இரவு பகலாக
சவுடு மண் மற்றும் கிராவல் மண் கொள்ளை!
குவியும் கோடிகள்!
மாதம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு செயலிழந்து கோமாவில் இருக்கும்
புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டம் இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள
பரம்பூர் to குடிமியான் மலை வெள்ளாஞ்சார் ஆற்றில்

அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இரவு பகலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சவுடு மண் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கனரக டாரஸ் டிப்பர் கடத்தி எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் தாலுகாவில் உள்ள
சிறுமங்களபட்டி. சேந்தமங்களம். நிலையப்பட்டி. குடுமியான்மலை பம்பூர். கிளிக்குடி பகுதியில் உள்ள கண்ணாய் மற்றும் குளங்களில்

சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண் இரவு பகலாக அள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலுப்பூர் தாலுகா அன்னவாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காலாடிபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி வீரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டி


சட்ட விரோதமாக வெடி வைத்து 50 அடி ஆழத்திற்கு கற்களை வெட்டி எடுத்து கிரசர் குவாரிக்கு கொண்டு சென்று அந்த கற்களை அரைத்து எம் சாண்ட். பி.சாண்ட் என இரண்டு பிரிவிவாக தரம் பிரிக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறை ஒரு உயர் அதிகாரிகள் மற்றும் இலுப்பூர் தாலுகா வட்டாட்சியர் மற்றும் கனிமவளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் துணையுடன்
ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளில் கடத்திக்கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் இதற்காக புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை காவல்துறை அதிகாரிகள் மாதம் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு
செயலிழந்து கோமாவில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் கல் குவாரிகளை பொறுத்தவரை கனிமவள துறையின் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறுபவரே குவாரியில் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்.
குவாரியின் எல்லையை காட்ட மஞ்சள் கற்களை ஊன்றியிருக்க வேண்டும்.
குவாரி அருகில் 7.5 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். குவாரி அருகில் இருந்து 10 மீட்டருக்குள் நீராதாரங்கள், வழித்தடப் பாதைகள் இருக்கக் கூடாது. 50 மீட்டர் தொலைவுக்குள் உயர், குறைந்த அழுத்த மின்பாதை இருக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 50 மீட்டருக்குள் இருக்கக் கூடாது. குவாரி கற்கள் வெட்டப்படும்போது தூசு கிளம்பும் என்பதால், மாசு கட்டுப்பாடு ஏற்பாடாக அருகில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களின் கழிவுகளை, குத்தகை இடத்திற்குள்ளேயே போட்டு வைத்திருக்க வேண்டும். பின் அவற்றை அரசே ஏலமிடும். குவாரி குறித்து முன்கூட்டியே ‘மைனிங் பிளான்’ என்ற ஒன்றை உரிமையாளர் வழங்கி, ‘அப்ரூவல்’ பெற வேண்டும்.அதனடிப்படையிலேயே குவாரி இயங்க வேண்டும். மைனிங் பிளானில், குவாரி அமைவிடம், பாதுகாப்பு, அதில் வெட்டி எடுக்கப்பட உள்ள கற்களின் அளவு, வெட்டிய கற்களை எடுத்துச் செல்லும் முறை உட்பட குவாரியின் அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும். இதுதவிர பல்வேறு சிறுசிறு நிபந்தனைகள் இவ்விஷயத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
அரசின் அனுமதியுடன் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த சட்ட விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட
புதுக்கோட்டை மாவட்டத்தில்
செயல்பட்டு வரும் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மைனிங் பிளான் ஏதோ கடமைக்கு அனுமதி வாங்கி வைத்திருப்பதாகவும் மற்றபடி எந்த விதிமுறையும் கடைபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆன்லைனில் வழங்கப்படும் நடைச் சீட்டுப்படி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. ஒரே சீட்டை வைத்து அனுமதிக்கப்பட்ட லாரிகளில் வேறு இடங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் அரசு அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் முறையான கட்டணமோ முறையான அனுமதிச்சீட்டு இல்லாமல் கனிம வளம் கடத்திச் சென்று விற்பனை செய்வதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் குவாரி உரிமையாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு, பாதுகாப்பான முறையில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தப் படுவதில்லை.
கல் குவாரியில் விதிமுறை மீறி வெடி மருந்துகள் வைத்து அதிக ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாகவும் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது. மாசுபட்ட குடிநீரை கால்நடைகள் பருகுவதால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் மாசு கலந்த புகை பரவி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி சுவாசப் பிரச்னை ஏற்படுவதாக சுற்றுவட்டார பகுதியில் மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
ஆனால்
கல் குவாரிகளில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் வெடிமருந்து இருப்புகளை ஆய்வு செய்வதில்லை. மட்டுமில்லாமல்
தடைசெய்யப்பட்ட வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்தால் காவல்துறையினர் பறிமுதல் செய்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவள கடத்தல் மாஃபியா கும்பலுக்கு உறுதுணையாக கனிமவளத்துறை ,
வருவாய்த்துறை காவல்துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளில் மோட்டார் வாகன விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்டு கொள்ளாமல்
மாதம் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளம் வெட்டி கடத்திச் செல்வதற்கு மணல் மாபியா கும்பல் நான்கு துறை அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
ஆனால், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகள் மீது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இயற்கை வளங்களை சூறையாடி கனிம வளங்களை கொள்ளையடிப்பதால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
சட்டவிரோத சுரண்டல் மூலம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஆகவே இயற்கை வளங்களை பாதுகாக்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான குவாரிகளில் திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத செயல்பட்டு வரும் குவாரிகளை சீல் வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், சட்டவிரோத கனிம வளம் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த அதிகாரிகள் மீதும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”
என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு

சென்னை உயர் நீதிமன்றம் கனிமவளத்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கனிம வளங்கள் இந்த நாட்டின் சொத்து என தெரிவித்த நீதிபதிகள், அவற்றை கொள்ளையடிக்க யாரையும் அனுமதிக்க முடியாது.
கனிமவளக் கொள்ளையைத் தடுக்க அரசுக்கு அதிகாரம் இருந்தும், நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதில் என்ன தயக்கம்? என அரசு தரப்பு வழக்கறிஞர்களை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கனிமவளத் துறையும், அதிகாரிகளும் திருட்டைத் தடுக்காததே கொள்ளைக்கு முக்கிய காரணம் என்றும்
கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தால்தான் குற்றங்கள் குறையும் என்றும்
கனிமவள கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து

புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமங்கள் நாட்டின் சொத்து, எனவே மணல் கொள்ளை போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலங்கள், தங்கள் மாநில மக்களின் எதிர்காலம் கருதி, அங்குள்ள இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் வெட்டி எடுப்பதற்கு தடை விதித்ததோடு, அம்மாநில இயற்கை வளங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களையும் வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வளம் கடத்தலை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமா? சட்டவிரோத குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டு நிறுத்தப்படுமா? என்பதைக் காலம் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




