Uncategorized

கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் வட்டாட்சியர் அலுவலகம்!
திணறும் சென்னை அமைந்தகரை வட்டாட்சியர்!
அதிர்ச்சி தகவல்!


தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் வருவாய்த் துறை மூலம் தான் வழங்கமுடியும். வருவாய்த் துறை ஒன்றுதான் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளது.
தேர்தல், வாக்காளர் அடையாள அட்டை, நிலம் சம்பந்தமானவை, வரி வசூல், தீவிபத்து ஏற்பட்டால் அறிக்கை கொடுப்பது, நிவாரணம் வழங்குவது, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், ஜாதி மோதல், வரதட்சிணை சாவு, கேட்பாரற்ற சடலம் குறித்த புகார் என இப்படி ஏராளமான பணிச் சுமை உள்ளது.
ஆகவேதான் வட்டாட்சியர் அலுவலகங்களில்
இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும்
இடைத்தரகர்கள் ஆதிக்கத்தைக் குறைக்க, பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால்
சென்னை  அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில்


இடைத்தரகர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்றால் ஊழியர் யார், இடைத்தரகர் யார் என்று தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
இடைத்தரகருக்கு இருக்கும் அதிகாரம், அங்கு உள்ள வட்டாட்சியர்களுக்கும் ஊழியர்களுக்கும் கிடையாது என்கின்றனர் அனுபவப்பட்ட பொதுமக்கள்.

நிலத்துக்கு
பட்டா கேட்டு போனால் வட்டாட்சியரை சுயமாக பணி செய்ய விடாமல் இடைத்தரகர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும்
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள், அந்த இடத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதற்கு ஆதாரமாக நீதிமன்றத்திலும், வருவாய்த் துறையிலும் பட்டா கேட்டு, இடத்தை சொந்தம் கொண்டாட அடித்தளம் அமைத்து தருவது வருவாய்த் துறையால் வழங்கப்படும் பி.நமூனா சான்றிதழாகும்.
இந்த பி.நமூனா மூலம் சம்பந்தப்பட்டவருக்கு, ‘அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள். இந்த நமூனா பெற்ற 15 நாளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என்பதுதான் நமூனாவின் சாரம்.
இந்த பி.நமூனா சான்றிதழ் தான் தற்போது இடைத்தரகர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பண மழையாக பொழியச் செய்கிறது.
கருப்பா, வெள்ளையா எனக்கு கேட்டு விட்டு
பத்திரம் சரியில்லை, தாய்பத்திரம் கொண்டுவர வேண்டும், தொடர் பத்திரம் தேவை, பத்திரத்தில் உள்ள அளவுக்கும், நிலத்தின் அளவுக்கும் ஒத்துப் போகவில்லை. அது இல்லை, இது இல்லை  என கட்டப்பஞ்சாயத்து செய்து
பி.நமூனாவில் உள்ள பெயருக்கும், வருவாய்த்துறையில் உள்ள ஆவணங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் நகல் எடுத்து நிலத்தின் மதிப்பை பொறுத்து1 லட்சம் ரூபாயில் இருந்து 1கோடி ரூபாய்வரை கூட
பி.நமூனா சான்றை  விற்பதாகவும் இதற்காகவே அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்
நில ஆவணங்கள்,
பட்டா மாறுதல், வாரிசுச் சான்றிதழ் போன்ற சாமானிய மக்களின் தேவைகளுக்கு,  இடைத்தரகர்களைச் நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு
சாதாரண மக்களிடம், அரசு கட்டணத்தை விடப் பல மடங்கு பணத்தை இடைத்தரகர்கள் வசூலிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் பண விரயம் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் குறிப்பாக
அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகங்களில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள்  இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ பொதுமக்களிடம் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து  செய்து பணம் பறிக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் அச்சமின்றி அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு
இடைத்தரகர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க
அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை  அமைத்து  இடைத்தரகர்களின் முறைகேடுகளைத் தடுக்க வருவாய்த்துறை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை ஆணையர் ஆகியோர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்திய தண்டனைச் சட்டம் (1860), பிரிவு 353 என்பது பொதுத்துறை ஊழியரின் கடமைகளைத் தடுத்து நிறுத்துவது  அல்லது கடமையில் இருந்து விலக்க முயற்சிப்பவர்களுக்கு, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button