Uncategorized

ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள 

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு! 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது இந்த ஊராட்சிகளுக்கு 2024-2025-ம் ஆண்டுக்கு MGNREGS திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) வேலைகளுக்கான வேலை உத்தரவு ஊராட்சி செயலர் பெயரில் வழங்கப்பட்டு VENDOR களை  ஊராட்சி மன்ற தலைவர் நிர்ணயம் செய்ய வேண்டும். என்ற நடைமுறை இருந்து வந்தது தற்பொழுது VENDOR களை நிர்ணயம் செய்ய விடாமல்  வட்டார  வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி) திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருவதாக. ஊராட்சி மன்ற தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாடிப்பட்டி ஒன்றிய கூட்டமைப்பு தலைவரும் நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான கா. சுகுமாரன் கூறுகையில்

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் முறை இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது தற்போது இந்த முறையை மாற்றி  வாடிப்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  தாங்கள் சொல்லும் நபர்களுக்கு 100 நாள் பணிகளை வழங்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும் இது ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு உள்ள அதிகாரத்தில் ஆளுங்கட்சியினர் குறுக்கிட்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது ஆகையால் உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button