100 தயாரிப்பாளர்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னதாக மகளிர் ஆணையத்தில் பெண் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்! நடந்தது என்ன!?

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுக்குழு நடத்தாததற்கு என்ன காரணம் என பெண் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேஸ்வரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பலமுறை விளக்கம் கேட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
என்பதால் இது சம்பந்தமாக சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் கொடுத்ததாகவும் அந்தப் புகாரின்
அடிப்படையில் சங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் சங்க விதிகளை பெண் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மீறிவிட்டதால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கம் செய்யக் கூடாதுன்னு கேட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தயாரிப்பாளர் ராஜேஸ்வரிக்கு நோட்டிஸ் வந்ததாகவும்
அந்த நோட்டீஸிற்கு அனுப்பிய பதிலில் பொதுக்காசை எடுத்து மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகளை குறிப்பிட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதன் பின்பு
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தயாரிப்பாளர் ராஜேஸ்வரியை நேரில் வரச் சொன்னதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ராஜேஸ்வரி நேரில் சென்றதற்கு ராஜேஸ்வரி மன்னிப்பு கேட்க சொல்லியுள்ளார்கள்.
நான் என்ன தப்பு செய்தேன் மன்னிப்பு கேட்ப்பதற்கு என ராஜேஸ்வரி மறுத்ததாகவும் அதற்காக ராஜேஸ்வரியை பல வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தார்கள் என்றும்.
அதன் பின்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 100 தயாரிப்பாளர்கள் முன்பு மன்னிப்புக் கேட்கச் சொன்னதாகவும் வேறு வழியில்லாமல்
மன்னித்து விடுங்கள் என கூறியதற்கு கடிதம் மூலம் மன்னிப்பு கடிதம் எழுதித் தரச் சொன்னதாகவும் அதன் பின்பு எழுதிய கடிதத்தை தலைவரிடம் கொடுத்தபோது தலைவர் செயலாளரிடம் கொடுக்கச் சொன்னதாகவும் செயலாளர் தலைவரிடமே கொடுக்கச் சொன்னதாகவும் மாறி மாறி கூறியதாகவும் அது மட்டும் இல்லாமல் ஏளனமாக சிரித்ததாகவும், இது பெரிய அவமானமா இருந்ததாகவும்
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி சும்மா விடக்கூடாது என மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்ததாகவும்
மகளிர் ஆணையம் சங்க செயலாளர்களான ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவருக்கும் சம்மன் அனுப்பி ராதாகிருஷ்ணைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டதற்கு,
எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை அப்படி வந்தால் வந்தா, நாங்க பார்த்துக்கறோம்’ என சொன்னதாகவும் பெண் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
எது எப்படியோ திரைப்படம் தயாரிப்பாளர் சங்க விதிகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது சட்டரீதியானது. பழக்கம் கேட்டு அனுப்பும் நோட்டீஸிற்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் சங்கத்திலிருந்து நீக்கப்பட மாட்டார்கள். ஆனால் பெண் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது எதற்காக என்ற விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தால் மட்டுமே உண்மை என்ன என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரிய வரும்.




