லஞ்ச ஒழிப்புத்துறை

சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை புதுக்கோட்டை அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்கள்!
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை எப்போது!?

தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க அரசு கடுமையான ஆன்லைன் கண்காணிப்பு முறைகளைக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 43 சார் பதிவாளர்களை பதிவுத் துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கீரனுார் சாலையில் சிவன் கோவில் தெருவில் அமைந்துள்ளது சார் பதிவாளர் அலுவலகம். 

அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில்

அன்னவாசல் சார்பதிவாளர் ஸ்ரீகாந்த்

தற்போது சார் பதிவாளராக இருக்கும் ஸ்ரீகாந்த் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே அன்னவாசல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக இருந்தபோது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் செயல்முறை கடிதம் நி.மு 5210/2020/A1/2021  நாள் 26.8.2021இன் படி 25/11/2021 இல் அன்னவாசல் சார் பதிவாளர் இடம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு நகளுடன் கொடுத்த ஆவண எண் (14/1961 ). கூட்டு பட்டா நகல் ( 232) ஒப்புதல் ரசீது எண் 27/2021 புல எண் 207/12, 207/16 ஐ உரிமை கோர இயலாது என உத்தரவு இருந்தும்

முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பு இருந்த

அன்னவாசல் சார் பதிவாளர் ஜஜிதா பேகம்

பெண் சார்பதிவாளர் ஜஜிதா பேகம் இருந்த போதும் முறைகேடான பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

சார்பதிவாளர்கள் -ஸ்ரீகாந்த், ஜாஜிதா பேகம் ஆகிய இரண்டு பேரும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததற்கு
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் (-DR) குமார் மற்றும் DR.புவனேஸ்வரி. ஆகியோரிடம்
புகார் கொடுக்கப்பட்டு
இதுவரை இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல்- ஸ்ரீகாந்த், ஜாஜிதா பேகம் ஆகிய இரண்டு பேரும் தடை உத்தரவை மீறி முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும்
புதுக்கோட்டை பெரியார் நகர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஏ பி ஜி பி நுகர்வோர் உறுப்பினரான எஸ் கே ராஜு  முறைகேடான பத்திரப்பதிவு நடந்ததாக ஆதாரத்துடன்  குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

முறைகேடாக பத்திரப்பதிவு எப்படி நடந்தது என்பதை எழுத்துப் பூர்வமாக ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.


அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா,
மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ச.சூசையாப்பிள்ளை அவர்கள் 1961-ல் மேலூர் கிராம புல எண் : 207/D பைமாஸ் நம்பர் 1152-ல் 540 பெரிய குழி கிரையம் பெற்று விவசாயம் செய்து வந்த நிலம் புதிய புல எண் 207/12, 207 / 16 என உட்பிரிவு செய்து அனுபவத்தில் இருந்த நிலத்தை ரெங்கராஜ் என்பவர் 2011-ல் கிரையம் பெற்றதாக பட்டா பெற்தை ரத்து செய்ய 18.11.2019 -ல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்  விசாரனை மேற்கொண்டு புலத்தினை தனிக்கை செய்து ஆவணங்கள் அடிப்படையில் 207/13 A, 1.23.0- ஏர்ஸ் பட்டா எண்: -949 என உள்ள நிலம் மனு தாரருக்கு பாத்தியப்பட்டது என செயல்முறை கடிதம் நி.மு. 5210 / 2020/ A1 /2021 நாள்: 26.08.2021 உத்தரவு கடிதம் வழங்கியுள்ளார்.

அண்ணாமலை செட்டியார், ராமசாமி செட்டியாருக்குச் சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர்  தாலுகா, சத்தியமங்களம் வட்டம், மேலூர் கிராமம் பழைய புல எண்: 207/D பைமாஸ் நம்பர் – 1152 புதிய புல எண்: 207/13-ல் கண்ட மொத்த பரப்பு 5. 27.5 ஹைக்டர் ஏர்ஸ் 13.5 ஏக்கர் நிலத்தை
1956-ல் சின்னையா என்பவர் பைமாஸ் நம்பர் 1152-ல் 1133 -பெரிய குழி நிலத்தை அண்ணாமலை செட்டியாரிடம் கிரையம் வாங்கியுள்ளார்.

1961-ல் சா.சூசையாப்பிள்ளை அவர்கள் அண்ணாமலை செட்டியாரிடம் பைமாஸ் நம்பர் 1152-ல் 540 – பெரிய குழி கிரையம் வாங்கியுள்ளார்.

மேற்கண்ட 5.27.5 ஹெக்டர் ஏர்ஸ் 13.5 ஏக்கருக்கும் கூட்டு பட்டா எண்: 232 ஏற்பட்டதில்
கூட்டுப்பட்டாதாரர்கள் :
சின்னையா
மற்றும் சின்னையாவின் மகன்கள் சூ. குழந்தைசாமி
சூ துரை, சூ. சாமி கண்ணு ஆகிய நான்கு பேர்
மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் அண்ணாமலை செட்டியார் எஸ் ஆர் ஏ எம் ராமசாமி செட்டியார் ஆகியோர் பெயரில் சுமார் 13 ஏக்கர் நிலம்  6 நபர்கள் பெயரில் கூட்டு பட்டா (எண்: 232)  இருக்கும் நிலையில் சின்னையா (மகன்) ரெங்கசாமி -2007 புல எண்: 207/13-ஐ. 207 / 13 Aயை (1.23.0 ஹெக்டரை)கூட்டுப் பட்டாவில் உள்ள பெயர்களை  மறைத்து,புல எண் 207/13 A10.70.5 ஏர்ஸ் 1 3/4 ஏக்கரும் புல எண்: 13 A2-0.50.5 ஏர்ஸ் 1 1/4 ஏக்கராக உட்பிரிவு செய்து பட்டா 949 பெற்று புல எண் 207/13 A 10.70.5 ஏர்ஸ் 13/4 ஏக்கரை 24.10.2007 ல் ஆவண எண்: 1582/2007 கணேசன் என்பவருக்கு போலி ஆவணங்கள் மூலம் அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலம் சம்பந்தமாக ஏற்கனவே  அன்னவாசல் சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்
இந்த நிலத்தின்
ஆவணங்கள் அடிப்டையிலும் வருவாய் கோட்டாச்சியர் அவர்களின் செயல் முறை கடிதம் நி.மு 5210/2020/A1/2021 : 26.08.2021 – 6 4 25.11.2021 -பதிவாளரிடம் எங்களது ஆவண எண்: 1470/1961 நகல் RDO உத்தரவு நகல், கூட்டுப் பட்டா 232 நகல் – SLR நகல்களுடன் SBI வங்கியில் தடை மனு விற்குரிய பணம் செலுத்திய ரசீதுடன் தடை மனு சமற்பித்து – (ஒப்புதல் ரசீது எண்: 27/2021 ) வழங்கி பெற்று இருக்கும் நிலையில்,

ரெங்கசாமி மகன்கள்  ராஜேந்திரன் சுப்பிரமணி, இருவரும் கூட்டு பட்டாதார்கள் குழந்தைசாமி, . துரை, . சாமிக்கண்ணு, சி.அ.அ. அண்ணாமலை செட்டியார், 5.SRAM ராமசாமி செட்டியார் ஆகியோர் பெயர்களை மறைத்து புல எண் 207/13 A2 0.50.5 ஏர்ஸ்  207/27,207/28 8,207/15 B3, 207/25 B, 207 / 26 2 பெயரில் சாமிநாதன் துணை தாசில் தாரரிடம் 2020 ல் பட்டா பெற்று கீழ் கண்டவாறு கிரையம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

1.அன்னவாசல் சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றரிக்கை விதிமறைகளை நன்கு தெரிந்திருந்தும் எங்கள் நிலம் புல எண் : 207/13 A 2,0.50.5 ஏர்ஸ் நிலத்தை வேறு நபருக்கு பதிவு செய்யும் முன் தடை மனுதாரருக்கு தகவல் தெரிவித்து ஆவணங்களை பரீசிலனை செய்யாமல் ஆவண எண்: 459 / 2022 நாள் 22.10.22 ல் கதிரவன் என்பவருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார். (பட்டா எண்: 1872)

2. 24.11.2022 -ல் மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுத்து மாவட்ட பதிவாளர் அவர்கள் சார் பதிவாளர் திரு.ஸ்ரீகாந்த் அவர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்காததால், மேலும் அன்னவாசல் சார்பதிவாளர் ஜாஜிதா பேகம் அவர்கள் பதிவுத்தலைவர் சுற்றறிக்கை விதி -முறைகளை நன்கு தெரிந்திருந்தும் கடைப்பிடிக்காது. தடை மனுதாருக்கு எவ்வித தகவல் தெரிவிக்காமல் சூசகமாக புல எண்: 207/13 A10.70.5 ஏர்ஸ் எங்கள் நிலத்தை 13.09.2023 – ல் முத்துமாணிக் -கத்திற்கு பதிவு செய்துகொடுத்து (பட்டா எண்: 2031) பெற்றதால்.

புல எண்:207/13 A1. எங்கள் நிலத்தில்

கனிம வளத்துறை இயக்குனரின் அனுமதி பெறாமல் 1 ஏக்கரில் 50 அடி ஆழத்திற்கு மேல் சாய்நிறுவனர் பழனிச்சாமி, தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் கதிரவன் மற்றும் சிலருடன் சேர்ந்து கனிமம் எடுத்ததால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நான் கடந்த 01.08.2023 – ல் குற்ற ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனர் சென்னை அவர்களிடம் புகார் கொடுத்து அப்புகார் விசாரனை நடவடிக்கைக்கு பதிவுத்தலைவர் அவர்களுக்கு 03.09.2024 -ல் அனுப்பி பெற்றுக் கொண்ட பதிவுத்தலைவர் அவர்கள் புகார்தாரர் என்னை மட்டும் 15.7.2025-ல் விசாரித்து ஆவணங்களுடன் அறிக்கை பெற்றுக்கொண்டு 2-ஆண்டு களுக்கு மேலகியும்  சார்பதிவாளர்கள் .ஸ்ரீகாந்த், மற்றும் ஜாஜிதா பேகம் ஆகிய இருவரும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கொடுத்த புகாரின் பெயரில்  உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்

புல எண்: 207/13 A1 0.70.5. ஏர்ஸ்ல், 1 3/4 ஏக்கரில் 1 ஏக்கர் 50 அடி ஆலத்திற்கு மேல் உதவி இயக்குனரிடம் அனுமதி பெறாமல் கனிமம் எடுத்தவர்கள் மீது நவடிக்கை எடுக்க போட்டோ ஆதாரங்களுடன் 04.08.2023 ல் நேரிலும், 07.08.2023, பதிவுத்தபாலிலும், உதவி இயக்குனர் அவர்களிடம் புகார் கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்

நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுநீதி முகாமில் 05.10.2024 -ல் புகார் கொடுத்து குழுத்தலைவர் / வட்டாச்சியர் மற்றும் உதவி இயக்குனர் அவர்களின் நடவடிக்கைக்கு ந.க.எண்: 1030/பு.ம.சு/2024 நாள்: 14.10.2024 கடிதம் அனுப்பி பெற்றுக்கொண்ட குழுத் -தலைவர்கள் நடவடிக்கை எடுக்காததால், மீள மாவட்ட ஆட்சியரிடம் 08.09.2025.23.02.2026, 01.06.2026,27.07.2026 ஆகிய தேதிகளில் மனு கொடுத்து இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடைபெறவில்லை என சட்டமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூறி வந்தாலும் கடந்த காலத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர்கள் மீது தற்போது உள்ள

பத்திரப்பதிவுத் துறை தலைவர் மற்றும்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மற்றும் கூடுதல் பொறுப்பு இயக்குனர் விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


குறிப்பாக அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது சார் பதிவாளராக  இருக்கும் ஸ்ரீகாந்த்  இதற்கு முன்பு சார் பதிவாளராக இருந்த திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும்  ஸ்ரீகாந்த் மீது  பல புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் மீது உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்
புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள பத்திரப்பதிவு ஐ ஜி அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு விசாரணையில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Back to top button