Watch “குடிநீர் தட்டிப்பாட்டை சரி செய்யாமல் பூங்காக்கள் அமைப்பதில் மும்பரம் காட்டும் புதுக்கோட்டை நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கையில் முட்டை ஏந்தி நூதனப் போராட்டம் செய்த பாஜகவினர்!” on YouTube
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரிடம் கோழி முட்டை கொடுக்க வந்த பாஜகாவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முட்டைகளை பறிமுதல் செய்ததால் பரபரப்பு. புதுக்கோட்டை பாஜாக வின் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் சினிவாசன் தலைமையில் இன்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை நகராட்சி செயல்பாடுகளில் பூஜ்யமாக இருக்கிறது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வலியுறுத்தும் வகையிலும் தனது சொந்த கவனத்தில் புதுக்கோட்டை நகராட்சியை பார்க்க வேண்டுமென்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் சாலை வசதி மற்றும் மின்சார வசதி மக்களின் அடிப்படை வசதிகள் செய்யாமல் பூங்காக்கள் திறப்பதில் வருமானத்தை பார்ப்பதில் மட்டுமே புதுக்கோட்டை நகராட்சி செயல்படுகிறது . ஏற்கனவே புதுக்கோட்டை நகராட்சியில் 28 பொழுதுபோக்கு பூங்காக்கள் இருப்பதாகவும் அந்த 28 பூங்காக்களையும் பராமரிப்பு செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்போது புதிதாக பூங்காக்கள் அமைப்பதில் முன்புறம் காட்டுவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் சாலை வசதி மின்சார வசதி போன்ற வசதிகளை செய்து தராமல் அலட்சியப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் பூங்காக்கள் அமைப்பதால் நாற்பது சதவீதம் கமிஷன் கிடைக்கும் என்றும் இதில் நகராட்சி அதிகாரிகளுக்கு 15 சதவீதம் கிடைக்கும் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர் .
புதுக்கோட்டை நகராட்சிகளில் வாரத்திற்கு ஒரு முறை கூட சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் குடிநீருக்காக பொதுமக்கள் ஒரு குடம் ஏழு ரூபாய் என்ற விதம் 5 குடம் வாங்குகிறார்கள் என்றும் இதனால் மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு மட்டும் 1,050 ரூபாய் செலவாகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வாங்கும் செலவை 1050 ரூபாய் மாதாமாதம்வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு பாஜகவின் புதுக்கோட்டை அரசு தொடர்பு பிரிவு சார்பில் மனு கொடுக்க சென்றனர்.
உடன் மாவட்ட செயலாளர் செல்லத்துரை ex aramy. மனோகரன் மற்றும் செந்தில்நாதன் புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் சூர்யா ஆவுடையார்கோயில் ஒன்றிய தலைவர் ஜெய் ராமகிருஷ்ணன் அண்ணா வாசல் தெற்கு ஒன்றிய தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்ட போது