மாவட்டச் செய்திகள்

அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து இடையிலேயே கிளம்பிச் சென்ற
தேனி மாவட்ட ஆட்சியாளரால் பரபரப்பு!!

அரசு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தாமதமாக வருவதாக தேனி மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு!

இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக ஊரக தேனி மாவட்ட செய்தியாளர்களுக்கான புத்தகப்பயிற்சி முகாம் Rural media workshop ( vartalap)
01/03/23( தேனி இன்டர்நேஷனல் ஹோட்டல் மற்றும் NRT மஹால் )காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்படும் என்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் துவக்க உரையாற்ற இருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த மற்ற முக்கிய அதிகாரிகள் அனைவருமே நிகழ்ச்சி துவங்கும் முன்பே வந்து விட்டனர் .ஆனால் தேனி மாவட்ட ஆட்சியர் மட்டும் பத்து மணிக்கு துவங்க இருந்த நிகழ்ச்சிக்கு வராத காரணத்தினால் மேடையில் கலை நிகழ்ச்சிகளை சிறிது நேரம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

அதன் பின்பு ஒரு மணி நேரம் கால தாமதமாக 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்திற்கு வந்ததால் அதுவரை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் காத்திருந்தனர்..

11 மணிக்கு வந்த தேனி மாவட்ட ஆட்சியர் சஜிவனா


தேனி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அரசு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து கால தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .
பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியாளர் ஒரு மணிநேர காலதாமதமாக வருகிறார் என்றால் தேனி மாவட்ட ஆட்சியர் மற்ற நிகழ்ச்சிகளுக்கு காலதாமாக சொல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று நிகழ்ச்சி அரங்கில் இருந்த அனைவரும் பரவலாக பேசிக் கொண்டனர்.
மாலை 4 மணி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்க தேனி மாவட்ட ஆட்சியாளர் மட்டும் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியை சரியான நேரத்திற்கு திட்டமிடாமல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த இரண்டில் எது உண்மை என்பதை தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமே விட்டுவிடுவோம்.

தேனி மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைத்து மேடையில் பேசிய போது 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு முன்பு எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்தப் படிப்புக்கு ஏற்ற கல்லூரி எது என்றும் அந்தக் கல்லூரிகளில் கட்டமைப்புகள் எப்படி இருக்கின்றது என்பதையும் அந்தக் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதையும் நன்கு அறிந்து கொண்டு கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பேசினார். தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கல்லூரிகளின் கட்டமைப்புகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்று பல கல்லூரிகளின் உரிமம் அந்தஸ்துகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்ட ஆட்சியர் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்படி ஆய்வு மேற்கொள்ளும் பொழுது அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை சந்தித்து கல்லூரியில் உள்ள குறைகளை கேட்டு அறிய வேண்டும். அப்படி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதுமான வசதி இல்லை என்றால் அந்த கல்லூரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.


இந்திய தகவல்தொடர்புத்துறை நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததும் இல்லாமல் தமிழ்செம்மல் விருது பெற்ற தேனி சீருடையான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே தேனி மாவட்ட ஆட்சியர் எழுந்து சென்றதால் மேடையில் இருந்த மற்ற அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர்.ஆனால் சபை நாகரிகம் கருதி தேனி சீருடையான் அவர்கள் மேடையில் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
மேடையில் இருந்த அனைவரும் கீழே இறங்கி சென்றதால் அங்கு அமர்ந்திருந்த விருந்தினர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தக்கது.

சமூக நீதிக்கான கருத்துக்களை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது சமூக சிந்தனையாளர்களின் கனவாக இருக்கும் நிலையில் தமிழ் செம்மல் விருது பெற்றவரின் கருத்துக்களை கூட கேட்க மாவட்ட ஆட்சியாளருக்கு நேரமில்லையா !?வேண்டுமென்றே புறக்கணித்தாரா!?


இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை.
முனைவர் தி.சிவக்குமார்
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்
துணை இயக்குநர்
மத்திய மக்கள் தொடர்பகம்
இந்திய அரசு
புதுச்சேரி
9443308376டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button