அடிப்படை வசதி இல்லாத சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

( மே 2021 ஆண்டு) திமுக ஆட்சிக்கு வந்து தற்போது 25 மாதங்களில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆட்சியர் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக 2023 ஜூன் மாதம் அருணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றவுடன்
சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

அதிலும் முக்கியமாக
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேல் தளங்களுக்கு செல்ல பயன்படுத்தும் நான்கு லிப்ட் இருக்கின்றது. அதில் இரண்டு பழுதடைந்து உள்ளது.

மீதமுள்ள இரண்டு லிப்டுகளில் ஒன்று “officer only” என்று பலகை போட்டு உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. ஒரு லிப்ட் (lift car not working ) என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பல மாடியில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் எப்படி படியில் ஏறி செல்வார்கள் அதிலும் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் எப்படி தங்களது கோரிக்கை மனுக்களை முதல் தளத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கொடுக்க முடியும். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் செல்வதற்கு மட்டும் லிப்ட் வைத்துள்ள இந்த அவல நிலையை மாற்ற பழுதடைந்த லிப்ட் சரி செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அது மட்டுமில்லாமல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடிப்பதற்கு குடிதண்ணீர் என்ற ஒரு மிஷின் உள்ளது. ஆனா அதுவும் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் கழிப்பறை வசதி அதுபோன்று மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் செல்ல வசதியாக மின் தானியங்கி லிப்ட். இவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.