எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் தேனி மாவட்ட பொது மக்கள் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை!! கிணற்றில் போட்ட கல் போல் இருப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றில் போட்ட கல் போல் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்!
தேனி மாவட்ட ஆட்சியராக கடந்த 2018 ஆம் ஆண்டு பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக இவர் சென்னை வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார். தேனி மாவட்டத்தின் 15-வது ஆட்சியராக ஆக பதிவியேற்ற பல்லவி பல்தேவ், அந்த மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றார்.
இதையடுத்து பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்லவி பல்தேவ் தற்போது சென்னையில் உள்ள நில நிர்வாகக் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், தமிழக அரசின் நிதித்துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, தற்போது தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 6 மாதம் மட்டுமே பணியில் இருந்தார் அதன்பின்பு முரளிதரன் ஆட்சியாளராக பொறுப்பேற்று சுமார் 20 மாதங்கள் ஆட்சியாளராக பணியில் இருந்துள்ளார். அதன் பின்பு பிப்ரவரி மாதம் சஜிவனா அவர்கள் மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் 1000 க்கான கோரிக்கை மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.ஆனால் இதில் என்ன அதிர்ச்சி தரும் தகவல் என்றால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்த அதே மனுவை தற்போது உள்ள மாவட்ட ஆட்சியாளர் வரை கொடுத்து வருவதாகவும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச் சாட்டை வைக்கின்றனர்.
அதில் ஒன்று மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை.மற்றொன்று 85 வயது முதாட்டி கொடுத்துள்ள கோரிக்கை மனு.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவிலில் கடந்த 50 வருடங்களா உட்பட்ட சர்வே எண் 806 உள்ள கடையில் பூ வியாபாரம் செய்து கடை நடத்தி வந்தார்.
இந்த கடைக்கு அறநிலை துறைக்கு பணம் செலுத்தி ரசீதும் பெற்றுள்ளார்.
எனது கணவர் 2020 ஆம் ஆண்டு உடல்நிலை சரியல்லாமல் இறந்து விட்டார்.
இந்நிலையில் கணவர் கோடாங்கிபட்டியை சேர்ந்த பால்பாண்டி என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் பெற்றதாகவும் உள் வாடகைக்கு விட்டதாகவும், பொய்யான ஆவணங்கள் மூலம் வீரபாண்டி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு உள்வாடகைக்கு விட்டதாக உண்மைக்கு புறம்பாக அதிகாரிகளும் எனது பராமரிப்பில் நடத்தி வந்த பூ கடையை சீல் வைத்து விட்டனர்.
அதில் ஒரு பகுதியை கந்து வட்டி கொடுக்கும் நபர் பால்பாண்டிக்கு சாதகமாக அறநிலையதுறை அதிகாரிகள் பால்பாண்டி கட்டுப்பாட்டில் கடையை விட்டு சென்றனர்.
கடந்த 23 தேதி சீல் வைக்கப்பட்ட கடையை எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றியும், தகவலும் வழங்காமல் சீல் வைக்கப்பட்ட இடத்தை முறையான ஆவணங்கள் அல்லாத கந்து வட்டி கும்பலை சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கே வீரபாண்டி கோவிலின் இந்து அறநிலையை சேர்ந்த அதிகாரிகள் பூட்டப்பட்ட முத்திரையை உடைத்து அவரின் வசமே வழங்கியிருப்பதாகவும் சட்டவிரோதமாக கடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள சமூக விரோதிகளிடமிருந்து வீரபாண்டி கோவில் கணவர் நடத்தி வந்த கடையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கந்து வட்டி கும்பல்கள் 4 பேர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் பூ விற்க்கும் கூடையுடன் வந்து மூதாட்டி புகார் கொடுத்துள்ளார்.
மனிதநேயத்துடன் தேனி மாவட்ட பெண் ஆட்சியாளர் இந்த பெண் மூதாட்டியின் கடைசி கால கனவை நினைவுக்குவாரா என்ற கேள்வியுடன்…..

தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், ‘வீரபாண்டி’ என்னும் ஊரில், வைகை ஆற்றின் கிளை நதியான முல்லையாற்றங்கரை அருகே, அத்தனை சாந்தமாகக் கோயில் கொண்டு வீற்றிருக்கிறாள், அருள்மிகு கௌமாரி அம்மன்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் 50 வருடங்களாக பூ வியாபாரம் செய்து வந்த கடையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையோடு கந்து வட்டி கும்பல் சட்டவிரோதமாக அபகரிப்பு செய்துள்ளதாக பூ கூடையுடன் மனு அளிக்க வந்த 85 வயது முதாட்டி.
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு கொடுப்பதற்கு தரைத் தளத்தில் தனியாக அறை இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து மனு கொடுக்க வேண்டி இருப்பதால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிக்கான முன்னுரிமையில் இலவச வீட்டு மனை பட்டா
உடனடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம்
மாற்றுத்திறனாளிக்கான இலவச வீட்டு மனை பட்டா வலங்கப்பட்டுவிட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் மட்டும் ஏன் பட்டா வழங்க சுணக்கம் காட்டுகிறார்கள் என்றும் இதற்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை முதல்வர் அவர்கள் கவனிக்க வேண்டும்.
அதே போல் வேலைவாய்ப்பில் 4% முன்னுரிமை வழங்கப்பட
வேண்டும்.
2016 சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கான பிரிவில் உழவர் சந்தையில் இடம் ஒதுக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிக்கான குடிசை மாற்று வாரியத்தில் முன்னுரிமை
வழங்கப்பட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி,
சிறப்பு பேரூராட்சி கடையில் முன்னுரிமையில் வழங்க ஆணையிட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில்
போதிய ஆசிரியர்கள், குழந்தைகள் இல்லாத நிலைமையில் உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மாநில நல வாரியம் உறுப்பினர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எத்தனை போராட்டம் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள் வைத்தாலும்
கழுதை கெட்டா குட்டிச் சுவர் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றில் போட்ட கல் போல் இருந்து வந்ததாகவும் இனிமேலாவது புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த மாவட்ட ஆட்சியர் பழைய புகார் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.