Watch “சென்னையில் மாமூல் கேட்டு ரவுடிகளின் அட்டகாசம்! கண்டுகொள்ளாமல் ரவுடிகளை பாதுகாக்கிறதா காவல் துறை!?” on YouTube
சென்னையில் மாமூல் கேட்கும் ரவுடிகளின் அட்டகாசம் தொடர் கதையாக உள்ளது! காவல்துறை ரவுடிகளை பாதுகாக்கிறதா என்ற சந்தேகம் சமூக ஆர்வலரிடம் இருந்துள்ளது! ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு மாமூல் வாங்கும் ரவுடிகள் கொட்டத்தை அடக்க காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்!?
சென்னை அண்ணாநகர் 11வது மெயின் ரோட்டில் உள்ள பழைய பேப்பர் கடையில் சாராயம் குடிக்க 500 ரூபாய் மாமூல் கேட்டு கொடுக்காததால் கடைகார் மீது சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் சென்னையில் தொடர்கதையாக இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளதாக முதல்வர் அவர்கள் கூறி வரும் நிலையில் ஆனால் வணிகர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல்களும், கொலை கொள்ளை சம்பவங்களும் நித்தமும் தொடர்கதையாக அரங்கேறி கொண்டிருக்கிறது ஆனால் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.