அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள்!
தமிழக அரசுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு…!
கனிம வளம் கொள்ளைக்கு துணை போகும் சேலம் மாவட்ட கனிமவள துறை பெண் உதவி இயக்குநர் .

சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை இரண்டாம் தேதி

இணை இயக்குனர் சுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆகும்.
சேலம் மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
. ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு இ-பெர்மிட் மற்றும் இ-டிரான்சிட் பாஸ் வழங்கப்படாது. மேலும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடை மேடை நிறுவ வேண்டும். புதிதாக குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விதிகளுக்கு முரணாக குவாரி பணிகளை செய்தால் அந்த குவாரியின் மீது அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிய அரசு அனுமதி சீட்டு இல்லாமல் கனிமங்களை வெட்டி எடுத்துச்செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குத்தகை உரிமம் வழங்கப்பட்ட குவாரி எல்லைகளை டி.ஜி.பி.எஸ். சர்வே மூலம் வரையறை செய்து எல்லை தூண்கள் அமைத்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இணை இயக்குனர் சுமதி தலைமையில் நடந்த இந்த கூட்டம் மக்களை ஏமாற்ற நடத்தப்பட்ட ஒரு கண்துடைப்பு நாடகம் என்கின்றனர் சேலம் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.
தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும் பள்ளங்களாக மாறி
விட்டன. கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனி மங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர்
தேவைகளுக்காகவும், வெளிமாநிலங்களுக்கு
சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு
வருகின்றன.
பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 ஹெக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல்
வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்
பணிகளின் போது எழும் ஒலி
அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின்
போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு
பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால்,
பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவ
தில்லை. அத்துடன் அதிகப்படி
யான மரம் சூழ்ந்த மலைப்பகுதி
கள், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில்
குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல் குவாரிகள் உள்ளதாகவும்
இதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டுமே அனுமதி பெற்ற 388 எம் சாண்ட் குவாரிகள் இருக்கின்றன . அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல நூறு எம் சாண்ட் குவாரிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஓமலூர் வட்டாரத்தில் கல் குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சேலம் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் அஸ்வினி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுத்த தகவலின் படிசேலம் மாவட்டம் முழுவதும் 51 கல்குவாரிகள் மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் . மீதி உள்ள 50-க்கும் மேற்பட்ட குவாரிகள் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விதிகளுக்கு புறம்பாக கல் குவாரிகள் இயங்கி வருவதால் இதனால் தமிழக அரசுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.
அரசு அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகளின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் சேலம் மாவட்ட கனிமவளத்துறை பெண் உதவி இயக்குனர் அஸ்வினி தகவல் தர மறுக்கிறார்.



சேலம் மாவட்டத்தில் அரசுஅனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக ஏங்கி வரும் கல்குவாரிகளில் சுமார் 200 அடிக்கு கீழ் தடை செய்யப்பட்ட வெடிகளை வைத்து பாறைகளை உடைத்து, கிரஷர்களுக்கு அனுப்புகின்றனர். அந்த உடை கற்களை ஜல்லி மற்றும், எம்.சாண்ட் உற்பத்தி செய்து அரசு கட்டுமானம், சாலை பணி மட்டுமின்றி தனியார் வீட்டுமனை கட்டிடங்களுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் முறையாக அனுமதி பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கனிம வளங்கள் நாளுக்கு நாள் கொள்ளை போவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் கனிம பொருட்களை வெட்டி எடுக்கக் கூடாது என விதிகள் இருக்கின்றன. பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது.
ஆனால் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் மீது

சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டஆட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சிய போக்கை கடைபிடித்து வருவதால் நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு கொள்ளை போய் கொண்டிருக்கின்றன.
இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள், மலைக் குன்றுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இது எல்லாம் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக சேலம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த
பழைய குவாரிகளுக்கு, 5 ஆண்டு ம, புது குவாரிகளுக்கு, 10 ஆண்டு என, குத்தகைக்கு விடப்படுகிறது. 5 ஆண்டு முடிந்தபின், 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று குவாரி உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு சென்னையில் உள்ள, ‘சுற்றுச்சுழல் தாக்கம் மதிப்பீடு ஆணையம்’ அனுமதி அளிக்கும். பின், மாசு கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற்று குவாரிகள் இயங்கும்.
சேலம் மாவட்டத்தில், 5 ஆண்டு முடிந்த குவாரிகள், அதன் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருவதால் குவாரிகளின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் கனிம வளத் துறை உதவி இயக்குநர் அஸ்வினி மூலம் கணக்கு மட்டும் காட்டி கோடிக்கணக்கில் கனிமக் கொள்ளை அரங்கேறி வருகிறது.
சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உரிமை
யாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 50 ஆயிரம், அடுத்து 70 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்… பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத் தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் பொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளாராம் சேலம் மாவட்ட கனிமவள துறை அதிகாரி.
கடந்த சில வாரங்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம் கனிம வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக வசூல் நடத்தி வருகின்றனர். கப்பம் கட்டாத கல் குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மாத இறுதிக்குள்
கட்ட நிபந்தனை.
வேண்டும் என கெடு வைத்துள்ளனர். இதனால் தான் சேலம் மாவட்டத்தில் ரெகுலராக வழங்கும் குவாரி பர்மிட் கூட வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்குவாரி உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிறு சுரங்க கனிமங்கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. பெரிய குவாரிகள் எல்லாம் மத்திய அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வருகிறது. குவாரிக்கான உரிமம் கொடுப்பதற்கு முன்பாக SEIAA (State Environment Impact Assessment Authority) எனப்படும் மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க ஒருங்கமைவுக் குழு சான்று கொடுக்க வேண்டும். இதில் உள்ள பாதுகாப்பு முறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது, மத்திய சுரங்கத்துறை அதிகாரியின் (DGMS / Director general of mines safety) பணி.
தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளில் சுரங்கச் சட்ட விதிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படு
வதில்லை. குவாரிகளில் உள்ள நிலத்தில் இருந்து கல்லை வெட்டியெடுப்பது, மண்ணை சரித்து அதில் இருந்து கற்களை வெட்டியெடுப்பது என குவாரி உரிமையாளர்கள் செயல்படு
கின்றனர். இந்தப் பணியின்போது எடுக்கப்படும் மண்ணை 300 மீட்டருக்கு அப்பால் சென்று கொட்ட வேண்டும். காரணம், கனிமங்களை வெட்டியெடுப்பதால் பள்ளம் அதிகமாகும்போது குவிக்கப்பட்டுள்ள மண்ணால் இடையூறு ஏற்படும். சுரங்கச் சட்டப்படி இது தவறானது. இதனை கனிமவளத் துறை உதவி இயக்குநர் அஸ்வினி கண்டு கொள்வதில்லை.
மேலும், ”வெட்டி எடுக்கப்படும் கழிவு கற்களை குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் கொட்ட வேண்டும். குவாரி உரிமையாளர்களுக்கு நிலம் இல்லாததால், அந்தக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை.அவற்றை குவாரிக்குள்ளேயே கொட்டுவதால் ஒரு காலகட்டத்தில் அந்த கற்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது.
”நிலத்தடியில் உள்ள சுரங்கங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி வெள்ளாளப்பட்டி, வாழப்பாடி, எருமாபாளையம், பனமரத்துப்பட்டி பகுதிகளில் உள்ள பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்புகள் இருப்பதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் குவாரிகள் இயங்கக் கூடாது. ஆனால், விளக்குகளை எரியவிட்டு வேலை செய்கின்றனர். குவாரிகளில் மண் தூசிகள் வராமல் இருக்க தொடர்ச்சியாக தண்ணீர் தெளிக்க வேண்டும். அதையும் பலர் பின்பற்று
வதில்லை. பொதுவாக, கிராமங்களில் குவாரிகள் இயங்குவதால் அதிகாரிகள் பெரும்பாலும் சோதனை நடத்துவதில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ‘அதிரடி ரெய்டுகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன், சம்மனை எதிர்த்து மேல்முறையீடு, ஆட்சியர்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி’ எனத் தொடர் சர்ச்சைப் புயலுக்குள் சிக்கியிருக்கிறது மண், மணல் விவகாரம். ‘சட்டவிரோத கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் கொள்ளைபோவதாக… ஆறுகளிலிருந்து அநியாயமாக மணல் அள்ளிக் கடத்தப்படுவதாக’ மாதத்துக்கு ஒரு போராட்டமாவது தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே சேலம் மாவட்டத்தில் இயங்கும் (ரஃப் ஸ்டோன்) கல்குவாரிகளை டிரோன் ஆய்வு செய்ய வேண்டும்.
மட்டுமில்லாமல் லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் கனிமவளத்துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியாக கனிமவளத்துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் திட்டங்கள் சில சமூக விரோதிகளால் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. அதற்கு காரணம் அரசியல் தலையீடும் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பொறுத்திருந்து பார்ப்போம்




