மூன்று கோடி மதிப்புள்ள 300 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாக இருந்த மோசடி நபர் 3000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் வயது 50 .

இவர்
சுந்தரபாண்டியன் அண்ட் கோ என்ற பெயரில்
அடகு கடை நடத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் கொடுத்து நிதி நிறுவனம்அதிபராக வலம் வந்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு
நகையை அடகு வைத்த பொதுமக்கள் நகை திருப்புவதற்கு ரசீதையும் பணத்தையும் ஜீவானந்தத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் ஜீவானந்தம் நகை அடமானம் வைத்த ரசிதையும் அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு நகையை தருவதாக கூறி பல நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். ஜீவானந்தம் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்து நம்மளை ஏமாற்றி வருகிறார் என நகை அடமானம் வைத்த பொது மக்கள் தெரிந்து கொண்டு தொடர்ந்து ஜீவானந்தனிடம் கேட்டு வந்த நிலையில்
ஜீவானந்தம் .
பொதுமக்கள் அடகு வைத்திருந்த

சுமார் 300 பவுன் நகைகள் மற்றும் ஏல சீட்டு பணம் பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றி குடும்பத்துடன் இரவோடு இரவாக தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இந்தத் தகவல் தெரிந்து பணத்தை நகையை இழந்த பொதுமக்கள் அனைவரும்

சோழவந்தான் காவல்துறையில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட சோழவந்தான் காவல்துறையினர் தலைமறைவான ஜீவானந்தத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிசோழவந்தான் இரும்பாடிக்கு வராமல் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் 11/01/26 ஞாயிற்றுக்கிழமை அன்றுதமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு பணம்
ரூ 3 ஆயிரம் வாங்குவதற்கு தலைமறைவாக இருந்த

ஜீவானந்தத்தின் தாயார் ஜானகியம்மாள் வயது 75 சோழவந்தான் இரும்பாடி நியாயவிலை கடைக்கு காரில் வந்துள்ளார் .
இதை பாத்த இரும்பாடி ஊர் பொதுமக்கள்

ஜீவானந்தத்தின் தாயார் ஜானகியம்மாள் மற்றும் அவர் வந்த காருடன் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவந்தான் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்பு

மோசடி மன்னனின் தாயார் ஜானகியம்மாளை சோழவந்தான் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
சோழவந்தான்
காவல் நிலையம் முன்பு பணம் மற்றும் நகையை இழந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடி ஜானகிராமன் நகைக்கடையில் நகையை அடகு வைத்த ரசீது மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டிய
அட்டையை காண்பித்து முற்றுகையிட்டனர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த மதுரை குற்றப்பிரிவு போலீசார் ஜானகியம்மாளிடம் ஜீவானந்தம் குறித்து விசாரித்து வருகின்றனர். எட்டு வருடங்களுக்கு முன்பு 300 பவுன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான ஜீவானந்தம் குறித்து தற்போது வரை எந்த
தகவலும் தெரியாததால் பொதுமக்கள் தாங்கள் இழந்த பணம் நகை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காவல்நிலைய வாசலில் காத்திருந்தது பரிதாபமாக இருந்தது .
8 ஆண்டுகளுக்கு முன்பு பணம் மற்றும் நகைகளை இழந்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் கொடுத்த புகாரின் பெயரில் சோழவந்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முறையாக விசாரணை செய்திருந்தால் ஜீவானந்தத்தை பிடித்து பணம் மற்றும் நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் காவல்துறையின் அலட்சியப் போக்கால் ஜீவானந்தம் ஏமாற்றி மோசடி செய்த பணம் நகையை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி நகை படங்களை மோசடி செய்து தப்பி ஓடி தலை மறைவாக இருப்பவர்களின் மீது காவல்துறையினர் பாரபட்சம் பார்க்காமல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பணம் மற்றும் நகைகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பணம் நகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கும் நிலையில்
பொறுத்திருந்து பார்ப்போம் சோழவந்தான் காவல்துறையினரின் நேர்மையான நியாயமான நடவடிக்கையை!




