கலால் பிரிவு

உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யும்  பழனி ( FL.2 legend Recreation & sports Club) மனமகிழ் மன்றம்!மதுபாட்டில் வாங்க அலைமோதும் மது பிரியர்கள் கூட்டம் ! வைரல் வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில்   ( legend Recreation & sports Club) இல் உறுப்பினர்கள் இல்லாதவர்களுக்கு சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை! பழனியில் அலைமோதும் மது பிரியர்கள் கூட்டம் !
வைரல் வீடியோ!

தமிழ்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் வினியோகம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், சப்தமில்லாமல் எப்.எல்.2 மதுக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில், எப்.எல்.2 வகை மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக் கடைகளின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மட்டுமே, ஆங்காங்கே இருந்தன. தற்போது   எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 15க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் பழனி நகருக்குள் சுமார் ஐந்து  FL.2
மனமகிழ் மன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.
மனமகிழ் மன்றங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டாலும், தற்போது பழனியில் செயல்பட்டு வரும் FL2 கிளப் பாரில் மறைமுகமாக  மதுபான விற்பனைக்கடைகளாக செயல்பட்டு வரும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
பழனியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும்.
ஆனால்
அரசின் விதிமுறைகளை மீறி, பழனியில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு தனியார் மதுபானக் கடைகள் போல் விற்பனை செய்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மது பிரியர்களைக் கவரும் வகையில்  ஒரு மதுபாட்டில் வாங்கினால் பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்து  தற்போது கூட்டம் கூட்டமாக  வரும் மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி குடித்து விட்டு செல்கின்றனர்.
எஃப் எல் 2 மதுபானக்கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும். குறிப்பாக உயர்தர மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால்   24 மணி நேரமும் FL2  மதுபான கடைகளில்  விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பாக டாஸ்மார்க் கடையில் விற்கும் சாதாரண மதுபானங்கள் மற்றும் பீர் பாட்டில்  விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றன.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் காவல்துறை கலால் துறை மாவட்ட ஆட்சி நிர்வாகம் வருவாய்த்துறை ஆகியவற்றில் பணியில் இருக்கும் எந்த அதிகாரிகளும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

மதுவையும் போதை பொருளையும் ஒழிப்போம் என தொடர்ந்து தமிழக அரசால் விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில்
டாஸ்மாக் மதுபானக்கூடங்களுக்கு மாறாக   FL2  மதுக்கடைகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் FL2
மனமகிழ் மன்றம் (Recreation Club) அனுமதி பெற, அது ஒரு சங்கம் அல்லது கழகமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகளிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும், முறையான காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மது அருந்தும் இடம் பிரிக்கப்பட்டு, விதிகளை மீறாமல் செயல்பட வேண்டும். இவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால்
தற்போது
FL2
மனமகிழ் மன்றம் (Recreation Club) அமைந்திருக்கும் இடத்தையும், விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கி வரவருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மனமகிழ் மன்றம் என்பது ஒரு பொழுதுபோக்கு மன்றம் என்ற பெயரில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்யும் இடமாக மாறக்கூடாது  என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Back to top button