அரசியல்

உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?
காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?
இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் !?
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் மணிமாறன் மீது அடுக்கடுக்கான புகார்!
நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை !?

உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?
காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?
இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் !?
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் மணிமாறன் மீது அடுக்கடுக்கான புகார்!
நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை !?

கடந்த திங்கட்கிழமை  23ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி அவர்கள்  உசிலம்பட்டி தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் திமுக தலைமை நீக்கப்பட்ட நிர்வாகி திருமண வீட்டில்  ஏற்பாடு செய்திருந்த மிகப் பிரமாண்டமான விருந்தில் கலந்து கொண்டுள்ளார் அமைச்சர்.அங்கு மணமக்களை வாழ்த்தி பேசிய பின்பு அமைச்சர் மூர்த்தி  திமுக தலைமை நிக்கப் பட்ட முன்னாள் நிர்வாகிகளுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார் இதில் உசிலம்பட்டி பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி செயற்குழு உறுப்பினர் இளமகிழன். சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் , செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் ,மதுரை 99 வது வார்டு உறுப்பினர் எஸ் பி எம் சிவா , மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது உசிலம்பட்டி திமுக கட்சி தொண்டர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி வந்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் நீக்கப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியாதவும் அப்பொழுது மாவட்டச் செயலாளர் மணிமாறன் மீது பல புகார்கள் கூறியதாகவும் அதைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி சென்னையில் கட்சித் தலைமையிடம் பேசுவதாகவும் ஆனால் மணிமாறன் மீது வைத்துள்ள புகாரை மனுவாக திமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்குமாறும் கூறி உள்ளார்.
உடனே 24 ஆம் தேதி
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் மீது அடுக்கடுக்கான புகார்களை மனுவாக கொடுத்துள்ளதாகவும் 25 ஆம் தேதி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட 8 ஒன்றிய செயலாளர்கள் 3 பகுதிச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக மணிமாறன் மீது திமுக தலைமை கழகத்தில் புகார் கொடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.


மணிமாறன் மீது திமுக தலைமையிடம் கொடுக்கப் பட்ட புகார்கள்!!

மதுரை புற நகர் தெற்கு மாவட்ட செயலாளர்
மணிமாறன்
நீக்கப் பட்ட உசிலம்பட்டி திமுக நிர்வாகிகள்

தற்போது திமுக கட்சியில் காலியாக உள்ள நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் முக்கியமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரச் செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு போட்டி இருப்பதாக தெரியவந்தது. இந்த நிலையில் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் பதவிக்கு SOR தங்கப்பாண்டியன் அவர்கள் வேட்புமனு கொடுத்துள்ளதாகவும் மற்ற திமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி நகர ஒன்றிய செயலாளர் பதவிக்கு நிற்பதற்கு வேட்புமனு வழங்க வில்லை என்றும் அதற்கு காரணம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் SOP தங்கப்பாண்டியிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு அந்த பதவியை அவருக்கு வழங்கி உள்ளார் என்றும் மற்ற நிர்வாகிகளுக்கு வேட்பு மனு வழங்க படிவம் தர மறுத்துவிட்டார் என்றும் இதே எஸ் ஓ பி தங்கப்பாண்டியன் உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் பதவி யிலிருந்து 2016 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு இரண்டு முறை நிக்கப்பட்டவர் என்றும் SOP தங்கப்பாண்டியன் நீக்க தற்போது உள்ள மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தான் கைப்பட எழுதி திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது என்றும் அதுமட்டுமில்லாமல் கடந்த நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஐய்யப்பணுக்கு ஆதரவாக வேலை பார்தார் என்றும் .இவருக்கு கட்சி பதவி வழங்க வில்லை என்றால் யாருக்கும் அந்த பதவி கிடைக்க கூடாது என்று தான் இருக்கும் கட்சிக்கு எதிராக முழு மூச்சாக வேலை பார்ப்பார் என்றும் திமுக கட்சியில் இரண்டு முறை நீக்கப்பட்ட ஒரு நபருக்கு நகர செயலாளர் பதவி வழங்கக்கூடாது என்றும் திமுக தலைமைக் கழகத்திற்கு உசிலம்பட்டி நகர முக்கிய திமுக நிர்வாகிகள் தலைமை கழகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதே போல் காலியாக உள்ள உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பதவிக்கு நான்கு பேரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு யாருக்கு என்று முடிவு செய்யாமல் மாவட்ட செயலாளர் மணி மாறன் இருப்பதாக புகார் கொடுத்துள்ளனர் .

அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு தற்போது நகர சேர்மனாக இருக்கும் சகுந்தலா அவர்களுக்கு தருவதாக தான் உறுதிமொழி கொடுத்துள்ளார் மாவட்ட செயலாளர் மணி மாறன். அப்படி நகர சேர்மன் பதவி வழங்க வேண்டுமென்றால் தேர்தல் செலவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் அதற்கு ஒத்துக்கொண்டு சகுந்தலாவின் மகன் விஜய் அவர்கள் ஐம்பது லட்ச ரூபாய் முன் தொகையாக கொடுத்துள்ளார் அதை பெற்றுக்கொண்டு மணிமாறன் சில நாட்களுக்கு பின்பு உசிலம்பட்டி முன்னாள் திமுக நகர செயலாளர் தங்கமலை பாண்டி மனைவி பாண்டியம்மாள் நகர சேர்மன் பதவி கேட்பதாகவும் உங்களுக்கு துணை சேர்மன் தருகிறேன் என்றும் இன்னும் 40 லட்சம் கொடுங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தியதில் சகுந்தலாவின் மகன் விஜய் ஒத்துக் கொண்டு 40 லட்சம் மீண்டும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சு வார்த்தை நடக்கும் போது நடுவராக மாநில திமுக பொதுக் குழு உறுப்பினர் சோலை ரவி அவர்களை வைத்து தான் பேசி பணம் வாங்கி இருக்கிறார் மணிமாறன்.
அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திலும் பாண்டியம்மாள் நகர சேர்மனாக அறிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளார் மாவட்ட செயலாளர் மணிமாறன். பாண்டியம்மாள் நகர சேர்மன் பதவி வழங்குவதற்கு பாண்டியம்மாள் இடம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மணிமாறன் வாங்கி இருப்பதாகவும் அதன்பின் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களிடம் தேர்தல் செலவுக்கு 5 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மணிமாறன் வசூல் செய்து உள்ளார் .
நகராட்சி சேர்மன் பதவி தருவதாக 2 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு மூன்றாவதாக செல்வி என்பவரை தலைமைக் கழகத்திற்கு பரிந்துரை செய்து மாவட்ட செயலாளர் மணிமாறன் அனுப்பியுள்ளார். தலைமை கழகத்தில் செல்வி அவர்களை நகர சேர்மன் பதவிக்கு வேட்பாளராக முன்னிறுத்த அறிவித்தது. இதனால் திமுக முன்னாள் நகர செயலாளர் தங்கமலை பாண்டி மற்றும் சகுந்தலாவின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் மணி மாறன் மீது அதிருப்தியில் இருந்தனர்.

( தேர்தல் முடிந்து மறைமுக தேர்தல் நடந்தது. அதில் உசிலம்பட்டி நகராட்சியின் நகர்  மன்ற தலைவர் தேர்தலின் போது திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், திமுக தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் 10 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி, மற்றொரு திமுக 11வது வார்டு உறுப்பினர் சகுந்தலா நின்று வெற்றி பெற்றவர், நகர்மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 24 வாக்குகளில் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அம்பிகா செல்வி 6 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்கு என்று அறிவிப்பட்டது குறிப்பிடத் தக்கது.

அதன் பின்பு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும் நகர சேர்மன் சகுந்தலாவுக்கு ஆதரவாக இருந்த உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கமலைப் பாண்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி . நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் ஆகிய 4 பேரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து தலைமை அறிவித்தது.)

தற்போது திமுக உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் நகர ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களுக்கும் நகர செயலாளர் பதவியில் போட்டியிட வேட்புமனு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியும் அவர் வேட்புமனுவை வழங்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் காண்ட்ராக்ட் வேலைகள் தருவதாக சுமார் 13 கோடி ரூபாய் வரை வாங்கி உள்ளதாகவும் அதில் இரண்டு மூன்று பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும் அதில் ஒருவர் அதிமுக நிர்வாகி பூப் பாண்டி என்றவரிடம் 50 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளதாகவும் நீக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி அவர்களிடம் இதுவரை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் திமுக தலைமையிடம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது!!

திமுக தலைமைக் கழகத்தில் மனு கொடுத்துள்ள உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள்.1.சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், 2.செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகர் ,3.திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபால், 4.கள்ளிகுடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ,5.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் வேட்டையன், 6.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, 7.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் தனபால், 8.T.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகர் ,உசிலம்பட்டி நகரச் சேர்மன் சகுந்தலா மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி பகுதி செயலாளர் 1.உசிலை சிவா,. 2.ஈஸ்வரன் 3.செந்தாமரைக்கண்ணன் ,மு.சி. கோ .முருகன் ,திருமங்கலம் SPM.சந்திரன் , நீக்கப்பட்டஉசிலம்பட்டி தங்கமலைப்பாண்டி, சோலை ரவி சுதந்திரம் ,ஆகியோர் தனித்தனியாக கொடுத்துள்ள மனுவில்  கட்சிக்கு விரோதமாக  உண்மையை மறைத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் செயல்பட்டு வருகிறார்.என்று  புகார் மனு வழங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதன் பின்பு 26 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் மணிமாறன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களிடம் திமுக தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது!

மதுரை புற நகர் தெற்கு மாவட்ட
இரண்டு கோஷ்டி உட் கட்சி மோதலால் திமுக கட்சி தலைமை மதுரை மாவட்ட புற நகர் தெற்கு மாவட்ட செயலாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை கட்சித் தொண்டர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வருகிறாரகள்!

Related Articles

Back to top button