மாவட்டச் செய்திகள்

ஊராட்சிகளில் மக்கள் நலத் திட்டங்களை ஆய்வு செய்யும்போது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை ஊராட்சி மன்ற தலைவர்களை கப்பம் கட்ட சொல்லும் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்!? நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்!?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைக்கார சத்திரம் ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் 2021 ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் இரண்டு பேருடைய பதவியின் செயல்பாடுகளை நிறுத்தி உத்தரவிட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி செய்த கிளர்க் பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பின் நவம்பர் மாதம் ஆணைக்கார சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கண்ணன் பஞ்சாயத்து கிளார்க் பணியில் சேர்ந்துள்ளார்.
அதன் பின்பு கண்ணன் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஊழல் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை தகவல் அறியும் சட்டத்தில் பெறப்படப்பட்டதை இணைத்து கண்ணன் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அணைக்கரைச்சத்திர பஞ்சாயத்து கிளர்க் கண்ணன் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது சம்பந்தமாக ஆணைக்காரசத்திர கிராமத்தில் உள்ள ஒரு சில சமூக ஆர்வலரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
வேலியே பயிரை மேய்வது போல ஊராட்சிகளில் நடக்கும் குறைகள் மற்றும் ஊழல் முறைகேடுகளை கண்காணிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் ( AD) மஞ்சுளா தான் ஊழல் முறைகேடு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வசூல் செய்யும் பணத்தை யார் மூலம் பஞ்சாயத் AD மஞ்சுளா அவர்களுக்கு கொடுக்கப் படுகிறது என்று ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை நிருபருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஆதாரத்துடன் …. இந்த செய்தி …உதவி இயக்குனர் மஞ்சுளா இதற்கு முன்பு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ( ABDO ) உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியில் இருந்து உள்ளார்.
தற்போது பஞ்சாயத்து உதவி இயக்குனராக உள்ள மஞ்சுளா மீது அப்போது பல ஊழல் முறைகேடு செய்துள்ளதாகவும் அதற்கெல்லாம் காரணம் பல ஊராட்சி மன்ற பஞ்சாயத்து கிளார்க் உடந்தையாக இருந்ததாகவும் அதில் முக்கியமாக தற்போது ஆணைக்கரை சத்திரத்தில் உள்ள பஞ்சாயத்து கிளர் கண்ணன் தான் மஞ்சுளா அவர்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் அதன் பின் ABDO வாக இருந்த மஞ்சுளா கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்பு ஊழல் செய்து வைத்திருந்த பண பலத்தால் மயிலாடுதுறை தர்மாதினம் மடத்தில் தனக்குத் தெரிந்த முக்கிய நபர் ஒருவரை கையில் வைத்து அப்போதிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் பல லட்சங்கள் கொடுத்து AD பஞ்சாயத்து உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று தன்னுடைய சொந்த மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கே வந்துள்ளார் .
இதற்கு முன்பு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மஞ்சுளா ABDO வாக பணிபுரிந்த போது. கோபால சமுத்திரம் பஞ்சாயத் கிளார்க் பணியில் இருந்த கண்ணன் என்பவர் மூலம் தான் கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் பணம் வசூல் செய்து கொடுத்து வந்தார் என்றும் அந்த நன்றி கடனுக்காக தற்போது ஆணைக்கரைசத்திர பஞ்சாயத்து கிளர்க் கண்ணன் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைகேடு புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் பஞ்சாயத் உதவி இயக்குநர் மஞ்சுளா மீதும் அவருக்கு உதவியாளராக இருக்கும் DBDO செல்ல முத்துக்குமார் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சிக்கு ஆய்வு  என்ற பெயரில் செல்லும்  AD பஞ்சாயத்து  மஞ்சுளாவுக்கு குறைந்தது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஊராட்சி மன்ற தலைவர் தரவேண்டுமாம். அப்படி ஒரு நாளைக்கு மூன்று ஊராட்சிக்கு குறையாமல் ஆயவுக்கு செல்வதாகவும் அப்படி செல்வதால் குறைந்தது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வரை கிடைக்கும் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகளை ஆய்வு செய்யும் போது பல கோடி ரூபாய் இவர்களுக்கு கிடைக்கும்  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
மாவட்ட ஆட்சியாளரிடம் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் ஊழல் முறைகேடு செய்யும் இவர்கள் அனைவர் மீதும் சட்டரீதியாக
ஊரக வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழியை தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அரங்கேற்றி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
பலமுறை மாவட்ட ஆட்சியாளர்கள் துறை ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த போது மக்கள் நலத் திட்டங்களில் எந்த ஊழல் முறைகேடுகள் நடந்தாலும் ஊழல் முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சனை இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்திருந்தார்.
அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு உள்ளார் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் மஞ்சுளா அவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்னும் திடுக்கிடும் பல ஊழல் முறைகேடு சம்பந்தமாக வரும் இதழில் வெளி வர உள்ளது!

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button