மாவட்டச் செய்திகள்
மணல் திருட்டு கும்பல்…போலீசை கண்டதும் தெறித்து ஓடியது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் கிராவல் மணல் அள்ளுவதாக சாத்தூர் நகர் காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
சாத்தூர் நகர காவல் சார்பு ஆய்வாளர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினரைக் கண்டவுடன் கண்மாயில் கிராவல் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் மணல் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர் பால்ச்சாமி என்பவர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.





Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.