உயிரை பணயம் வைத்து மரண குழிகளில் பயணிக்கும் கிராம மக்களின் அதிர்ச்சி வீடியோ!
கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி!
விபத்துகளை தடுத்து சாலை பாதுகாப்பை உறுதிபடுத்த
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் புழுதி பறக்காமல் இருக்க தார்ப்பாய் மூலம் மூட வேண்டும்.சாலைகளில் தண்ணீர் தெளித்தல் வேண்டும்
அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் இரவு நேரங்களில் கனிம வளங்களை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்ல தடை விதித்து அமல்படுத்தப்பட்டாலும்,
அந்த விதிகளை மீறி
இரவு பகலாக அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் விதிகளை மீறி செல்வதால் சாலைகளின் நிலை மோசமடைந்து வருகிறது, இதனால் கிராமப்புற பொதுமக்கள் உயிரை பயணம் வைத்து சாலைகளில் செல்வது ஒரு தொடர்ச்சியான சவாலாக உள்ளது.
விதிமுறைகள் இருந்தும்
இந்த விதிகளை எதையுமே கடைபிடிக்காமல் காட்டில் பறக்கவிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக டாரஸ் லாரிகள் இரவு பகலாக இயக்கப்படுவதாக கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து கிராமப்புற இணைப்பு சாலை வடக்கு தாதநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்கிறது. இந்த சாலை சுமார் ஐந்து கிலோ மீட்டர் இருக்கும். இந்த கிராமத்தில் சுமார் 350 வீடுகள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் பல கல்குவாரிகள்
செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. ஆகையால் தினந்தோறும் இந்த கிராமத்திற்கு செல்லும்
சாலைகளில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். அப்படி செல்லும்
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கனரக டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக சுமார் (40 டன் முதல் 60 டன் வரை )கனிம வளம் எடுத்துச் செல்வதால் கடந்த ஒரு வருடம் முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது மிகவும் சேதமடைந்து மண் சாலையாக மாறி தற்போது குண்டும் குழியுமாக பெரிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சமீப காலமாக. வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்களில் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதும் இதனால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அச்சத்தில் கிராம பொதுமக்கள் இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில்
காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் பாதுகாப்பில்லாமல் அதிவேகமாக செல்லும்போது அப்பகுதி முழுவதும் புழுதி பறப்பதால் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் சாலை ஓரமாக சத்துணவு கூடம்(அங்கன்வாடி மையம்). அமைந்திருப்பதால் கனிம வளம் ஏற்றுச்செல்லும் கனரக டாரஸ் லாரிகளிலிருந்து பறக்கும் தூசியால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் அதே சாலையில் துணை சுகாதார நிலையம், அரசு தொடக்க ஆரம்பப்பள்ளி, ரேசன் கடை இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் செல்லும்போது பறக்கும் புழுதியால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளங்களை எடுத்துச் செல்லும்போது வரும் அதிர்வு சத்தத்தால் வீடுகளில் தூங்க முடியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் இந்த சாலை ஓரம் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பதால் கனரக டாரஸ் லாரிகள் செல்லும் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு அந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதால் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் நலன் கருதி
கிராம சாலைகளில் சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் கிராமப்புற சாலைகளில் கனரக டாரஸ் லாரிகள் இயக்க தடை விதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பழனி வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை புகார் மனு புகார் அனுப்பியதாகவும் ஆனால் அந்தக் கோரிக்கை மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ கிராமப்புற சாலைகள்
கிராமப்புற மக்கள் அருகில் நகரங்களுக்கு விரைவில் செல்வதற்கும் மருத்துவமனைகளுக்கு விரைவில் செல்வதற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விரைவில் செல்வதற்கும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் விரைவில் செல்வதற்கும் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த சாலைகளில் சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக டாரஸ் இயக்கப்படுகின்றனர். இதனால் சாலைகள் சேதம் அடைவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று சேதம் அடைந்து குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் கல்குவாரிகளிலிருந்து கனிமங்கலம் ஏற்றிச்செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு மாற்றுப்பாதையில் செல்லுமாறு உத்தரவிட வேண்டும்
பேட்டி :- 1,திருவேங்கடபதி 2,ரங்கராஜன்
ஆனால் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் இரவு நேரங்களில் கனிம வளங்களை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்ல தடை விதித்து அமல்படுத்தப்பட்டாலும்,
அந்த விதிகளை மீறி
இரவு பகலாக அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் விதிகளை மீறி செல்வதால் சாலைகளின் நிலை மோசமடைந்து வருகிறது, இதனால் கிராமப்புற பொதுமக்கள் உயிரை பயணம் வைத்து சாலைகளில் செல்வது ஒரு தொடர்ச்சியான சவாலாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இரவு நேரங்களில் (எ.கா., இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை) சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதித்தல்.
கனிமங்கள் கடத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்
தடுப்பு சுவர்கள் அமைத்து கனரக வாகனங்கள் செல்லாதவாறு தடை ஏற்படுத்த வேண்டும்
இந்த பிரச்சனையைத் தீர்க்க கடுமையான சட்ட அமல்படுத்தப்பட்டாலும் கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
அதேபோல் வாகன உரிமையாளா்கள் தாா்மிகப் பொறுப்பேற்று அதிக பாரம் ஏற்றுவதில்லை என்ற முடிவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் . இதைப் பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி வரும் கனிம வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் அந்த வாகன உரிமையாளா்கள் மீது குற்றவயல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




