Watch “கோயிலுக்குள் நுழைந்ததாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டும் அதிர்ச்சி வீடியோ காட்சி!” on YouTube
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவாசலில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கோவிலுக்குள் நுழைய மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்ற சம்பவம் முடிவதற்குள் தற்போது சேலம் மாவட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நுழைந்தார் என்பதற்காக திருமலைகிரி தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பொதுமக்கள் முன்னிலையில் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். இந்த வீடியோ காட்சியை ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார் .தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் கலங்கப்படுத்தும் வகையில் தற்போது பேசி உள்ள ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை திமுக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதோடு கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து மக்களுக்காக உழைத்தாலும் இது போன்ற ஒரு சில கட்சி நிர்வாகிகளால் திமுக கட்சியின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிறது என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கிறது .
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களைப் பற்றி இப்படி தரைக்குறைவாக பேசும் நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்தி திராவிட மாடல் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
என நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆ.நீல வானத்து நிலவன் மாவட்ட துணைச் செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டம்