விருதுநகர்

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை

விருதுநகர் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை ட்ரஸ்ட் மஹாலிலில்உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆவணத்தை அமைச்சர் KKSSR வழங்கிய போது!


விருதுநகர் மாவட்டம்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பேசியபோது
முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற நிகழ்வின் மூலம் பெற்ற மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை (TNeGA) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஓவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 20,191 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள மனுக்களுக்கு பல்வேறு கட்டங்களாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின்கீழ், பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் முடிந்த அளவிற்கு தள்ளுபடி செய்யாமல் உரிய நடவடிக்கை எடுத்து நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படை தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பெண்களை மையப்படுத்தி தான் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம் குடும்பத்திற்கு முழுமையாக சென்று சேரும் என்றும் ம வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button