உயிர் பலி வாங்க அந்தரத்தில் தொங்கும் பாலம் !
அச்சத்தில் கிராம பொதுமக்கள்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO வின் அலட்சியப் போக்கா!? நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியாளர் !??
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO வின் அலட்சியப் போக்கால் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலம் !
அச்சத்தில் கிராம பொதுமக்கள்!
உயிர்ப்பலி நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியாளர் !??
மதுரை மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கட்டமைப்பு வசதிகளும் ,குடிநீர் வசதி ,கால்வாய் வசதி மின்சார வசதி எதுவுமே எந்த ஒரு கிராமத்திலும் செய்யவில்லை என்று சாமானிய பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி தாலுக்கா கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உட்கிராமம் பொம்மன்பட்டி அம்மாச்சியாபுரம் ரோடு வைகை ஆறு வட கரை கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் பாலம் தான் இப்படி உருக்குலைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தற்போது இருக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரிவு பாசன வட கரை கால்வாய் மட்டும் பொதுப் பணித்துறை பராமரிப்பில் உள்ளது.
ஆனால் கால்வாய் மேலே கட்டியுள்ள பாலம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக பராமரிப்பில் இருப்பதாக தகவல்.
ஆனால் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பாலத்தை கண்டுகொள்ளாமல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பிடிஓ இருப்பது தான் வேதனையாக உள்ளது .
அதுமட்டுமில்லாமல் இந்த ஊர் பொது மக்கள் செல்ல அரசு பேருந்து வசதி கூட கிடையாது! பொதுமக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் சைக்கிள் இருசக்கர வாகனம் அப்படி இல்லையென்றால் நடந்துதான் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
பொதுமக்கள் இந்தப் பாலத்தை நம்பி தான் கடந்து செல்ல வேண்டும்..
என்றாவது ஒருநாள் இந்த பாலம் இடிந்து விழும் சூழ்நிலையில் எத்தனை உயிர்களை பலிவாங்க உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. கனரக வாகனங்கள் ஏதாவது சென்றால் கண்டிப்பாக இந்த பாலம் இடிந்து விழும் என்பது தான் நிதர்சனம். அந்த அளவிற்கு தான் இந்த பாலத்தில் கட்டிடத்தின் உறுதித் தன்மை உள்ளது. கட்டிடத்தின் அடியிலும் மேலேயும் வெறும் கம்பிகள் மட்டுமே தெரிகிறது .
இதற்கு வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் (BDO&ABDO ) வட்டார வளர்ச்சி அலுவலரின் அலட்சியப் போக்கின் காரணமா!?
ஏனென்றால் பழைய பாலத்தை இடித்து புதுப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பலமுறை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது .
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.
ஆகவே பொதுப்பணித் துறை நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இணைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த பாலத்தை அகற்றி புது பாலத்தை கட்டி கொடுத்தால் மட்டுமே வடக்கு இருக்கும் உயிர் பலியை தடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் அடிப்படை வசதி இல்லாத இந்த பொம்மன்பாட்டி கிராம பொது மக்கள் அச்சம் இல்லாமல் விவசாய நிலங்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் விவசாய இயந்திரங்களை கொண்டு சென்று வரவும் முடியும் என்பதுதான் நிதர்சனம்.
தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதை மனதில் வைத்துக் கொண்டு தங்களுடைய கடமையை நிறைவேற்றிட வேண்டும். நம்மீது மக்களுக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றிதான் நமக்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி – ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் – பாடுபட்டுக் கொண்டிருக்கும் – கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்று திருமண விழாவில் திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது)
ஆகவே தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ள திமுக கட்சித் தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன் (மார்ச் 12 )மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் பேசிய போது ஆட்சியர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .இதில் கள ஆய்வில் சந்திக்கும் சில குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசு உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகத் தகவல்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நீங்கள் அரசிடம் கோரிய உதவிகளைக் கவனத்தோடு கேட்டேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறந்த முறையிலே தங்கள் மாவட்டங்களில் அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், இதற்காக உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பேசும் பொழுது குறிப்பிட்ட ஒரு பிரச்சினையையும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்திருக்கிறீர்கள். அவற்றை, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களும் அரசுச் செயலாளர்களும் கவனமுடன் கருத்தில்கொண்டு தலைமைச் செயலாளருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’, இந்த இரண்டு பெரும் திட்டங்களும் இலட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் திட்டங்களாக இது அமைந்திருக்கிறது. அதே சமயம், பல்வேறு துறைகளின் தேவைகளை ஒன்றிணைத்து நிறைவேற்றவேண்டிய திட்டமும் ஆகும். இந்த இரு திட்டங்களையும் நீங்கள் முன்னுரிமை கொடுத்து முன்னெடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பல்வேறு துறைகள் மூலமாக நிதிகளை ஒதுக்கி அரசு செயல்படுத்தினாலும், அது சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று நமக்குத் தெரிய வருகிறது. எனவே, நீங்கள் எந்தெந்த துறைகளில், எந்தெந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் உங்கள் மாவட்டம் சற்று பின் தங்கி உள்ளதோ அவற்றில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் மாவட்டத்தை மாநிலத்தின் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக ஆக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய நீங்கள் உங்கள் மனதில் கொள்ளவேண்டிய ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் – Priorities என்று சொல்வார்கள் – மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் கிராமங்களில் சென்றடையவும் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தால் உடனே அந்த புகார்களை மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்து உள்ளார்கள் .ஆகவே பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் விதத்தில் மாவட்ட ஆட்சியாளர்கள் மக்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன் .அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்று மாவட்ட ஆட்சியாளர்களின் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை மதுரை மாவட்ட ஆட்சியாளர் நினைவில் கொண்டு இதுபோன்ற ஆபத்தான நிலையில் இருக்கும் கால்வாய் பாலங்களை அகற்றி புது பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.