காவல் செய்திகள்

நகை திருடும் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த உடுமலை காவல்துறை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய சரகம், ஏரிப்பாளையம், சேகர் நகரில் கடந்த 08.10.2024ம் தேதி அன்று பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல்

கண் காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், உடுமலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்ப்பார்வையில் உடுமலை காவல் ஆய்வாளரின் தலைமையிலான தனிப்படையினர் தேடிவந்த நிலையில் உடுமலை – திருப்பூர் சாலையில் இந்திரா நகர் பிரிவு அருகே சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் பெயர் முருகானந்தம்.(45)சத்யராஜ் (33)மாரிமுத்து( 33) என்றும்3 நபர்கள் ஏரிப்பாளையம், சேகர் நகரில் கடந்த 08.10.2024ம் தேதி பூட்டி இருந்த வீடுகளில் திருடிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என்றும் விசாரணையில் தெரியவந்ததும் அந்த 3 நபர்கள் மீதும் உடுமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்த 15 சவரன் நகைகளை உடுமலைப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எது எப்படியோ பூட்டி இருக்கும் வீடுகளில் புகுந்து திருடுவது பைக்கில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் செயின் பறிப்பு திருடர்களை பிடித்து கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யவும், செயின் பறிப்பு நபர் இரண்டாம் முறையில் குற்றம் செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களில் செல்பவர்களை மறித்து செல்போன் பறிக்கும் சம்பவத்தில் ஒரே வழக்காக பதிவு செய்யாமல் ஒவ்வொருவரிடமும் புகார் பெற்று தனித்தனி வழக்காக பதிவு செய்து கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Back to top button