ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில் என்பவரிடம் தடைசெய்யப்பட்ட லாட்டரி வாங்கி ரூபாய் 65 லட்சம் ஏமாற்றப் பட்டதால் தற்கொலை! நெஞ்சை உருக்கும் வீடியோ பதிவு!! கண்டுகொள்ளாத ஈரோடு மாநகர காவல் ஆணையர்!!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!??

தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சட்ட விரோதமாக விற்கும் ஈரோடு கருங்கல் பாளையம் லாட்டரி விற்பனை செய்யும் திமுக 39 வது வார்டு கவுன்சிலர் கிதாஞ்சலி கணவர் செந்தில் தான் தற்கொலைக்கு காரணம்.
வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி வீடியோ!!!!
மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்து வரும் கருங்கல் பாளையம் செந்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளதாக தகவல் வந்த நிலையில் தற்போது 54வயதுடைய ராதாகிருஷ்ணன் (எல்லப்பாலையம்) இவர் 65 லட்சம் ரூபாய் மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டு வாங்கி கடன் ஆனதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் இதற்க்கு காரணம் கருங்கல் பாளையம் திமுக கவுன்சிலர் கீதாஞ்சலி கணவர் செந்தில் தான் என்று வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஈரோடு நகரத்தில் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி , ஆன்லைன் லாட்டரி ,விற்கும் நபர்களுக்கு அரசியல் முக்கிய புள்ளிகள் மற்றும் ஆட்சியிலிருக்கும் அமைச்சர்கள் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் சட்ட விரோதமாக அமோக விற்பனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டும் இருப்பதால் இந்த சமூக விரோதிகளை முற்றிலும் ஒழிக்க ஈரோடு நகர காவல் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது திமுக ஆட்சி வந்ததும் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்கும் பள்ளிபாளையம் ராஜா மற்றும் கருங்கல்பாளையம் செந்தில் இருவரும் திமுக கட்சியில் இணைத்துக் கொண்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு ஈரோடில் கவுன்சிலர் சீட் திமுகவில் கேட்டதாகவும் அதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியில் மறுக்கப்பட்டதாக தகவல் வந்தது.ஆனால் கருங்கல் பாளையம் செந்தில் மனைவிக்கு கவுன்சிலர் சீட் திமுக வில் கொடுக்கப் பட்டு தற்பொழுது 39 வது வார்டு கவுன்சிலர் ஆக உள்ளது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் மாவட்ட திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்தப் புகைப்படங்களை தங்களது வாட்ஸ் அப்பில் வைத்துக் கொண்டு காவல்துறையை மிரட்டி வருகிறார்கள் .என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.. இவர்கள் மீது பல புகார்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து எந்தப் பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து தற்போது வரை வேறு வேறு மின்னஞ்சல் மூலம் தங்களது ஆன்லைன் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப்படி இருந்தும் தற்போது ஈரோடு நகரில் அங்கொன்றும் இங்கொன்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஈரோடு நகரில் மிகவும் சாமானிய பொதுமக்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது ஆன்லைன் மற்றும் மூன்று நம்பர் லாட்டரியில் தான். ஆன்லைன் லாட்டரி மோகத்தால் பலர் தம் குடும்பங்களை இழந்து தற்போது வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதுதான் மிக வேதனையாக இருக்கிறது. பலமுறை ஆன்லைன் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதை ஆதாரத்துடன் ரிப்போர்ட்டர் விஷன் இதழில் வெளியிட்டிருந்தோம் .
இது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட திமுக அமைச்சர் முத்துசாமி அவர்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் பள்ளிபாளையம் ராஜா மற்றும் செந்தில் இருவரும் கட்சியில் மட்டும் இணைந்தார்கள் அவர்களுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை அவருக்கு கட்சிக்கும் எங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் தகவல் கொடுத்தனர். இது சம்பந்தமாக பள்ளிபாளையம் ராஜா அவரிடம் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் விற்கவில்லை யாரோ விற்க்கிறார்கள் ஆனால் அவர்கள் பெயரை நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார் .ஆனால் நாம் களத்தில் விசாரித்தபோது பள்ளிபாளையம் குண சேகர் என்ற ராஜா 5 நபர்களை வைத்துக் கொண்டு வேறு வேறு இடங்களில் அலுவலகம் வைத்து ஆன்லைன் லாட்டரி ஆதாரத்தை படுஜோராக செய்து வருவதாகவும் குறைந்தது நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருமானம் வருவதாகவும் இதனால் சாதாரணமாக இந்த பள்ளிபாளையம் ராஜா தற்போது பல கோடிகளுக்கு அதிபராகவும் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அதே போல் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்து வரும் கருங்கல் பாளையம் செந்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளதாக தகவல் வந்த நிலையில் தற்போது 54வயதுடைய ராதாகிருஷ்ணன் (எல்லப்பாலையம்) இவர் 65 லட்சம் ரூபாய் மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டு வாங்கி கடன் ஆனதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் இதற்க்கு காரணம் கருங்கல் பாளையம் திமுக கவுன்சிலர் கீதாஞ்சலி கணவர் செந்தில் தான் என்று வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆகையால் உடனே தமிழக முதல்வர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்து வரும் கருங்கல்பாளையம் செந்தில் அவரை உடனே திமுக கட்சியில் இருந்து நீக்கி அவருடைய மனைவியையும் திமுக கட்சியில் இருந்து நீக்கி 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அது மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற பல உயிர்கள் தடைசெய்யப்பட்ட லாட்டரி அளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனம் ஆகவே தமிழக முதல்வர் இனிமேலாவது இதுபோன்ற உயிர்களை காவு கொடுக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற தடை செய்யப்பட்ட லாட்டரி கஞ்சா வியாபாரம் செய்பவர்கள் அந்த மாவட்ட கட்சியில் முக்கிய புள்ளிகளை கைகோர்த்துக்கொண்டு காவல்துறையை ஏமாற்றி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. ஆகவே தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி மூன்று நம்பர் லாட்டரி இவ்வகை விற்பனை செய்யும் நபர்களை எந்த அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதுதான் நிதர்சனம்.
எது எப்படியோ சாமானிய அன்றாடம் கூலித்தொழில் வேலை செய்து சம்பாதிக்கும் பல நூறுகளை இதுபோன்ற சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரியில் இழந்து தன் குடும்பங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது உள்ள ஈரோடு நகர டிஎஸ்பி ஆனந்தகுமார் அவர்கள் காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆன்லைன் லாட்டரி முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் பொறுத்திருந்து பார்ப்போம் அவரது பணியை!!





Howdy! Someone in my Myspace group shared this site with us
so I came to look it over. I’m definitely loving the
information. I’m bookmarking and will be tweeting this to my followers!
Excellent blog and superb style and design.