ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் ஒரு லட்சம் வரை அவதாரம்! சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை!

சோழவந்தான் பேரூராட்சி பகுதிகடைகளில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு எச்சரிக்கை நடவடிக்கை!
ஜூலை 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
ஜூலை 1, 2022 முதல் நாடு முழுவதும் குறைந்த பயன்பாடு மற்றும் அதிக குப்பைகளை ஏற்படுத்தும் வகையிலான, சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்ற தெளிவான அழைப்பு விடுத்த நிலையில், இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளை அறிவித்தது
சோழவந்தான் பேரூராட்சி பகுதிகடைகளில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு,எச்சரிக்கை ! மீறினால்நடவடிக்கை!!

மதுரை மாவட்டம் , சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பயன்பாடுகள் தவிர்க்கும் வகையிலும் தமிழக அரசு உத்தரவுபடி ஜீன் 30ம் தேதிக்கு பின் தரமற்ற, மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்களை பொதுமக்களோ,வியாபாரிகளோ பயன்படுத்த கூடாது என்றும் அப்படி பயன் படுத்தும், விற்பனை செய்யும் நபர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,அத்துடன் அபராதமும், தண்டனை பெற வழிவகை செய்ய படும், என்று கடை வீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும், எச்சரிக்கை செய்து ஆய்வு செய்தனர்,


அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைக்கபட்டதை அறிந்து பறிமுதல் செய்தார்கள்,இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன் தலைமையில்,சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விநியோகிக்க கூடாது என்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர், பூவலிங்கம், வெங்கடேசன், சந்தோஷ், செல்வி, ராணி,என அலுவல பணியாளர்கள் உடன் இருந்தனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் (தெர்மாகோல்), பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், ஃபோர்க்ஸ், ஸ்பூன்கள் போன்ற கட்லரிகள் பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்வீட் பாக்ஸ்களைச் சுற்றி பேக்கிங் செய்தல், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவை அடங்கும்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021, செப்டம்பர் 30, 2021 முதல் எழுபத்தைந்து மைக்ரானுக்கும் குறைவான தடிமன் மற்றும் நூறுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடை செய்கிறது மற்றும் இருபது மைக்ரான்கள் டிசம்பர் 31, 2022 முதல் அமலுக்கு வரும்.
பிளாஸ்டிக் அரக்கனின் அட்டகாசத்தை இந்தத் தொடர் முழுவதும் பார்த்தோம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.
நம்மில் வியாபித்துக் கிடக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். மருத்துவம், வணிகம், அறிவியல் உள்ளிட்டவற்றில் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதும் பிளாஸ்டிக்கே. எனினும் அதன் குறைந்த எடை, மலிவு விலை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களே அதன் தாராளப் பயன்பாட்டுக்குக் காரணமாகிஇயற்கையை அழித்து வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் எளிதான மாற்றுப் பொருட்கள் கிடைக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றை, நாம் மனது வைத்தால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.
அன்றாட வாழ்க்கையில்…
பழங்கள், காய்கறி, பூக்கடைக்குச் செல்லும்போது துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பை என்றில்லை, இப்போதெல்லாம் விதவித டிசைன்களில் நவீன வடிவங்களில் பைகள் வந்துவிட்டன. இவை குறைந்த எடையில் நீடித்த உழைப்பைக் கொடுக்கும். சணல் பைகள் சற்றே விலை உயர்வு என்றாலும் பல முறை பயன் தரும். 90-களில் அதிகம் புழக்கத்தில் இருந்த. நீண்ட வருடங்களுக்குப் பயன்படுத்த முடிகிற ஒயர் கூடைகளை வாங்கலாம்.
எடை குறைவான பொருட்கள் வாங்குமிடங்களில் (ஃபேன்சி ஸ்டோர், மருந்தகங்கள்) பிரவுன் காகித உறைகளைப் பயன்படுத்தலாம். சிறியதும் பெரியதுமான உறைகள், 5 கிலோ எடை வரை தாங்கும்.
உணவகம், மளிகைக்கடைகளில்…
வாழை இலை, தையல் இலை, பாக்கு மட்டை, சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். அரச இலை, ஆமணக்கு இலை, மந்தாரை இலை (தொன்னை) ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறையும் வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் அடிவாழையின் பட்டைகளை ஒன்றாக வைத்துத் தைத்துப் பயன்படுத்தினர். வட இந்தியாவில் டிம்பர் (Sal) மற்றும் ஆலமர இலைகளில் இருந்து உணவுத் தட்டுகளை உருவாக்குகின்றனர்.
இட்லி, தோசை, சட்னி உள்ளிட்ட வகைகளை வாழை இலையில் கட்டித் தரலாம். பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பார்சல் வாங்கச் செல்வதால், சாம்பார் வகைகளுக்கு மட்டுமாவது பாத்திரத்தை எடுத்துச்செல்வது நல்லது.
மளிகைக்கடைகள் பேப்பர், அட்டை ஆகியவை மூலம் பொருட்களைக் கட்டித் தருவது எளிது. நுகர்வோர்கள் கூடைகள் அல்லது கட்டப்பைகளை எடுத்துச்சென்று பொருட்களை வாங்கலாம். பேக்கிங் செலவும் மிச்சமாகும்.
சூப்பர் மார்க்கெட்டுகளில்…
சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கள் பொருட்களை அமுல் பட்டர் காகிதங்களில் பேக் செய்து விற்கலாம். அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை நவீன வடிவங்களில் வரும் தகர டின்களில் பேக் செய்து கொடுக்கலாம். காகித அட்டைகளில் (கேக் வைத்துத் தரப்படும் அட்டைகள்) பிளாஸ்டிக் பூச்சு இல்லாமல் நிரப்பித் தரலாம். பால், எண்ணெய் உள்ளிட்ட திரவப் பொருட்களை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்கள் அதே பாட்டிலுடன் மீண்டும் வாங்கும்போது விலையைக் குறைக்கலாம். பாத்திரம் கொண்டு வந்தாலும் குறைந்த விலை என்று அறிவிக்கலாம்.
உணவுப்பழக்கத்தில்…
கெட்டுப்போகாத வண்ணம் பேக்கிங் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மாற்று கிடைக்கும் வரை பிளாஸ்டிக் இருக்கும். உணவுமுறை மாற்றமும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும். இயற்கை உணவுகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என பழமையை நோக்கித் திரும்பும் நாம், இதிலும் நம் மூத்தோர்களின் நடைமுறையைக் கடைபிடிப்பது எளிதுதான்.
விரைவில் மட்கும் பயோபிளாஸ்டிக்குகள் என்று சந்தைக்கு வரும் பிளாஸ்டிக்குகளும் இயற்கையான சூழலில் மட்குவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றின் மட்கும் தன்மை உறுதிப்படுத்தப்படும் வரை, அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
குப்பை மேலாண்மையில்…
வீடுகளிலும் அலுவலகங்களிலும் மற்றும் குப்பைகள் அதிகமாகச் சேகரமாகும் இடங்களிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் இருக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்துப்போட வேண்டும். நகராட்சியும் இதை முறையாகக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளைப் பரவலாக்க வேண்டும். மட்கும் குப்பைகள், காய்கறிக் கழிவுகள், இலை, தழைகள், வீட்டுக்கழிவுகளை அரைக்கும் சிறு இயந்திரம் நடைமுறைக்கு வரவேண்டும். இதன்மூலம் குப்பை அள்ளுபவர்களே அவற்றைப் பொடியாக்கி வீடுகளுக்கு, பண்ணைகளுக்கு உரமாகத் தரலாம்.
வீட்டு விழாக்களில்…
நெகிழி இல்லா திருப்பூர்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும் ‘ட்ரீம் 20’ பசுமை அமைப்பு சில முக்கியமான முன்னெடுப்புகளைச் செயல்படுத்திவருகிறது. இதன் அமைப்பாளர் நந்தகுமார் ஏராளமான தகவல்களைக் கூறினார். அவர்கள் விழாக்களில், காபி, தேநீர் கொடுக்க எவர்சில்வர் டம்ளர்களைப் பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள். பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட அபாயங்களைப் படங்களுடன் கூடிய விழிப்புணர்வுப் பதாகைகள் கொண்டு விளக்குகின்றனர். ஐஸ்கிரீம், பழச்சாறு, இனிப்புகள் வழங்கக் கரும்புச் சக்கையால் செய்யப்பட்ட கப், டம்ளர்களையும் மரக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறார்கள்.
பேனர்களில்…
டிஜிட்டல் அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. டிஜிட்டல் பேனர்கள், ஒரு சதுர அடிக்கு சுமார் 9- 10 ரூபாய் என்ற அளவில் விற்பனை ஆகின்றன. இதற்கும் மாற்று உண்டு.
இடைவெளியே இல்லாத காடாத் துணி மூலம் பேனர் செய்யலாம். இதன்மூலம் அடர்த்தியாக அச்சிடமுடியும். காட்டன் பேனர்கள் சற்றே விலை அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தினால், விலை குறையும். துணிகளில் எழுதி, வரைந்து வாங்கலாம். அதுசார்ந்த தொழிலாளர்களும் பயன்பெறுவர். அவற்றை மீண்டும் மீண்டும் வரைந்து பயன்படுத்தலாம்.
பள்ளிகளில்…
குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுபவை நல்ல விளைச்சலைத் தரவல்லது. திருப்பூரில் இதுவரை 150-க்கு மேற்பட்ட பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து வாரத்துக்கு இருமுறை பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இதன் மூலமாக 45 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பெறப்பட்டுள்ளதாம்.
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அதிகக் கழிவுகள் அளிக்கும் வகுப்புக்கு விதை பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், மண் குவளைகளைப் பரிசாக அளிக்கின்றனர். மாணவர்களுக்கு இதுவரை 1 லட்சம் துணிப் பைகளை விநியோகித்துள்ளனர்.
மற்றவர்களிடம் இருந்து சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கும், சுழற்சி செய்யமுடியாதவற்றை சிமெண்ட் ஃபேக்டரிகளுக்கும் அளித்துவிடுகின்றனர். அங்கே 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிளாஸ்டிக்கை எரிப்பது, சூழலுக்கோ நமக்கோ கேடு விளைவிக்காது என்கின்றனர். இதன்மூலம் திருப்பூரில் நாளொன்றுக்கு உருவாகும் 120 டன்கள் குப்பை, 50 டன்களாகக் குறைந்துள்ளது.
வண்டி, ஹேண்ட்பேகுகளில் எப்போதும் ஒரு துணிப்பை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 10 ரூபாய்க்கு வாங்கும் துணிப்பைகளை குறைந்தது 150 முறை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கிறார் நந்தகுமார்.
விளையாட்டுப் பொருட்களில்…
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மூலமாக நம் வீடுகளுக்கு வந்துசேரும் பிளாஸ்டிக்குகள் ஏராளம். இப்போதெல்லாம் பெரும்பாலான பொம்மைகள் பிளாஸ்டிக் பொருட்களால்தான் செய்யப்படுகின்றன. உடைந்த, நசுங்கிய பொம்மை, விளையாட்டுப் பொருட்களைத் தூக்கி குப்பையில்தான் போடுகிறோம். இதிலிருந்து நாம் மீள்வதற்கு ஒரே வழி, பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதுதான். மண் பொம்மைகள், மரப்பாச்சிகள், கோலிக்குண்டு, மர பம்பரம், மூங்கில் வேலைப்பாடுகளால் அமைந்த கைவினைப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.
ஸ்மார்ட் போனை மறுசுழற்சிக்கு உட்படுத்தவே மிக அதிக செலவாகும். அவற்றை வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, இயற்கையோடு இயைந்து விளையாடச் சொல்லலாம். இதன்மூலம் உடல்நலனும் மேம்படும்.
என்னதான் தீர்வு?
1. மக்கள் பிளாஸ்டிக் கவர்கள், பைகள், உறிஞ்சுகுழல்கள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
2. அரசுகள் குப்பைகளைச் சேகரித்து அவற்றை மறு சுழற்சி செய்யும் முறையை சீராகவும் வலிமையாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கழிவுகளும் குப்பைகளும் நிலங்களில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மேம்படும்.
3. ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக்கை முழுமையாக சிதைவுக்கு உட்படுத்தி, மறுசுழற்சி செய்து புதிய பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்க வழிவகை செய்யவேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்றுப் பொருளைக் கண்டறிய வேண்டும்.





¡Hola expertos en apuestas
Los juegos de casino sin licencia incluyen versiones con crupier en vivo, ruletas Гєnicas y tragamonedas de alto rendimiento.
Casinos sin licencia de EspaГ±a destacan por ofrecer retiros instantГЎneos. No necesitas esperar dГas para cobrar tus ganancias. Verifica si hay lГmites semanales o mensuales.
Consulta el enlace para más información – http://casinossinlicenciaenespana.guru/
¡Por muchos tiempos entretenidos!
¡Hola amantes del azar
ВїSabГas que puedes apostar sin verificar tu identidad? Muchas casas de apuestas sin verificaciГіn permiten jugar de forma anГіnima.
ВїTe gustarГa apostar sin riesgo? Algunas plataformas ofrecen apuestas deportivas sin dinero gracias a bonos de bienvenida o promociones especiales. AsГ puedes probar sin gastar.
Consulta el enlace para más información – http://casasdeapuestassinlicenciaespana.xyz/
¡Por muchos tiempos entretenidos!
?Hola apostadores apasionados
Las casas sin registro permiten apostar directamente sin formularios ni verificaciones.
Puedes jugar directamente desde tu mГіvil sin descargar nada, gracias a plataformas optimizadas para navegaciГіn web.
Casas de apuestas sin KYC en 2025 – mejorescasasdeapuestassinlicencia.xyz
?Que tengas excelentes slots!
Casas de apuestas sin documentos ni requisitos – mejorescasasdeapuestassinlicencia.xyz
?Que tengas excelentes ventajas!
?Hola apostadores apasionados
ObtГ©n tus 20 euros gratis retirables de manera sencilla y empieza a disfrutar de tus juegos favoritos sin complicaciones. Aprovecha esta oportunidad Гєnica para ganar sin necesidad de invertir. ВЎLos mejores casino online te estГЎn esperando!
Recibe 20 euros gratis en casinos confiables de EspaГ±a y juega sin compromiso. – casino20eurosgratissindeposito.guru
?Que tengas excelentes partidas!
?Hola fanáticos del juego
Casasapuestassindni.xyz tambiГ©n destaca por su facilidad de acceso. Puedes jugar desde el mГіvil, sin necesidad de instalar aplicaciones ni programas externos. Solo accede desde tu navegador y comienza a disfrutar.
apuestas online sin registro 100% – https://casasapuestassindni.xyz/
?Que tengas excelentes partidas !
Three-reel, 20-line mechanical reel-spinning slot; wild symbols; free-spin bonus event; .01 denomination Those casinos that I have highlighted throughout this website are the best ones to play the Fire Hot 20 slot game at so make sure you give any of them a try as you could win big when playing the Fire Hot 20 slot game at any moment of course. Because the Super 40 Hot slot game is basically a spin-off of the beloved Super 20 slots game, it has a fruit theme. But its vintage design lends familiarity to it, although its graphics are clearer and better in every way. Players can play it either on PC, tablet, or mobile, and it has no trouble accommodating any other preferred operating system. Best of all, there is no registration or download required. Any platform works like a charm – which lends to 40 Super Hot EGT slots attraction and makes it as popular today as it was when it first came out.
https://sankalpacademyjhalawar.in/demoing-the-aviator-casino-what-to-expect/
Borgata Casino, as part of the MGM Group, offers a similar no deposit bonus but with $20 free play available without the need to make a deposit. Once again, when you deposit funds for the first time, Borgata Casino has a deposit match in place up to a maximum of $1,000. At LCB, members and guests of the site continuously post any information they have on the current no deposits bonuses and recent no deposit bonus codes. Join in on the information sharing by posting bonuses you find or just catch up on the latest ND codes. The platform’s generous welcome bonus, intuitive interface, and mobile-optimized website are some of the features that make it appealing to new and existing users. As a deposit sweepstakes casino, Fortune Coins offers no deposit sweepstakes casino welcome promos, providing free coins at sign up without the need for specific promo codes.