உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகளுக்குள் நடந்த மோதலை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களின் செல்போனை பிடுங்கி உடைத்ததால் பரபரப்பு!!

உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்த நிர்வாகிகளுக்குள் நடந்த மோதலை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களின் செல்போன் உடைத்ததால் பரபரப்பு._
திமுக கட்சியில் சில மாதங்களாக
மூத்த தலைவர்களை
மதிப்பதும்
அவர்களின் ஆலோசனையை
கேட்கக்கூட மனமில்லாமல் தற்போதுள்ள நிர்வாகிகள் நடந்து கொள்வதாக மூத்த நிர்வாகிகளின் ஆதங்கம்!
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தனது மனைவி தயாரிக்கும் திரைப்பட த்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.

அதன்பின்பு
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உலக மீனவர் தினத்தை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியிலும்,

புத்தளத்தில் கட்சி அலுவலகம் திறப்பு விழாவிலும், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி வந்துள்ளார்.
காவல்கிணறு சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்பு
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தற்போதுஉள்ள மனோ தங்கராஜ் அமைச்சர் மற்றும் மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களை அமைசர், மேயர் தலைமையிலான தொண்டர்கள் மற்ற மூத்த நிர்வாகிகளை உள்ளே விடாமல் கதவை பூட்டியுள்ளனர்.

அதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த முன்னால்
MP ,MLA மற்றும் மூத்த திமுக தலைவர்களை சந்திக்க முடியாமல் தடுத்து நிறுத்தியதாகவும் அதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அந்த நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்ததாகவும் உடனே முதலில் ஈடுபட்டிருந்த ஒரு சிலர் பத்திரிகையாளர்களின்
செல்போனை பிடிங்கி கீழே போட்டு உடைத்ததாகவும்

இதனால் பத்திரிகையாளர்களுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு ஓய்வெடுப்பதற்காக தனது அறைக்கு சென்றார். அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களை அமைசர், மேயர் தலைமையிலான தொண்டர்கள் உள்ளே விடாமல் கதவை பூட்டினர். இதனால் திமுக இளைஞரணி தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது அடிதடியாக மாறி ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் தாக்கினர். பின்னர் செல்போனை பிடுங்கி உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது
குமரி மாவட்டத்தில்
மூத்த திமுகவினர்களுக்கு
மரியாதையும் இல்லை
அவமானம்தான்
தலைவர் கலைஞர் இருந்து இருந்தால் இப்படி
ஒரு சம்பவம் குமரியில் நடக்காமல் கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டன் வரை சந்தித்து இதுபோன்று கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்படாதவாறு அழைத்துப் பேசி இருப்பார் என மூத்த திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
எது எப்படியோ திமுக கட்சியின் நட்பையரை கலங்கப்படுத்துவதற்காக ஒரு சில கருப்பு ஆடுகள் திமுக கட்சிக்குள் இருப்பதால்தான் இது போன்ற சிறு சிறு மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும் இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவதாகவும் கட்சிக்குள் இருந்து குழப்பத்தை ஏற்படுத்தும் கருப்பாடுகளை அகற்றி விட்டால் திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்