ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 30-ஆம் தேதி வரைமட்டுமே செல்லும்!?? சிவி.சண்முகம்!! அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றாததால் எடப்பாடி முக்கிய ஆலோசனை!!
ஜூன் 30 ந்தேதியுடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற தற்காலில அமைப்பு பதவி முடிவுக்கு வருகிறது.
அதற்குள் இந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பிற்கு அங்கீகாரம் பொதுக்குழு வழங்கியிருக்க வேண்டும். வழங்கியிருந்தா 5 வருடம் தகுதி உடையது.
ஆனால் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பிற்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும் ஆனால் அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற வில்லை.
ஆகையால் இன்றைய தேதிக்கு அதிமுக கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை .
No ஒ & இ.ஒ to ADMK.
ஜூலை 11 ந்தேதி கூடும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்யலாம். அதாவுது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொண்டர்களால் முறைப்படி தேர்வு செய்யப்படலாம்.
அதற்கு எந்த தடையுமில்லை. அதற்கு ஓபிஎஸ் ஒப்புதலும் தேவையில்லை.
பொதுக்குழுவைக் கூட்ட நிரந்தர அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் தகுதியானவர். அதனால் தேதியையும் (11-07-2022) அறிவித்திருக்கிறார்.
2190 பொதுக்குழு உறுப்பினர்களின் (கிட்டதட்ட 90%) கோரிக்கையை அவைத்தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கு ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் தேவையில்லை. ஏனெனில் அப்படி ஒரு பதவியே ஜூன் 30 லிருந்து இல்லை என்றாகிறது.
கழகத்தின் பொதுச்செயலாளராக . எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்பது உறுதி என்றும் தொண்டர்கள் விரும்புவதை யாராலும் தடுக்க முடியாத என்றும் சி வி. சண்முகம் கூறியதாக தகவல் வந்துள்தாகவும் .
ஓபிஎஸ் அடுத்த கட்ட நகர்வாக தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் பொறுத்திருந்து பார்ப்போம்.