அடிக்கடி மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுவதால் அச்சத்தில் வாடிப்பட்டி பொது மக்கள்! உயிர் பலி ஆவதற்கு முன்பு புது மின் கம்பிகள் மாற்ற மின் பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா!??
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரன் கோட்டை செல்லும் வழியில் பொன் பெருமாள் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடி நீர் நிலத்தடி நீர் எடுத்து அனுப்பும் மின்மோட்டார் கட்டிடத்தின் அருகே உள்ள மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதால் ஆடு மாடுகள் அருகே செல்லும் போது தெரியாமல் மின் கம்பி பட்டு உயிரிழந்து போகும் அபாயம் உள்ளது.
ஒரு வருடம் முன்பு தீபாவளி நேரத்தில் அறுந்து விழுந்து இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பெரியவர் மீது விழுந்து உயிர் காப்பாற்றப் பட்டதும் மின் பொரியாயாளர் மீது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.
ஆகவே வாடிப்பட்டி மின் பொறியாளர் அவர்கள் குலசேகரன் கோட்டை பின்வரும் பெருமாள் கோவில் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளை அகற்றி புதிதாக மின் கம்பிகளை மாற்றி விபத்துக்கள் நடக்காத வண்ணம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்.