கால்நடை பராமரிப்புத்துறை

உரிமைகளைப் பெற  நீதிமன்றத்தை நாடியவர்களை
அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்து பழிவாங்கிய இயக்குனர்!
அச்சத்தில் கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள்!

தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை  மருத்துவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. மறக்கவும் முடியாது.

ஆனால் தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய 18 கால்நடை உதவி மருத்துவர்கள் திடீரென பணியிட மாறுதல் செய்யப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 3000 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.


இதில் சிலர் தங்களது தற்காலிக பணி காலத்தை கணக்கில் கொள்ள வேண்டியும்,  சிலர் பங்களிப்பு ஓய்வூதிய தொகை வேண்டியும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். இதே போன்ற வழக்குகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் உள்ளன.

இந்நிலையில் கால்நடை பராமரிப்பு துறையில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த,  9 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 18 நபர்களை நிர்வாக காரணம் என்ற பெயரில் 200 கி.மீ தூரத்திற்கு மேல் அதிரடியாக பணியிட மாறுதல் செய்து

கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் ஆர்.கண்ணன் ஐஏஎஸ்

கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் திரு கண்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  இதில் இரண்டு பெண் கால்நடை உதவி மருத்துவர்களும் அடக்கம்.

நீதிமன்றங்களை நாடும் உரிமைதான் இந்திய அரசியல் சாசனத்தின் இதயம் போன்றது என அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்கள் தெரிவித்தார்.

திராவிட மாடல் தமிழக அரசு தங்களது உரிமைகளுக்காக, மத்திய அரசுக்கு
எதிராக நீதிமன்றங்களை நாடி தங்களது உரிமைகளை பெற்று வருகிறது.

அதே சமயம் தங்களது நிர்வாகத்தின் கீழ் பணி செய்யும் அரசு ஊழியர்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடினால் அதை ஒரு குற்றமாக கருதி  தண்டனையாக பணியிட மாற்றம் செய்து அதன் மூலம் தங்களுக்கு எதிரான வழக்குகளை அரசு வாபஸ் பெற அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க நினைப்பது
எந்த வகையில் நியாயம் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர்  கண்ணனின் இது போன்ற செயல்
இயற்கை நீதிக்கு எதிரான  கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.
கால்நடைத்துறை உதவி மருத்துவர்களின் உரிமைகளை வழங்குவது தான் சமூக நீதி.
என பாதிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

தமிழகம் கால்நடை வளர்ப்பு மற்றும் உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விட முன்னிலை வகிக்கிறது. இந்திய கால்நடைகளின் எண்ணிக்கையில் ஏழு சதமும், கோழிகளின் எண்ணிக்கையில் மூன்று சதமும் கொண்டுள்ள தமிழகம், பால் உற்பத்தியில் ஐந்தாம் இடத்தையும், முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. கால்நடை வளர்ப்பு குறித்த அறிவியல் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உழவர் பயிற்சி நிலையங்கள் மற்றும் அறிவியல் நிலையங்கள் தமிழகத்தில் 27 இடங்களில் உள்ளன.

கால்நடைகளைப் பராமரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்கள், கோமாரி நோய் தடுப்பூசி திட்டம், கால்நடை காப்பீட்டுத் திட்டம், கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம் (RGM) போன்ற திட்டங்கள் கால்நடைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
கிராமப்புற பொருளாதாரத்தை  மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பன்முக மருத்துவமனைகள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகங்கள், கால்நடைகளுக்கான களக் கண்காணிப்பு அலுவலகங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த கட்டடங்களின் உட்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்தி, கால்நடைகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
கால்நடைகளைப் பராமரிக்க தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவ மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்திகள் உள்ளன.
தேவைப்படும்போது, நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஊர்திக்கு 1962 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். இந்த மையங்கள் நோய்த்தடுப்பு, சிகிச்சை மற்றும் பிற கால்நடை பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன.
விவசாயிகள் பயன்படுத்தும் கால்நடைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் துறை கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது, நோய்களைத் தடுப்பது, சிறந்த இனப்பெருக்க முறைகளை அறிமுகப்படுத்துவது, மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவது போன்ற பல வழிகளில் உதவுகிறது.
தமிழகத்தில் அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், அமைச்சு பணியாளர்கள் என சுமார் 6818 பேர் தற்காலிக பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில்
கால்நடை பராமரிப்புத் துறையில் அரசுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. முக்கியமாக, பதவிகளில் நியமனம், பதவி உயர்வு, ஊதிய வேறுபாடு, மற்றும் நிதி முறைகேடுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வழக்குகள் தொடரப்படுகின்றன. உதாரணத்திற்கு, மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்க விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை யில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.


தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 3000 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்களாக பணியில்  சேர்ந்தவர்களுக்கு
மருத்துவத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. அவர்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு தான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதனால், பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத கால்நடை உதவி மருத்துவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலையில் பணி ஓய்வு பெற வேண்டியுள்ளது. இது பெரும் அநீதி ஆகும்.
மருத்துவத் துறை மருத்துவர்களை போலவே தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் பணியில் சேர்ந்த 2008, 2016, 2024 ஆகிய ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் சில திருத்தங்களைச் செய்து செயல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த பரிந்துரையை தமிழக அரசின் நிதித்துறை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.
.“தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. ஒரே நிலையிலான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு சம ஊதியம், சம பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.
கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்குவதை தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்கள் நியாயமற்றவை. அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களுக்கு 2008, 2015, 2017 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நான்கு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல.
ஒரே தகுதியுடைய கால்நடை மருத்துவர்களுக்கு சமமான பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்காததை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில் சிலர் தங்களது தற்காலிக பணி காலத்தை கணக்கில் கொள்ள வேண்டியும்,  சிலர் பங்களிப்பு ஓய்வூதிய தொகை வேண்டியும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.


நீதிமன்றங்களை நாடும் உரிமை தான் இந்திய அரசியல் சாசனத்தின் இதயம் போன்றது என அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்கள் தெரிவித்தார்.
திராவிட மாடல் தமிழக அரசு தங்களது உரிமைகளுக்காக, மத்திய அரசுக்கு
எதிராக நீதிமன்றங்களை நாடி தங்களது உரிமைகளை பெற்று வருகிறது.
அதே சமயம் நிர்வாகத்தின் கீழ் பணி செய்யும் அரசு ஊழியர்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடினால் அதை ஒரு குற்றமாக கருதி தண்டனை அளிக்கிறது.  அதன் மூலம் தங்களுக்கு எதிரான வழக்குகளை அரசு வாபஸ் பெற அழுத்தம் கொடுக்கிறது.
இது எந்த வகையில் நியாயம் என பாதிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த வழக்குகள், கால்நடை
பராமரித் துறையை  கண்டுகொள்ளாமல் இருப்பதால்
கால்நடை பராமரிப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துகின்றன. இது போன்ற வழக்குகள், அரசு கொள்கைகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்புத் துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

என்பதே ஒட்டுமொத்த கால்நடை உதவி  மருத்துவர்கள் கோரிக்கையை உள்ளது.

எது எப்படியோ தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய கால்நடைத்துறை உதவி மருத்துவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில்  பணியிட மாற்றம் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே  கால்நடை உதவி மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அச்சத்தை போக்க தமிழக முதல்வர் அவர்கள்   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Back to top button