காவல் செய்திகள்

Watch “அனுமதி சீட்டு இல்லாமல் சீர்காழி அரசு மணல் கிடங்கில் மணல் கடத்திச் செல்லும்  லாரிகள் அதிர்ச்சி வீடியோ” மாதம் 30 கோடி ரூபாய் மணல் கடத்துவதாக அதிர்ச்சி தகவல்!!on YouTube

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி , திருச்சி,மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆற்றுப்படுகையில் அரசு மூலமாக மணல் அள்ளுவதற்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது..

ஒரு டாரஸ் லாரியில் மணல் 5 .5 யூனிட் ஏற்றுவதற்க்கு அரசுக்கு முறையாக செலுத்தவேண்டிய உரியனமை கட்டணம் ரூபாய் 5000/- மட்டுமே அதற்க்கான ரசீது லாரி உரிமையாளருக்கு வழங்கப்படுகிறது..

அதுபோக ஒரு டாரஸ் லாரியில் மணல் எடுக்க ரசீது இல்லாமல் 12000/- தனியாக பெறுகிறார்கள் அங்கே இருக்கும் அதிகாரிகள்..

இந்த 12000/- க்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை..

இதனால் ஒரு டாரஸ் மணல் ஏற்ற ஏற்றுமிடத்தில் 17000/- அடுத்து அந்த டாரஸ் லாரி ஐந்து நாட்கள் வரிசையில் காத்திருந்து ஏற்றிவர ஒருநாளைக்கு டிரைவர் சம்பளம் 1200/-ரூபாய்..

அவர் ஐந்து நாட்கள் காத்திருக்க 1200*5=6000/-ரூபாய்..

அதன்பின் காரைக்குடி மணல் ஏற்றி வந்து சேர வண்டிக்கு டீசல் 6000/-ரூபாய்..

அதன்பின் அந்த வண்டி தேய்மனசெலவு 4000/- அதன்பின் வண்டியின் சொந்தக்காரருக்கு 5000/-ரூபாய்…

அதன்பின் டோல்கேட் கண்டனம்வேறு..

இத்தனையும் கடந்து வீடுகட்டும் சாதாரண பொதுமக்கள் இந்த மணலைபெற 40,000/- செலுத்தி பெறவேண்டியுள்ளது…

இந்த விலை ஏற்றம் ஏன், எதனால் உண்டாகிறது என்பது இப்போது தெரிகிறது..

மணல் ஏற்றும் இடத்தில் ரசீது இல்லாமல் பெறப்படும் பணம் 12000/- குறைந்தால் மணல் விலையில் 12000/- குறையும் அது மக்களுக்கு லாபம்தானே..

அந்த ரசீது இல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வாங்கப்படும் அந்த 12000/- எங்கே யாருக்கு போகிறது..?

இந்த கணக்கில் வராத பணத்தை வாங்க சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டது யார்..?

இதுமட்டுமில்லாமல் ரசீதே போடாமல் பல வாகனங்களில் வேறு மணல் சட்டத்துக்கு புறம்பாக வேண்டியவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றி வெளியே அனுப்பப்படுகிறதாம்..

ஒரு வண்டிக்கு 12000/- என்றால் ஒருநாளைக்கு இந்த மூன்று இடங்களிலும் சேர்த்து சுமார் 700 வண்டிகளுக்கு மணல் ஏற்றப்படுகிறது …

அப்படி பார்த்தால் 12000*700=84,00,000/-பணம் எங்கே போகிறது…

இந்த பணத்தை பெற்று கீழ்மட்டத்தில் உள்ள கழகத்தொண்டர்களுக்கு கொடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை .

அப்படி என்றால் அந்த பணம் எங்கே யாருக்கு போகிறது

இதை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் எடுத்து மணல் மூலம் நடத்தும் இந்த மாபெரும் கொள்ளையை தடுத்து நிறுத்தி மக்களுக்கு குறைந்தவிலையில் மணல் கிடைக்க ஆவண செய்யவேண்டும்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button