Watch “தொடர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை !” on YouTube
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணம் பெருங்குடி பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக புதுக்கோட்டை மாவட்டம் காவல்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில்
துணைக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் அதிரடியாக ஆடுகள் திருடும் நபர்களை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை அந்த வழியே ஆடுகளை ஏற்றி வந்த டாட்டா ஏசி செல்லக்குட்டி என்ற பெயர் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை சோதனை செய்ததில் வாகனத்தில் வந்தவர்கள் ஆடுகளை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டனர் . அதன் அடிப்படையில் ஆடுகளுடன் டாட்டா ஏசி வாகனத்தையும் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அழைத்துச் சென்றன.
ஆடுகள் திருடுவதற்காக பயன்படுத்திய ஒரு TATA AC வாகனம் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் திருபுவனவாசல் காவல் ஆய்வாளர் கௌரி மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தவுடன் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.