காவல் செய்திகள்

பழனி இடும்பன் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த
குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேரடியாக களத்தில் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திண்டுக்கல் மாவட்டம்
பழநி சிவகிரிப்பட்டியில் ராஜேஸ்வரி அம்மன் உடன் இடும்பன் கோயில் அமைந்துள்ளது.

200 ஆண்டுகள் பழமையான இக்கோயில்
தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்குச் சமீபத்தில்

புதிய செயல் அலுவலராக நரசின்னம் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த மே மாதம் அவர் முறைப்படி கோயிலின் சொத்துக்கள், நகைகள் மற்றும் காணிக்கை விபரங்கள் அடங்கிய பதிவேடுகளைக் கொண்டு நேரடி தணிக்கை மற்றும் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கோயில் பாதுகாப்பு அறையில் இருக்க வேண்டிய

35 கிராம் தங்க ஆரம், 31 கிராம் தங்க நெக்லஸ், 19 கிராம் தங்க அட்டிகை, 57 கிராம் தங்க செவ்வந்திப்பூ மாலை என மொத்தம் சுமார் 142 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த செயல் அலுவலர்
இதுமட்டுமன்றி, கோயிலின் பொது இருப்பில் வைத்திருக்க வேண்டிய மற்றும் சில முக்கிய நகைகளும் கணக்கில் வராமல் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, செயல் அலுவலர் நரசின்னம் உடனடியாக இந்த மோசடி குறித்துத் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, பழனி நகர காவல் நிலையத்தில் இடும்பன் கோயில் நகைகள் திருட்டு போனது குறித்து முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், கோயில் ஊழியர்கள் மற்றும் பழைய நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போது
நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவிகள் அப்போதைய செயல் அலுவலர் விமலாவின் பொறுப்பில் இருந்ததால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, பழனி நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது (Crime No. 456/2026). ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் நகைகளை திருடிச் சென்ற குற்றவாளி யார் என பழனி நகர குற்றப்பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த நிலையில்
காவல்துறையின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து,
நகைகள் மாயமான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பரம்பரை அறங்காவலர் ஏ. ராஜா

உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தொடர்பாக, பழனி கோயில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அது மட்டுமில்லாமல்
பழனி இடும்பன் கோயில் அலுவலகத்தில் இருந்து மாயமான வெள்ளி வேல் மற்றும் தங்க நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நகைகளை திருடியவர்களை கண்டுபிடித்து, நகைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை அறிக்கை அளிக்காவிட்டால் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,

திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பழனி இடும்பன்
கோவிலுக்கு நேரடியாக சென்று கோவிலில் நகைகள் மாயமான அலுவலகப் பாதுகாப்பு அறை மற்றும் ஆவணங்களை மிகத் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார்.
நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் பெட்டகங்கள், சாவி பராமரிப்பு முறை, பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்போதைய ஊழியர்களிடம் விசாரணை செய்தார்.

நகைகள் திருடு போன சம்பவம் பற்றி கோயில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும், பக்தர்களுக்கு தெரியவந்தததால் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல் நகைகள் திருடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பக்தர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button