காவல்துறை விழிப்புணர்வு

நள்ளிரவில் தனியார் தங்கும் விடுதியில் ஏ சி அறை கேட்கும் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளரின் அதிர்ச்சி வீடியோ வைரல்!

நள்ளிரவில் தனியார் தங்கும் விடுதியில் ஏ சி அறை கேட்கும் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர்! அதிர்ச்சி வீடியோ வைரல்!


பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து (பாளையங்கோட்டை) பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொள்ள எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் விழா காலங்களிலும், முகூர்த்த நாட்களிலும், தொடர்ந்து அதிகாரத்துடன் ரூம் கேட்டு ஒட்டல் நிர்வாக ஊழியர்களை தொந்தரவு செய்வதும். ரூம்கள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டதை ஒட்டல் ஊழியர்கள் தெரிவித்தால் உடனே அறை பதிவேடுகளை வாங்கி பார்ப்பதும் அல்லாமல் அடுத்த நாள் மீண்டும் வந்து ஏசி ரூம் வேண்டுமென கேட்டு கொடுக்கவில்லை என்றதும் நள்ளிரவு நேரங்களில் வந்து வரவேற்பு அறையில் உள்ள ஊழியர்களை மிரட்டி ஒவ்வொரு அறையாக சென்று கதவை தட்டி தங்கியிருக்கும் கெஸ்ட் பெயர் ஊர் அவர்களின் விவரங்களை கேட்டு விசாரணை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் ஆணையர்

போக்குவரத்து ஆய்வாளர் பேச்சி முத்துக்கு மட்டும் ஓட்டல் அறைகளை நள்ளிரவில் வந்து விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சிறப்பு அதிகாரம் வழங்கி உள்ளாரா? மேலும், ஓட்டல் ஊழியர்களிடம் எங்களுக்கு ரூம் தரவில்லை என்றால் தினமும் நள்ளிரவு நேரங்களில் வந்து ஒவ்வொரு அறையாக வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்வோம் என மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள வெங்கடேஸ்வரா ஓட்டலில் நள்ளிரவு சென்று ஏ சி அறை கேட்கும் சிசி டிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உடநடியடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
பொறுத்திருந்து பார்ப்போம் !

Related Articles

2 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button