இலங்கை அகதிகள் வசக்கிக்கும் இடத்தை தனி நபர் பெயரில் சட்ட விரோதமாக பட்டா மாற்றம் ! பேராவூரணி வட்டாட்சியர் பல லட்சம் லஞ்சம் ! கோமாவில் இருக்கும் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்!
இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை சட்ட விரோதமாக தனி நபர் பெயரில் சட்ட விரோதமாக பட்டா மாற்றத்தை ரத்து செய்து
இலங்கை அகதிகளின் அரசு வழங்கிய இடத்தை மீட்டுக் கொடுத்து கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்தும் கோமாவில் இருக்கும் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அதிகாரிகள்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி உட்பட்ட முடச்சிக் காடு கிராம ஊராட்சியில் 1976ஆம் ஆண்டு இலங்கை அகதிகளான சி. ராஜலட்சுமி மற்றும்
க. சக்திவேல், பொ சிங்கார வேலு, மேலும்( 9) நபர்களுக்கு அரசு புல எண்;141/11இல்
0.40.5ஏர்ஸ்,
(2) 141/12இல்
0.37.0ஏர்ஸ்,
141/9 இல் 0.40.5ஏர்ஸ், நிலத்திற்கு 1976ல் பட்டா வழங்கியுள்ளது,
அந்த இடத்தில் இலங்கை அகதிகள் பயன்படுத்தி வந்த நிலையில் பேராவூரணி கழனி வாசல் கிராமத்தை சேர்ந்த தருமன் அம்பளம் மகன் தங்கவேல் பெயரில் போலியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்து உள்ளதாகவும்
பட்டா எண் (395) 746 /2005-2007 அரசு ஆணைப்படி பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என
முடச்சிக்காடு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ரங்கராஜன்
பட்டா மாறுதல் சம்பந்தமாக 2019 ஆம் ஆண்டு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர்,பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ,பேராவூரணி வட்டாட்சியர் ஆகியோருக்கு
இலங்கை அகதிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை தருமன் மகன் தங்கவேல் பெயரில் தங்கவேல் மகன் பெயரில் சட்டவிரோதமாக போலியாக பட்டா மாறுதல் செய்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து கொண்டு குண்டர்களை வைத்து அகதிகளை மிரட்டி வருகிறார்கள் .ஆகவே மோசடியாக பட்டா மாறுதல் செயுதுள்ளதை விசாரணை செய்து பட்டா வை ரத்து செய்து நிலத்தை மீட்டு இலங்கை அகதிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டி புகார் மனு கொடுத்திருந்தார்.
அந்த புகார் மனுவை அடுத்து விசாரணை செய்த பேராவூரணி வட்டாட்சியர் இலங்கை அகதிகளுக்கு கொடுத்த இடம் தான் அந்த இடம் என்றும் ஆனால் தவறாக பட்டா மாற்றம் செய்துவிட்டோம் . ஆனால் இதனை நாங்கள் ரத்து செய்ய முடியாது என்று கூறியதால் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மணு கொடுக்கப் பட்டது.அதன் பின் 27:05:2019 அன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் தர்மன் மகன் தங்கவேல் பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்ததை ரத்து செய்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேராவூரணி வட்டாட்சியர் அவர்களுக்கு கோட்டாட்சியர் ஆணையிட்டார் .
ஆனால் அப்போது பணியில் இருந்த வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாவை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கோட்டாசியர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தற்போதுள்ள பேராவூரணி வட்டாட்சியர் மற்றும் பட்டுகோட்டை கோட்டாட்சியர்
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்
இதுவரை பட்டாவை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
கோமாவில் இருப்பது போல காலம்
தாழ்த்தி வருவதாகவும் குற்றச்
சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் பட்டாவை பெயர் மாற்றம் செய்த தங்கவேல் தற்போது காலாமானதால் அவரது மகன் செந்தில் குமார் அந்த இடத்தில் இருந்துகொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கொடுக்க வேண்டிய லஞ்சம் அனைவருக்கும் கொடுத்து வருகிறேன் என்றும் அது மட்டுமில்லாமல்
தற்போது பேராவூரணி வட்டாட்சியர் ரா. தெய்வானை கையூட்டாக ஒரு பெரும் தொகையை பெற்றுள்ளதாகவும் ஆகவே பண பலம் ஆள் பலம் அனைத்தும் எங்களிடம் இருக்கிறது என்றும் மறைந்த தங்கவேல் மகன் செந்தில்குமார் அகதிகளை மிரட்டும் தேனியில் பேசி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்
எது எப்படியோ அகதிகளுக்கு அரசு வழங்கிய இலவச இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து சட்ட விரோதமாக மாற்றம் செய்துள்ள பட்டாவை ரத்து செய்து மீண்டும் இலங்கை அகதிகளுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வாளர்கள் கோரிக்கையாகும்.
எது எப்படியோ ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என ஒரு சிலர் கூறி வருவதற்கு ஏற்றார் போல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடந்த பட்டா மாற்றத்தை திமுக ஆட்சி வந்து ரத்து செய்யாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் ஒரு சில கருப்பு ஆடுகள் என்று சொல்லப்படும் அதிகாரிகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது போன்ற அதிகாரிகளை கலை எடுத்தால் மட்டுமே திமுக ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும் .
ஆகவே வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!