ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த சதி முயற்சி! மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த முயற்சி!மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் இல்ல விழாவில் கலந்து கொண்ட அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களை பேசிய போது தமிழக அரசு முற்றிலுமாக செயல் இழந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டம் நடக்கும் போதெல்லாம் கூறினார் ஆனால் அதற்கு அரசு தீர்வு காணாமல் சாக்குப் போக்கு சொல்லி பொதுச் செயலாளர் கூறிய புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . தற்போது தமிழகத்தில் காட்டுத் தீயாக பற்றி எரிந்தது எதுவென்றால் தமிழக பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் சென்னை அசோக் நகர் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கில் பள்ளி மேலாண்மை குழு சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பு சார்பாக மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார். முற்பிறவியில் பாவம் புண்ணியம் குறித்து அவர் பேசும்போது சில பெண்கள் அழகில்லாமல் பிறப்பது குறித்து பேசினார் அதற்கு முற்பிறவியில் அவர்கள் செய்த பாவங்களே காரணம் என்று பேசினார் மாணவிகள் அவரது பேச்சில் மூழ்கி இருந்த நிலையில் ஒரு ஆசிரியர் எழுந்து தன்னம்பிக்கை குறித்த உரையில் பாவம் புண்ணியம் பற்றி பேச என்ன அவசியம் என்று கேட்டார் .
இது குறித்து சர்ச்சை தமிழக முழுவதும் பரவியது இந்த சம்பவம் மூலம் அரசு பள்ளி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தனிநபர் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே திசை திருப்புற நிகழ்வை நாம் பார்க்க முடிகிறது. இதைத்தான் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் பேசும்போது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கல்வித்துறை அமைச்சர் ஒரு இளைஞர் எல்லா மாவட்டத்திற்கும் அவர் சுற்றுப்பயணம் செய்கிறேன் என்று சொல்கிறார் ஒருபுறத்தில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் அதை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை .மத்திய அரசு நிதியை பெறுவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை சில தினங்களுக்கு முன்பு பேசியதமிழக தலைமைச் செயலாளர் தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் என கூறினார் ஆனால் தற்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எங்களுக்கு நிதி தாருங்கள் என்று சொல்கிறார்கள் இந்த நாடகம் இந்த இரட்டை வேடம் இதை பார்க்கும் போது எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் மத்திய அரசின் மீது 60 சதவீதம் 40% நான்கு ஐந்து கட்டங்களாக 560 கோடி கொடுக்க வேண்டும் என எடப்பாடி அறிக்கை வெளியிட்டு கண்டித்துள்ளார் எதிர்க்கட்சி என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே போராட முடியும் ஆனால் திமுக அரசு 39 நாடாளுமன்ற எம்பிக்களை வைத்துக்கொண்டு கல்விக்கு நிதி பெற முடியவில்லை ஆனால் தற்போது பள்ளிகளில் தன்னம்பிக்கை என்ற பெயரில் மாணவர்களை குழப்புகிற வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிற நிலை ஏற்பட்டு தமிழகம் பதிப்படைந்துஉள்ளது அசோக் நகர் பள்ளி விவகாரம் வெளியில் வந்ததால் விவாதிக்கிறோம் மாணவர்களை இது போல் பல விஷயங்களில் தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது போதை பொருள் மாணவர்கள் கையில் இருக்கும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் போதை பழக்கத்தால் கேள்விக்குரியதாக உள்ளது கல்வித் துறை அமைச்சர் மத்திய அரசு நிதி தரவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார் இந்த ஒரு துறை மட்டுமல்ல மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறும் போது நில எடுப்பு பணியை தமிழக அரசு முழுமையாக முடிக்கவில்லை அவர்கள் கேட்கும் 5000 கோடி என்ன 50,000 கோடி கூட தருவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது ஆனால் நில எடுப்பு பணியை சிறிது கூட முடிக்கவில்லை என சொல்கிறார்இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மத்திய அரசு மாநில அரசைகுற்றம் சாட்டி இருக்கிறது ஆனால் மாநில அரசு அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம் ஆனால் மத்திய அரசுதான் நிதி தர மறுக்கிறது என கூறுகிறது. இதுபோல் மத்திய மாநில அரசுகள் குழாயடி சண்டை போல் இருவரும் சண்டை போடுவதால் மக்கள் கடுமையாக பாதிக் கப்படுகிறார்கள் இதற்கு ஒரே தீர்வு ஊடகத்துறையினர் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செய்திகளை வெளியிட்டால் மட்டுமே மக்களுக்கு தேவையான திட்டங்கள் சென்றடையும் இதற்கு ஊடகங்கள் துணை நிற்க வேண்டும் என பேசினார்.