Uncategorizedகாவல் செய்திகள்

Watch “ரவுடிகளாக தலைதூக்கும் 15 வயது சிறுவர்களின் அதிர்ச்சி வீடியோ!” ரவுடிகள் உருவாவதை தடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழக டிஜிபியின் நடவடிக்கை என்ன!?

தஞ்சாவூர் அரண்மனை அருகே பானிபூரி கடையில் உள்ள நபரை காசு கேட்டு அடிக்கும் போது அருகில் உள்ள பழம் விற்கும் வியாபாரி தட்டிக் கேட்க அவரையும் தாக்கும் அதிர்ச்சி வீடியோ !

இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு சட்டத்தில் சிக்கும்போது அவர்களை தண்டனைகளில் இருந்து பாதுகாப்பதாகும். அவ்வாறு நெருக்கடியில் சிக்கும் சிறுவர்களை குற்றவாளிகளாக பார்க்காமல் அப்பாவி குழந்தைகளாகவே பார்க்க வேண்டும் என்கிறது சட்டம்.

பாதிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லங்களுக்கு வரும் சிறார்களுக்கு கல்வி வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல், தொழில்பயிற்சி வழங்குதல், கவுன்சிலிங், அணுகுமுறை மாற்றங்களுக்கான பயிற்சி, உளவியல்ரீதியான உதவி ஆகியவற்றை அவர்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் அளித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணக்கமாக செல்ல வழிவகுக்க வேண்டும். கூர்நோக்கு இல்லங்கள் அமைக்கப்பட்ட நோக்கம் இதுவாக இருந்தாலும் உண்மையில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைப் போல் அவை ஜூனியர் சிறைகளாகவே நடைமுறையில் மாறிப் போயிருக்கின்றன.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் இன்னும் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்(என்சிபிசிஆர்) பரிந்துரை அளித்துள்ளது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களைப் பொறுத்தமட்டில், அவை 90 சதவீதம் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுவதால் அவற்றை கண்காணிப்பதும், தணிக்கை செய்வதும் அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிறக்கும் யாருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. எல்லோரும் குழந்தை, சிறார் மற்றும் விடலைப்பருவத்தைக் கடந்து வந்தவர்களே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். இது அவரவர்களின் குடும்ப, சமூக, பொருளாதார கட்டமைப்பு மற்றும் வளர்ப்பு சூழலைப் பொருத்து மாறுபடும். தடம் மாறும் சிறார்கள் வாழ்நாள் முழுவதும் குற்றப்பின்னணிக்குள் சிக்கி விடக்கூடாது. அந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பை, பராமரிப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்தையே சாரும். தமிழகம் முழுவதும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி முழு வீச்சில் செயல்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.



சிறார் காப்பகங்களை முறைப்படுத்த, புதுப்பிக்க லட்சங்களை செலவிடும் மத்திய, மாநில அரசுகள் குற்றம் புரிந்த மனதோடு காப்பகங்களுக்கு வரும் சிறார்களின் மறுவாழ்வியல் சிந்தனைகளை உளவியல் ரீதியாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கிறது, அதில் எந்தளவுக்கு வெற்றி கண்டுள்ளது என்பது கேள்விக்குறி. நம்மிடம் சட்டம் இருக்கிறது. ஆனால் பலன் இல்லை. குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு சிறார்களை நல்வழிப்படுத்துகிறோம் எனக்கூறாமல், குற்ற மூலத்தைக் கண்டறிந்து, குற்றம் செய்ய விடாமல் தடுக்க வேண்டும். அதுபோல குழந்தைகளைக் கண்காணிக்கவும், கண்காணிக்கத் தவறும் நபர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் கொண்டுவந்து, அந்த பொறுப்பை சமூகத்தின் கையில் ஒப்படைக்கும் வகையில் பிரத்யேக அமைப்பை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்யும் சிறார்களை சட்டத்தின் மூலமாக திருத்தாமல் உளவியல் ரீதியாக திருத்த வேண்டும்
கொடுங்குற்றத்தில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களை சட்ட ரீதியாக தண்டிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். முதன்முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்களுக்கு அந்த சம்பவமே மீண்டும், மீண்டும் குற்றம் புரிவதற்கான தூண்டிலாக அமைந்துவிடக்கூடாது. தகாத பழக்க வழக்கங்கள், போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற சிறார்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்து கொடுப்பதுதான் அரசு இயந்திரங்களின் முதல் பணி. அதற்கு கண்காணிப்பு, கூர்நோக்கு இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் சட்டங்கள் சிறப்பாகத்தான் உள்ளது. அவை முறையாக அமலில் உள்ளதா என்றால் இல்லை.
இவ்வாறு சிறார்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு யார் பொறுப்பேற்பது என்பதற்கு அரசிடமே தீர்வு இல்லை!

சில மாதங்களாக தமிழ்நாட்டில் 20 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை ரவுடிகளாக மாற்றி வழிப்பறி கொள்ளை கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை பார்க்கும் போது தமிழக காவல்துறையின் நடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆகவே தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் வாழ்க்கை பாதையை திசை திருப்ப முயற்சி செய்தால் மட்டுமே அடுத்த தலைமுறை ரவுடிகள் உருவாவதை தடுக்க முடியும். ஆகவே குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் பெற்றோர்களின் நலம் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக.

Related Articles

14 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button