அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றுச் சென்ற கனரக வாகனம்! வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு விலங்குகள் நல வாரிய அமைப்பினர் கோரிக்கை! நடவடிக்கை எடுப்பாரா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
விலங்குகள் நல வாரிய அமைப்பினர் விருதுநகர் மதுரை சாலையில் உள்ள செக் செக்போஸ்டில் சுமார் 50 மாடுகளை சட்டவிரோதமாக துன்புறுத்தி ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை AP 39.UG 7585 நிறுத்தி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக விசாரித்த போது ஆந்திராவில் இருந்து கொல்லத்திற்கு மாடுகளை கொண்டு செல்வதாக கனரக வாகனத்தின் ஓட்டுனர் தெரிவித்தார்.
ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் திருமுருகன் டிரான்ஸ்போர்ட் கனரக வாகன உரிமையாளர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர்.
இவருக்கு நூற்றுக்கணக்கான மாடு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்களின் அளவு போக்குவரத்து விதிகள் மீறி அதிக நீளமாக சட்ட விரோதமாக காணப்படும். மாடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களில் ஒவ்வொரு மாட்டிற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருக்கும் பட்சத்தில் அந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அளவுக்கு அதிகமான மாடுகளை ஏற்றுக் கொண்டு மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பல மணி நேரம் கொண்டு செல்வதால் மாடுகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மாடுகளை கொண்டு செல்லும் போது அதற்கான தண்ணீர் மற்றும் உணவு கொடுப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலமுறை இது இதுபோன்ற சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றி செல்வதாக பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை கோவை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் புகார் கொடுக்கும் நேரத்தில் மட்டும் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். தற்போது விருதுநகர் காவல் துறையினரிடம் விலங்குகள் நல வாரிய அமைப்பினர் பிடித்துக் கொடுத்திருக்கும் இந்த வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விருதுநகர் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO)வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் வாகன உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும். இந்த வாகனத்தின் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் பின்பு என்ன நடந்தது என்பதை செய்தி வெளியிட உள்ளோம்.