Watch “சிறைச்சாலையை பூஞ்சோலையாக நினைத்து சிறைக்குச் சென்ற புதுக்கோட்டை அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே எஸ் சந்திரனின் கழகப் பணி சூரியனை உதிக்கச் செய்யும் !திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் பெருமிதம்” on YouTube
30 வருடம் முன்பே திமுக கட்சியின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று கணித்தவர் புதுக்கோட்டை அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே எஸ் சந்திரனின் கழகப் பணி சூரியனை உத்திக்கச் செய்யும் திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் பெருமிதம்.
புதுக்கோட்டை மாவட்டம் அகர பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து திருச்சி ஜமால் கல்லூரியில் படிக்கும் போது திமுக கழகத்தில் இணைந்து திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருந்தார். அதன் பின்பு திமுக கழக இளைஞரணி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது அன்னவாசல் இளைஞரணி செயலாளராக இரண்டு முறை பதவி வைத்துள்ளார் . அதன் பின்பு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராகவும், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினராகவும், ஒருங்கிணைந்த அன்னவாசல் செயலாளராகவும், கூட்டுறவு வங்கி தலைவராகவும் , அன்னவாசல் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் அன்னவாசல் மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் பால்வளத் தலைவர் என்று ஒவ்வொரு பொறுப்பாக திமுக கழகத்தில் வளர்ச்சியை அடைந்துள்ளார் . அப்படி வளர்ந்த அவர் கழகத்தில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர் அந்த பொறுப்பில் திறம்பட செயல்பட்டார் . ஈழத் தமிழர்கள் படுகொலை எதிர்த்து போராட்டம் மற்றும் இந்தி திணிப்பு சட்டத்தை எதிர்த்து மத்தியரசை கண்டித்து எரிப்பு போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறையில் இருந்தார். கழகத்திற்காக பல போராட்டங்களை துணிவுடன் எதிர்கொண்டு 200 நாட்களுக்கு மேல் சிறைச்சாலையை பூஞ்சோலையாக ஏற்றுக் கொண்டு இருந்தவர் தான் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் KS.சந்திரன் அவர்கள்.
திமுக கழகத்திற்காக இவரது உழைப்பானது சிவப்பு சூரியனை கருப்பு இருளை கிழித்தெறிந்து பட்டொலி வீசிட கடல் அலைகள் ஓசையில் பறவைகள் இசை பாடும் சத்தத்தில் சூரியனை உதிக்க செய்தவர் கே எஸ் சந்திரன் அவர்கள் என்று கூறலாம்.
2013 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டமாக இருந்தபோது கட்சி நிதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஒரு கோடியே 13 இலட்சம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி இடம் கொடுக்கப்பட்ட போதுஅதில் அன்னவாசல் ஒன்றிய செயலாளர் கே எஸ் சந்திரனின் பங்கு மட்டும் நான்கில் ஒரு பங்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அதுமட்டுமில்லாமல் திமுக கட்சியின் பொதுக்கூட்டங்களை நடத்தும் செலவை அன்னவாசல் கே எஸ் சந்திரன் ஏற்றுக் கொண்டதால் கலைஞர் அவர்கள் கே எஸ் சந்திரனை அழைத்து தனிப்பட்ட முறையில் பாராட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவம் திமுக தலைமை கழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார் என்றால் அது கே எஸ் சந்திரனின் திருமணம் மட்டுமே என்று சொல்லலாம் .அதேபோல் சந்திரனின் மூத்த மகன் திருமணத்தையும் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்தி வைத்தார் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் இரண்டாவது மகன் திருமணத்தை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் அன்னவாசல் கே. எஸ். சந்திரனின் இளைய மகன் திருமணத்தை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்த போது கே எஸ் சந்திரனின் திமுக கழகத்தின் 40 ஆண்டு கால அரசியல் பற்றி உருக்கமாக பேசிய காணொளிக் காட்சி திமுக தொண்டர்கள் பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் ஒரு ஒன்றிய செயலாளரை தனிப்பட்ட முறையில் ஒரு கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் புகழ்வது திமுகவில் மட்டுமே தான் இருக்கும். அதில் முக்கியமாக கூறியது கழகத்தின் புதுக் கோட்டை அன்னவாசல் ஒன்றிய செயலாளர் கே எஸ்.சந்திரனின் கட்சியின் பணி சூரியனை உதிக்கச் செய்யும் என்று திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.
இவரது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானவைகள் .
எப்பேர்பட்ட சூழல் நிலையிலும் திமுக கழகத்திற்காக முன் நின்று எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவரான இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு பின்னால் தளபதி அவர்கள் தான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து தமிழகத்தை ஆளுவார் என்று 30 வருடத்திற்கு முன்பே ஸ்டாலின் அவர்கள் திமுக இளைஞர் அணி தலைவராக இருந்தபோது ஆணித்தரமாக தனது கழகத்தினருடன் அப்போதே நெஞ்சை நிமிர்த்து உறுதியுடன் பேசியவர் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.
அதேபோல் சில வருடம் முன்பு காரில் பயணம் செய்த வேளையில் உடன் பயணம் செய்தவர் பேசும் போது தளபதி ஸ்டாலின் அவள் மீது குறைக்கூறி பேசியவுடன் கோபத்தின் உச்சிக்கே சென்று காரை விட்டு அந்த நபரை நடு வழியில் கீழே இறக்கி விட்டு போடா என்று சொன்னதையும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
இரத்தமும் சதையும் நரம்புகளும் உயிர்மூச்சும் நாடி துடிப்புகள் எல்லாம் திமுக கழகத்தின் மீது இவர் கொண்ட பாசமும் நேசமும் பற்றும் அன்று முதல் இன்றுவரையிலும் கொஞ்சம் கூட குறைந்திடாமல் திறம்பட செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார் என்று அப்பகுதி திமுக கட்சி அடிமட்ட தொண்டர்கள் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அன்னவாசல் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் முடிந்த பின்பு பதவி ஏற்பு விழாவிற்கு முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களை காரில் கடத்தி சென்று அதிமுக ஒன்றியச் சேர்மன் பதவிக்கு வாக்களிக்க வைத்ததால் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொழுது கே எஸ்.சந்திரன் அவர்களை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்து நிலை தடுமாறி இரத்தம் சொட்ட சொட்ட மன தைரியத்துடன் காவல்துறையின் தாக்குதலை எதிர்கொண்டு தனது கண்கள் அடிபட்ட நிலையில் நிகழ்விடத்தை விட்டு எங்கும் நகராமல் அதே இடத்தில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
இவரை பற்றி நமது ரிப்போர்ட்டர் விஷன் நிருபர் குழு ஆய்வில் இறங்கிய போது இவரது உறவினர்களும் பொதுமக்களும் நம்மிடம் கூறுகையில் அரசியல் வாழ்க்கையில் கழகத்திற்காக கடுமையாக உழைத்த மனிதர்தான் கே எஸ்.சந்திரன். எந்த கட்சிக்காரர்களிடம் ரகசிய உறவு வைக்காமல் 40 ஆண்டு காலமும் ஒரே கட்சியில் இருப்பவர் என்றும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர் என்றும் திமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே பேசும் மன சுபாவம் கொண்டவர் என்றும் தன் சட்டை பையில் இருப்பதை எல்லாம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் அன்பு உள்ளம் கொண்டவராகவும் அப்பகுதியில் வலம் வரகூடியவர் என்று உறவினர்கள் மற்றும் இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்கள்.
ஆனால் ஒன்று அவர் பிழைக்கத் தெரியாதவர் என்றும் ஒரு குழந்தை சுபாவம் கொண்டவர் என்றும் நம்மிடம் கூறினார்கள்.
ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று நாம் கேட்டபோது அரசியலில் அவர் கால் பதித்த நாள் முதல் 40 வருட காலம் கடந்தும் தனக்கென்று எவ்வித சொத்துக்களும் வாங்கி சேர்க்காமல் தனது சொந்த சொத்துக்களை விற்று தனது பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு சிறந்த தகப்பனாக நல்ல கழகத் தொண்டனாக மனசாட்சியோடு பணியாற்றி வரும் ஒரு நல்ல மனிதர் என்றனர் .
இவர் மேல் பட்ட காயங்கள் சிலரது விமர்சனங்கள் அனைத்தையும் கடந்து மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்.
காவல் துறையினர் தாக்கி படுகாயம் அடைந்த போதும் மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பொழுதும் தனது கண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது கழகக் கொடியை பறக்க விட புதுக்கோட்டை 42 வார்டுகளுக்கும் கழகக் கொடியை பறக்க களத்தில் நின்று திமுக கழகத்தினருக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கமும் தந்த KS. சந்திரன் அவர்களது உடம்பில் ஓடும் இரத்தமும் உயிர் மூச்சும் திமுகவிற்காகவே என்றும் ஓடிக்கொண்டே இருக்கும் என்றும் பொதுமக்கள் நம்மிடம் கூறினார்கள்.
தற்போது திமுக தலைமை கழகம் தமிழக முழுவதும் ஒன்றிய செயலாளர் பதவிகளை அறிவித்த வந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் கே எஸ் சந்திரனுக்கு எதிராக சிலர் பல பொய் வதந்திகளை திமுக தலைமையிடத்தில் கூறிவந்த நிலையிலும்
KS. சந்திரன் மன உறுதியுடனிருந்தார் என்றும் கடின உழைப்பையும் எவராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் மூன்றாவது முறையாக புதுக்கோட்டை அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறை புதுக்கோட்டை அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள KS. சந்திரனின் திமுக கழக மக்கள் பணி என்றும் தொடர.
ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு மாத இதழ் ஆசிரியர் குழு மற்றும்
புதுக்கோட்டை நிருபர் பழனியப்பன்.