், அந்த ஆணையம் பரிசீலித்து எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு தண்ணீரை விட வேண்டும் என்பதுதான் அந்த ஆணையத்தின் பணி ,அதற்கு மேதாது பிரச்சனையை அவர்கள் எடுப்பது என்பது மிக மிக கண்டிக்கத்தக்கது.
அண்ணா திமுக அரசு இருக்கும்போதுஇதை நாங்கள் கண்டித்தோம், நீங்கள் கொண்டு வரக்கூடாது உங்களுக்கு அதிகாரம் கிடையாது நீதிமன்றம் வரை சென்று அவமதிப்பு வழக்கு போட்டோம்.
இந்த அரசு தற்போது என்ன செய்கிறது, ஓட்டெடுப்பில் கலந்து இருக்கிறது 5 ஓட்டு அவர்களுக்கு, 4 ஓட்டு நமக்கு, இப்போது சென்ட்ரல் வாட்டர் கமிஷனுக்கு அனுப்பி விட்டார்கள் என்ன செய்யப் போகின்ற இந்த அரசாங்கம், துரோக செயல் செய்துள்ளது இந்த அரசாங்கம் ஏன் வெளிநடப்பு செய்ய வேண்டியது தானே? அப்படி இல்லைஎன்றால் நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே?
சட்டமன்றத்தில் என்ன பேசி உள்ளார்கள் அதை நீங்கள் எடுத்துப் பாருங்கள். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் அயோக்கியத்தனம் என்று கூறியுள்ளார். சட்டப்பேரவை தலைவர் இதை நான் நீக்கட்டுமா என்று கேட்டபோது, எதற்கு நிற்கிறீர்கள் நான் சொன்னேன் என்று பதிலை பதிவு செய்யுங்கள் என்று கூறியதற்கு, சட்டப்பேரவை தலைவர் அதை பதிவு செய்து விட்டார்.
எங்கே எதைப் பேச வேண்டுமோ அதை பேச வேண்டும்,பேச தவறிவிட்டது. இதனால் மேகதாது பிரச்சனை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு இருக்கும்பொழுது, காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக இருந்தது இதற்கு தீர்வு கண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம், தீர்ப்பை பெற்றது அண்ணா திமுக, அதேபோல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கியது அண்ணா திமுக, மீத்தேன் ஈத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து திமுக தலைவர் முன்னிலையில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது, அதை தடுத்து நிறுத்தியது அம்மாவின் அரசுதான்.
அதேபோல் காவிரி குண்டாறு திட்டத்தில் நாங்கள் கொண்டு வந்தோம் அந்தத் திட்டமும் தற்போது கிடப்பில் உள்ளது. கோதாவரி, காவிரி இணைப்பு எங்களின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோம் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை அதற்கு மத்திய அரசின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தொடங்கப்பட்டது அதையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது, இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என கூறினார்
இந்த நிகழ்வில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.. வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களான தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே தமிழரசன், மாணிக்கம், நீதிபதி, எஸ் எஸ்.சரவணன் ஆகியோர் இருந்தனர்.