தமிழ்நாடு

Watch “மின்சார கட்டண உயர்வு!பெயரளவிற்கு கருத்து கேட்பு ! ஒன்றரை லட்சம் கோடி நஷ்டத்திற்கு யார் காரணம் என்று பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்த ஒழுங்குமுறை ஆணைய ம் அதிகாரிகள் !” on YouTube

வருடத்திற்கு 6% மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி! பொதுமக்கள் அதிருப்தி!

கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் மின்வாரிய துறையில் ஒன்றை லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்றும் அந்தக் கருத்துக் கேட்பு தற்போது நடந்து வருகிறது. அதுவும் மூன்று பெரும் நகரங்களில் மட்டுமே பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய மே 18 இயக்கத்தைச் சேர்ந்த காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
ஆனால் கருத்துக் கேட்பில் பேசுவதற்கு குறைந்த நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மே 18 இயக்கத்தைச் சேர்ந்த காந்தி அவர்கள் பேசிய போது நேரம் முடிந்து முடிந்துவிட்டதாக கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறியபோது அவர்கள் விழி பிதுங்கும் அளவிற்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்கு அக்காட வைத்துள்ளார் .
அப்படி என்னதான் பேசினார் என்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே 18 இயக்கத்தைச் சேர்ந்த காந்தி அவர்கள் பேசுகையில் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் கோடி அளவிற்கு மின்சார வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி அந்த நஷ்டம் ஏற்பட்டது என்பதை நீங்கள் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதுவும் கடந்த 10 ஆண்டுஅதிமுக ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு கூறி வருகிறது. அப்படி நஷ்டம் ஏற்பட்டதற்கு யார் காரணம் அதற்கு மின்சார வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் ஒழுங்கு முறை நிர்வாகமும் தான் காரணம் என்று பேசினார்.
அதிகாரியிடம் கேட்ட கேள்விகள்
1. மின்சார கட்டண உயர்வு!
பொதுமக்கள் கருத்துக் கேட்பு நகரங்களில் மட்டும் தான் நடத்த வேண்டும் என்பதற்கு என்ன காரணம்? அதுவும் மூன்று நகரங்களில் மட்டும் இந்தக் கருத்துக் கேட்பு நடத்துவதற்கு என்ன காரணம்!?
2. நகரங்களில் இருப்பவர்கள் மட்டும் தான் மின்சாரம் பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்துகிறார்களா!? தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்களில் கிராமங்களில் உள்ள வீடுகளில் மின்கட்டணம் வாங்கப் போவது இல்லையா!?
3.தமிழ்நாட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். இதில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் அதிலும் பல துறையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் இவர்களிடம் எப்படி கருத்து கேட்பு நடத்துவதற்கு காரணம் என்ன!?
4. கருத்து கேட்பு நடக்க இருக்கிறது என்பதை தமிழ்நாட்டில் உள்ள கீழ்தட்டு மக்கள் வரை சென்றடையும் வரை ஏன் விளம்பரம் செய்யவில்லை!?
மூடி மறைக்கும் அளவிற்கு கருத்து கேட்பு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது!?
5. கல்வி மருத்துவம் போன்று மின்சாரம் ஒரு சாமானிய ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் ஒன்றாகும். அப்படி இருக்கும் போது இது ஒரு வியாபார நோக்கத்தில் தற்போது கருத்து கேட்பு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது!?
6. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடக்கும் கருத்து கேட்டு கூட்டத்தில் மிகவும் சொப்பமான நபர்களை கலந்து கொண்டுள்ளனர் அப்படி என்றால் இந்த கருத்து கேட்பை வைத்து எப்படி நீங்கள் முடிவு செய்ய முடியும் இது ஒரு கண் துடைப்பு கருத்து கேட்பு என்று தான் சந்தேகம் வருகிறது என்று அதிகாரியிடம் கேள்வி கேட்டார்!
7. சுமார் ஒன்றரை லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளீர்கள் இந்த நஷ்டம் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் மின் கட்டணம் செலுத்தாமல் நஷ்டம் அடைந்ததா இல்லை நிர்வாக கோளாறினால் நஷ்டம் ஏற்பட்டதா என்பதை விளக்க வேண்டும்.
8. இதுவரை மின்சார வாரியம் மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணத்தை சரியாக பெற்றுக் கொண்டு தற்போது ஒன்றரை லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி நஷ்டம் என்று சொன்னால் இந்த நஷ்டத்தை மின்கட்டணத்தை செலுத்தியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லை நிர்வாக திறமை இல்லாமல் இருந்த அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை விளக்க வேண்டும்!
9. 20 வருடம் முன்பு மின்சார வாரியா லாபத்தில் இயங்கியதாக கூறப்பட்டது. அதன்பின் எப்படி லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது!?
10. பத்தாண்டு அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பொறுப்பு!?மின்சார வாரியத்துறை சேர்மன் பொறுப்பா!?அதிகாரிகள் பொறுப்பா !?நிதித்துறை பொறுப்பா !? அமைச்சர்கள் பொறுப்பா!? இல்லை மின்சாரம் வாங்கியது முறைகேடு நடந்துள்ளதா!? இந்தப் பத்து கேள்விகளுக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரிகளின் பதில் மௌனம் மட்டுமே இருந்தது என்பதுதான் நிதர்சனம்.*தற்போதைய TNEB மின் கட்டணம்:

500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330

501 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 2127.

1 யூனிட் அதிகமாக இருந்தால்கூட ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், ரூ.5420/- செலுத்த வேண்டும்.

ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.

எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.

இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.

பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.

மின்சார வாரியம், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது.

உதாரணத்திற்கு ,

500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.

அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்போது கட்டணம் ரூ.2127.

ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.

யோசித்துப் பாருங்கள்…. நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று……..?

ஆக, *ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நமது மின்சார கட்டணம் குறைவு……..!*

மேலும்……….,

இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா …..? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை……..

*இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31 ஆம் தேதி வந்ததால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.*

ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல போராடவும் முன் வர வேண்டும்.!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button