Watch “ஒரு நபருக்கு 15 லட்சம் வாங்கி கிராம நிர்வாக உதவியாளர் பணியை வழங்கியதாக அமைச்சர் மஸ்தானை பதவியை ராஜினாமா செய்ய சொன்ன திமுக கிளைச் செயலார் பேசிய ஆடியோ!” on YouTube
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்தப் பணி வழங்கப்பட்ட நாளிலிருந்து தமிழக முழுவதும் திமுக கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் பணி நியமனம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது அந்தந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்ய ஒரு நபருக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை வாங்கிக் கொண்டு பணி நியமனம் ஆணை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள சேந்தமங்கலம் கிளைச் செயலாளர் கட்சிக்கு பணி செய்த ஊழியருக்கு பணி நியமனம் தரவில்லை என்று திண்டிவனம் அமைச்சர் மஸ்தானி உதவியாளரிடம் தொலைபேசியில் பேசிய அதிர்ச்சி ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசியதாவது
திண்டிவனம் ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் கிளைச் செயலாளர் அமைச்சர் மஸ்தான் அவர்களின் உதவியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 15 லட்சம் வரை வாங்கிக் கொண்டு கிராம நிர்வாக உதவியாளர் பணி வழங்கி இருக்கிறீர்கள் என்றும் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் தான் ஆகிறது அதற்குள் இப்படி செய்தால் எப்படி என்றும் மஸ்தான் எம்எல்ஏவாக இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்த கட்சி பணி செய்த நபருக்கு பணிநேயமான வழங்கவில்லை என்றும் அடுத்த தேர்தல் வந்தால் யார் திமுக கட்சிக்கு போஸ்டர் ஓட்டுவார்கள் கொடி கட்டுவார்கள் நீங்கள் வந்து வேலை செய்கிறீர்களா என்று கேட்டதற்கு தாசில்தார் இடம் கேளுங்கள் என்று அமைச்சர் மஸ்தான் உதவியால் சொன்னதற்கு அவரிடம் நாங்கள் கேட்பதற்கு நீங்கள் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும் எங்கள் அமைச்சர் பதவி ராஜினாமா செய்து விட்டு போங்கள் நாங்கள் தாசில்தாரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று ஆவேசமாக பேசியது உடன் தமிழக முதல்வர் வரை இதை நாங்கள் எடுத்துச் செல்வோம் என்றும் பேசிய அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதனால் திமுக கட்சி தொண்டர்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது!
கிராம நிர்வாக உதவியாளர்பணிக்கு 15 லட்சம் வரை வாங்கிக் கொண்டு பணிநீயமான ஆணை செய்துள்ளதாகவும் கட்சியில் பல வருடங்களாக இருப்பவர்களுக்கு பணி நியமன ஆணை ஏன் போடவில்லை அடுத்த ஒன்றியத்திலிருந்து இந்த ஒன்றியத்திற்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளீர்கள்